Published:Updated:

நாகப்பட்டினம்: இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.1 கோடி செலவில் செய்யப்பட்ட 32 அடி அத்தி விநாயகர்!

விஸ்வரூப விநாயகர்

அருகம்புல் மாலை, ஆப்பிள் மாலை, எலுமிச்சம் பழ மாலை, சாக்லேட் மாலை, சாத்துக்குடி மாலை, வெட்டிவேர் மாலை, பத்து ரூபாய் நோட்டுகளாலான மாலை ஆகியவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்: இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.1 கோடி செலவில் செய்யப்பட்ட 32 அடி அத்தி விநாயகர்!

அருகம்புல் மாலை, ஆப்பிள் மாலை, எலுமிச்சம் பழ மாலை, சாக்லேட் மாலை, சாத்துக்குடி மாலை, வெட்டிவேர் மாலை, பத்து ரூபாய் நோட்டுகளாலான மாலை ஆகியவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

Published:Updated:
விஸ்வரூப விநாயகர்

இந்தியாவிலேயே முதல் முறையாக 32 அடியில் அத்தி விநாயகர் நகர்வலம். ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலை!

விஸ்வரூப விநாயகர்
விஸ்வரூப விநாயகர்

நாகப்பட்டினத்தில் கடந்த 35 வருடங்களாக விஸ்வரூப விநாயகர் குழுவினரால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஸ்வரூப விநாயகர் நகர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களும் கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் விநாயகர் சிலை நகர்வலம் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் அரசு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளித்துள்ளதால் நகர்வலம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வருடம் 36 ம் ஆண்டு சிலை நகர்வலம் என்பதால் இம்முறை விஸ்வரூப விநாயகர் குழுவினர் 3500 கன அடி எடையுள்ள அத்தி மரத்தினால் 32 அடி உயரத்தில், 18 அடி அகலத்தில் திருவாரூர் மாவட்டம் ஆண்டிப்பந்தலைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஸ்தபதியார் தலைமையில் 15 நபர்கள் கொண்ட குழுவால் எட்டு மாதங்கள் பணியாற்றி ஒரு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டது. இந்த சிலை செய்வதற்கு மொத்தம் 83 அத்தி மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரங்கள் கும்பகோணம் மற்றும் நாச்சியார் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலைக்கான ரதம் திருச்சியில் இருந்து செய்து வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் 17 லட்சம் ஆகும். இந்த சிலை நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டது.

விஸ்வரூப அத்தி விநாயகர்
விஸ்வரூப அத்தி விநாயகர்

மேலும் இந்த விஸ்வரூப அத்தி விநாயகருக்கு நேற்று அருகம்புல் மாலை, ஆப்பிள் மாலை, எலுமிச்சம் பழ மாலை, சாக்லேட் மாலை, சாத்துக்குடி மாலை, வெட்டிவேர் மாலை, பத்து ரூபாய் நோட்டுகளாலான மாலை ஆகியவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பறை இசை, செண்ட மேளம், இன்னிசை வாத்தியம், மயிலாட்டம், காளியாட்டம், மேஜிக் ஷோ ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் நகர்வலம் நீலாயதாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து (31-08-2022) நேற்று இரவு 8 மணியளவில் தொடங்கி, இன்று (01-09-2022) காலை 9 மணிக்கு நாகூர் சென்றடைந்து பின்னர் இன்று மதியம் 12 மணியளவில் மீண்டும் நீலாயதாட்சியம்மன் ஆலயத்தை அடைந்தது.

இந்த பிரம்மாண்டமான நகர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.