Published:Updated:

திருமணத்தடை நீக்கும் வேலன்!

திருமணத்தடை நீக்கும் வேலன்!

திருமணத்தடை நீக்கும் வேலன்!

திருமணத்தடை நீக்கும் வேலன்!

Published:Updated:
திருமணத்தடை நீக்கும் வேலன்!

சென்னையின் புறநகர் பகுதியான வானகரம் மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோயில். இங்கே அருளும் முருகப்பெருமான் விக்கிரகத்தில் இயற்கையாகவே மச்சம் அமைந்திருப்பதால், அந்தப் பகுதி மக்கள் இவரை 'மச்சக்கார முருகன்’ என்றே அழைக்கிறார்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு பரிகாரம் செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திர தினங்களில் மச்சக்கார முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று நடைபெறும் உச்சிக்கால மகா அபிஷேகத்துக்குப் பிறகு, ஸ்வாமியின் மடியில் இருந்து வேல் எடுத்து வந்து, பேசுவதற்குச் சிரமப்படும் குழந்தைகளுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்கிறார்கள். இதில் கலந்துகொண்டால், பேசுவதற்குச் சிரமப்படும் குழந்தைகள் விரைவில் பேசத் தொடங்கிவிடுவார்கள் என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

இந்தக் கோயிலில் அருள்புரியும் சொர்ண ஆகர்ஷண பைரவர் மிகவும் விசேஷமானவர். பைரவியுடன் அருளும் இவரது கையிலுள்ள கும்பத்தில் மகாலட்சுமியின் திருவுருவத்தைக் காண முடிகிறது. அஷ்டமி திதி நாட்களில் உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை செய்கிறார்கள். இதில் கலந்துகொண்டு வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

- சிவகுரு, சென்னை.

யோக ஆஞ்சநேயர்!

சென்னை, புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயர் கோயில். இங்கே யோக நிஷ்டையில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்கிறார் ஆஞ்சநேயர். இவர் த்ரிநேத்ரம் சடையுடன் சிவ அம்சமாகவும், நாகர் குடை பிடிக்க சக்தி அம்சமாகவும், சங்கு- சக்கரம் தரித்து விஷ்ணு அம்சமாகவும், நவக்கிரகங்களை தன்னுள் அடக்கி நவக்கிரக ஆஞ்சநேயராகவும் வீற்றிருக்கிறார். அதனாலேயே இவர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.

திருமணத்தடை நீக்கும் வேலன்!

நவக்கிரக தோஷம், மாந்திரீக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், அந்தத் தோஷம் விரைவில் நீங்கும் என்கிறார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே யோக ஆஞ்சநேயருக்குப் பாலபிஷேகம் செய்து, பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

இந்தக் கோயிலில் வேம்பு மரத்தின் அடியில் ஸ்ரீபவானி அம்மன் வீற்றிருக்கிறாள். ஆடி மாதம் இந்த அம்மனுக்கு நடைபெறும் கூழ் வார்க்கும் விழா மிகவும் விசேஷம்!

கூடுவாஞ்சேரி மின்வாரிய பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் யோக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

- பார்வதி மோகன், ஊரப்பாக்கம்

திருமணத்தடை நீக்கும் வேலன்!

ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்

மூக பஞ்ச சதியில் உள்ள... ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது.

ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

கருத்து: காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையானது தனம், வித்யை, அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாகத் தருகிறது.

திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே..! பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எதைத்தான் கொடுக்காது?

பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.

செல்வம், வித்யை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.

- தெ.ராஜேஸ்வரி, சென்னை- 4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism