Published:Updated:

திருவிளக்கு பூஜை - 114

திருவிளக்கு பூஜை - 114
திருவிளக்கு பூஜை - 114
##~##

சென்னை பெசன்ட்நகர் ஸ்ரீவரஸித்தி விநாயகர் கோயிலில், கடந்த 21.5.13 செவ்வாய்க்கிழமை அன்று, சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை இனிதே நடைபெற்றது. சக்தி விகடனின் 113-வது திருவிளக்கு பூஜை இது!

தாம்பரம், திருவொற்றியூர், நங்கநல்லூர், பூந்தமல்லி, புரசைவாக்கம் என சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான வாசகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.

''இது, நான் கலந்துக்கற நாலாவது விளக்கு பூஜை. பையனுக்குக் கல்யாணமாயிருச்சு. அவனுடைய வியாபாரம் சிறப்பா நடக்கணும். அவனுக்குச் சீக்கிரமே குழந்தை பிறக்கணும். இதான் என் பிரார்த்தனை!'' என்று சொல்லும் வாசகி நாகரத்தினம், விருதுநகரில் இருந்து வந்திருந்தார்.

''என் மகனுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகுது. அவன் பரிபூரணமா குணமாகணும். எங்க குடும்பம் நிம்மதியும் சந்தோஷமுமா இருக்கணும்'' என்கிற பிரார்த்தனையுடன் வந்திருந்தார் மூலக்கடை வாசகி ஜீவிதா.

''எங்களுக்கே எங்களுக்குன்னு சொந்தமா ஒரு வீடு வாங்கணும்கிறது எங்களோட நெடுநாளைய கனவு. அது நிறைவேறணுங்கறதுதான் என் பிரார்த்தனை!'' என்று அயனாவரம் வாசகி, அமிர்தவல்லி தெரிவித்தார்.

''உலகம் சந்தோஷமா இருக்கணும். இந்த முறை மழை நல்லா பெஞ்சு, காடு- கரையெல்லாம் நிறையணும்'' என்று அம்பத்தூர் வாசகி ஜானகி உலக க்ஷேமத்துக்கான தன் வேண்டுதலைத் தெரிவித்தார்.

எல்லாரின் வேண்டுதலையும் ஈடேற்றித் தருவார் அந்த ஈசன் மைந்தன்.

- கட்டுரை, படங்கள்: ரா.மூகாம்பிகை

அடுத்த கட்டுரைக்கு