Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

Published:Updated:
கலகல கடைசிப் பக்கம்
##~##

ப்போதுதான் கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. 'யாரு கேட்ட வரமோ, இன்னைக்கு செம மழை! ரொம்பக் குளிர்ச்சியா இருக்கு' என்றார் மாதப்பன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எல்லா வரமுமே குளிர்ச்சி தராது. சிலது வேறு வகையாகவும் இருக்கும், காடப்பனுக்குக் கிடைச்சது மாதிரி!' என்றேன் நான்.

'யார் அந்தக் காடப்பன்?’ என்று கேட்பது போல் அவர் என்னைப் பார்க்க, அந்தக் கதையைச் சொன்னேன்.

'காடப்பனுக்கு வேட்டையாடுறதுதான் பொழுதுபோக்கே! ஒருநாள் நடுக்காட்டுல ஒரு புலிகிட்ட மாட்டிகிட்டான். கையில் இருந்த துப்பாக்கியில குண்டுகள் மொத்தமும் தீர்ந்து போக, உயிர் தப்பிக்க தலைதெறிக்க ஓடினான். புலி அவனை விடுறதா இல்லை. துரத்திக்கிட்டே போச்சு. ஒருகட்டத்துல கல் தடுக்கிக் கீழே விழுந்துட்டான் காடப்பன். புலி, கிட்ட நெருங்கிட்டதால கடவுளைச் சரணடைந்தான். 'கடவுளே! இந்தப் புலி கிட்டேர்ந்து என்னைக் காப்பாத்து!’ன்னு நேரடியா வேண்டியிருக்கலாம். ஆனா அவனோ, 'இந்தப் புலியின் சிந்தனையை உன் பக்கம் திருப்பிக்கோ!’ன்னு புதுவிதமா வேண்டினான். அவன் கேட்ட வரம் கிடைச்சுது.

அவனை அதுவரைக்கும் விளையாட்டா துரத்தி வந்த புலி, காடப்பன் அருகே வந்ததும் அப்படியே நின்னுட்டுது. 'கடவுளே! என்னோட பசியை உணர்ந்து அருமையான இரையை என் முன்னால விழ வச்சிருக்கீங்க. உங்களுக்கு ரொம்ப நன்றி!’ன்னு சொல்லிச்சாம்....''

நான் முடிப்பதற்குள், 'அடப் பாவமே!' என்று உச் கொட்டினார் மாதப்பன்.

''காடப்பன் கதைக்கே இப்படி உச்சுக் கொட்டுறீங்களே... வரத்தோட மதிப்பு தெரியாத வியாபாரி ரத்தன்லால் கேட்ட வரம் பத்திச் சொல்லவா?'' என்று நான் அடுத்ததாகக் கேட்டதும், ஆர்வமாய் தலையாட்டினார் மாதப்பன்.

கலகல கடைசிப் பக்கம்

'ரத்தன்லால் கோடீஸ்வரர். பெரிய வியாபாரி. நல்ல குணவான். அவர் இறந்ததும் சொர்க்கத்துக்குப் போனார். 'சொர்க்கத்துக்கு வெறும் கையோட எப்படிப் போறது? அங்கே செலவுக்குக் கொஞ்சம் பணமும் எடுத்துக்கிட்டு போகலாமே?’னு யோசிச்சார். 'சொர்க்கத்துல என்ன கரன்சி உபயோகத்தில் இருக்குமோ, தெரியலையே...’ன்னு திகைச்சவர், 'பேசாம தங்கத்தைக் கொண்டு போயிடலாம்’னு முடிவுக்கு வந்தாரு. உடனே, 'நான் சொர்க்கத்துக்கு வரும் போது, நான் ஆசைப்பட்ட பொருளை ஒரு கோணிப்பை நிறைய எடுத்துக்கிட்டு வர அனுமதி தரணும்’னு கடவுள்கிட்ட வேண்ட, அவரும் ஒரு நிபந்தனையோடு வரத்தைத் தந்தார்.

'கொண்டு வருகிற பொருள் சொர்க்கத்தில் எங்கே இல்லையோ அங்கேதான் கீழே இறக்கி வைக்கமுடியும். அதுவரை சுமந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்!’ என்பதுதான் நிபந்தனை.

ரத்தன்லால் ஒரு கோணிப்பை நிறைய தங்கக் கட்டிகளால் நிரப்பி, அதைத் தூக்கமுடியாம தூக்கிக்கொண்டு சொர்க்கத்துக்குப் போனாரு. அங்கே, அவருக்கு முன்னாடி சொர்க்கத்துக்கு வந்த எல்லோருமே ரொம்பவும் சந்தோஷமா இருந்தாங்க. அவர்களில் ஒருத்தர் ரத்தன்லாலைப் பார்த்து, 'என்ன மூட்டை இது? உள்ளே என்ன வெச்சிருக்கீங்க?’ன்னு கேட்டாரு. ரத்தன்லாலும் தன்னோட கோணிப்பையில தங்கக் கட்டிகள் இருப்பதை எடுத்துக் காண்பிச்சார். 'அட! இதையா சுமந்துக்கிட்டு வந்தீங்க? இங்க பாருங்க... சொர்க்கத்தோட தரையில் தங்கத்தைதானே பதிச்சிருக்காங்க? இனி பதிக்கப் புதுசா இங்கே இடமும் இல்லையே!’ன்னாரு அவரு.

அப்புறம் என்ன... சொர்க்கவாசிகள் எல்லாரும் ஃப்ரீயா சந்தோஷமா நடமாடிட்டு இருக்க, பாவம்... நம்ம ரத்தன்லால் மட்டும் சொர்க்கத்துக்குப் போயும் ஒரு தண்டனை மாதிரி தங்கத்தைச் சுமந்துக்கிட்டே திரிஞ்சாரு!' என்று நான் சொல்ல, 'ஆஹா! ஒருவேளை, கடவுளே நம்மைத் தேடி வந்து வரம் தர்றதா சொன்னாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சுதான் வரம் கேட்கணும்போல!'' என்று தெளிவாய்ச் சொன்னார் மாதப்பன்.