Published:Updated:

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

Vikatan Correspondent
திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!
##~##

ளவில்லா புண்ணியத்தை இம்மைக்கும் மறுமைக்குமாக அள்ளித் தரும் பரவச பயணமே கயிலாய யாத்திரை!

சென்னையில் இருந்து காட்மாண்டு வரை விமானப் பயணம்; பிறகு, அங்கிருந்து திருக்கயிலாயம் சென்று, கயிலையான் பாதம் பணிந்து, மீண்டும் சென்னை திரும்பி வரும் வரையிலான பயணக் கட்டணம், விமானக் கட்டணம், உணவு, உறைவிடம் என இந்த யாத்திரைக்காக ஆகும் மொத்தச் செலவு ஒரு நபருக்குச் சுமார் 1 லட்சம் ரூபாய்.

உங்களுக்கும் உங்களுக்குத் துணையாக மற்றொருவருக்குமாக இரண்டு வாசக நேயர்களுக்கு இந்தச் சிலிர்ப்பான வாய்ப்பைப் பரிசாக அளிக்க விரும்பி, ஸ்ரீ அன்னபூரணி யாத்ரா சர்வீஸுடன் கைகோத்திருக்கிறது உங்கள் சக்தி விகடன்.

நீங்கள் செய்யவேண்டியது என்ன?

ஏற்கெனவே நீங்கள் மேற்கொண்ட ஏதேனும் ஓர் ஆன்மிகப் பயண அனுபவத்தைக் கட்டுரையாக எழுதி அனுப்புங்கள். அந்தப் பயணம் உங்களைச் சிலிர்க்கச் செய்திருக்கலாம்; திகைப்பூட்டும் அனுபவத்தைத் தந்திருக்கலாம்; ஏன்... உங்களை ரசித்துச் சிரிக்கவும் வைத்திருக்கலாம்! தமிழ்நாட்டுக்குள்தான் என்றில்லை; உலகின் எந்த மூலைக்கு நீங்கள் அந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், இந்தப் போட்டியில் பங்குபெறலாம்.

உங்கள் கட்டுரை, முழுநீள வெள்ளைத் தாளில் மூன்று பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். அந்த ஆன்மிக பயணத்தின்போது நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தால், அவற்றையும் இணைத்து அனுப்புங்கள்.

பரிசீலனைக்கு வருபவற்றில் இருந்து மிகச் சிறப்பான கட்டுரை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அது சக்தி விகடனில் பிரசுரிக்கப்படும். அதை எழுதிய வாசகர் தன்னுடன் இன்னொருவரையும் அழைத்துக்கொண்டு கயிலாய யாத்திரை செல்லும் வாய்ப்பைப் பெறுவார். உடல்நிலை அல்லது வேறு காரணங்களால் அந்த வாசகர் பயணம் செல்ல இயலாவிட்டாலும், அவர் பரிந்துரைக்கும் யாரேனும் இருவர், பரமனின் பனிமுடி தரிசனம் செய்து திரும்பலாம்.

யாத்திரைப் பரிசுக்கான அந்த ஒரு கட்டுரை தவிர, இன்னும் சிலவும் தேர்ந்தெடுக்கப்படும். அவை விகடன் டாட்காம் இணைய தளத்தில் பிரசுரமாகி, உலகம் முழுவதிலும் உள்ள ஆன்மிக அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். அந்தக் கட்டுரைகளுக்கும் முத்தான பரிசுகள் காத்திருக்கின்றன.

திருக்கயிலாய யாத்திரை நடைபெறும் காலம்:

ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை 14 நாட்கள்!

* போட்டிக்கான உங்கள் ஆன்மிகப் பயண அனுபவக் கட்டுரை எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31.5.2013

உங்கள் கட்டுரையை அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி விகடன், 'திருக்கயிலாய புண்ணிய யாத்திரை’ 757, அண்ணாசாலை, சென்னை- 600 002
இ-மெயில்: sakthi@vikatan.com

முக்கிய நிபந்தனைகள்:

* இந்த யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

* உங்களிடம் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.

* இதயம், மூட்டு வலி பிரச்னைகளுக்காக அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ள இயலாது.

* பயணத்துக்கு ஏற்ற உடல் நலம் பெற்றவர்தானா என்பதற்கான 'டிரெட்மில்' மருத்துவச் சான்றிதழை, உங்கள் கட்டுரை தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

* வானிலை அல்லது தவிர்க்க இயலாத வேறு காரணங்களால் பயணத் திட்டம் மாறினால், அதற்கு சக்தி விகடன் நிறுவனமோ, அன்னபூரணி யாத்ரா சர்வீஸ் நிறுவனமோ பொறுப்பல்ல.

* சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று, யாத்திரை முடிந்து, மீண்டும் சென்னை விமான நிலையத்துக்குக் கொண்டு வந்து விடுவது வரை யாத்ரா சர்வீஸின் பொறுப்பாகும்.

* ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.