குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

மகிழ்ச்சியில் திளைத்த வாசகர்கள்!

மகரிஷி வாழ்ந்த கூடுவாஞ்சேரியில்...

##~##

சென்னைக்கு அருகில் உள்ள  கூடுவாஞ்சேரியில், அருணாசல மண்டபத்தில், கடந்த 21.4.13 அன்று சக்தி விகடன் வாசகர்களுக்கான மனவளக்கலை இலவச யோகா பயிற்சி நடைபெற்றது. சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் எண்ணற்ற வாசகர்கள் கலந்துகொண்டனர்.

கூடுவாஞ்சேரியின் மனவளக்கலை மையத்தின் நிர்வாகி பிரம்மகுட்டி அம்மாள், அத்தனை ஏற்பாடுகளையும் சிறப்புறச் செய்திருந்தார். இவர், சுதந்திரப் போராட்டத் தில் ஈடுபட்ட செக்கிழுத்த செம்மலின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

''சக்தி விகடன்ல 'வாழ்க வளமுடன்’ தொடரா வந்தப்பவே, படிச்சுப் பார்த்துட்டு, செய்ய ஆரம்பிச்சேன். இன்னிக்கு அதே சக்தி விகடன் மூலமா நடக்கிற பயிற்சியிலயும் கலந்துக்கிட்டிருக்கேன். ரொம்ப சந்தோஷமா நிறைவா இருக்கு'' என்றார் வாசகி மாயவடிவு.

முகாமில், இளைஞர்களும் யுவதிகளும் பெரியவர்களும் என அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மனவளக் கலை அமைப்பின் உறுப்பினர்கள், உற்சாகத்துடன் வாசகர்களுக்குப் பயிற்சியை விளக்கிய விதம் அருமை எனப் பூரிப்புடன் தெரிவித்தனர் வாசகர்கள்.

மகிழ்ச்சியில் திளைத்த வாசகர்கள்!

முகாம் நிறைவில், மனவளக்கலைப் பயிற்சியை முழுமையாகச் செய்வதற்கு விருப்பமும் நேரமும் இருக்கிற வாசகர்களின் பெயர்களைக் கேட்டறிந்து, அவர்களின் பெயர்களைத் துண்டுக் காகிதங்களில்  எழுதிக் குலுக்கிப் போட்டு, ஆறு வாசகர்களைத் தேர்ந்தெடுத்தோம். அதன்படி, சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த பி.கே.ராமசாமி, அவரின் மகள் கார்த்திகா, நந்திவரம் என்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, ராயப்பேட்டை எல்.ராஜேந்திரன், கொளத்தூர் டி.எஸ்.கந்தசாமி, தி.நகர் ஜனார்த்தனன் ஆகிய ஆறுபேருக்கும் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் அல்லது அருகில் உள்ள மனவளக்கலை மையத்தில், முழு அளவிலான பயிற்சியும் இலவசமாக அளிக்கப்படும் எனத் தெரிவித்ததும், மொத்த வாசகர்களும் உற்சாகமாகக் கரவொலி எழுப்பினார்கள்.

உங்களின் ஆரோக்கியமும் உற்சாகமுமே எங்களுக்குச் சந்தோஷம்!

- வி.ராம்ஜி

  படங்கள்: ரா.மூகாம்பிகை