Published:Updated:

‘எளிமையான பயிற்சி... அருமையான முயற்சி!’

ஓசூர் முகாமில் வாசகர்கள் பாராட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

வாசகர்களின் மனத்துக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்து, மனதளவில் அவர்கள் நிம்மதியுடனும் அமைதியாகவும் வாழ, சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து மனவளக்கலை இலவச யோகா பயிற்சி முகாமை ஒவ்வொரு ஊரிலும் நடத்தி வருகிறது.

கடந்த 19.5.13 அன்று ஓசூரில், தளி ரோட்டில் அமைந்துள்ள அறிவுத்திருக்கோயிலில், மனவளக்கலைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஓசூரில் உள்ள அறிவுத்திருக்கோயில் அன்பர்கள், சுவாமி வேதாத்திரி மகரிஷி குறித்தும், அவர் வகுத்துத் தந்திருக்கும் மனவளக் கலைப் பயிற்சி குறித்தும் எடுத்துரைத்தார்கள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சக்தி விகடனில் வெளியாகி வந்த மகரிஷியின் கருத்துக்களும் பயிற்சி முறைகளும் எளிமையாகச் சொல்லப்பட்டதாகத் தெரிவித்த வாசகர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடனும், இந்த மனவளக் கலைப் பயிற்சியை முழுமையாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற உற்சாகத்துடனும் இந்தப் பயிற்சி முகாமுக்கு வந்து கலந்துகொண்டதாகச் சொன்னபோது மனத்துக்கு நிறைவாக இருந்தது.

''காலை துவங்கி மதியம் வரை நடந்த இந்தப் பயிற்சி, அடுத்தடுத்த காலங்களிலும் பயிற்சியைச் செய்யவேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்திருக்கிறது. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன்'' என்று தெரிவித்த வாசகர் பெங்களூருவில் இருந்து வந்திருந்தார்.

‘எளிமையான பயிற்சி... அருமையான முயற்சி!’

ஒவ்வொரு பயிற்சிக்கு இடையேயும் அந்தப் பயிற்சி குறித்து ஒருவர் செய்முறையாகச் செய்து காண்பித்து விளக்க... இன்னொரு பேராசிரியர், இந்தப் பயிற்சியைச் செய்வதால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைத் தெளிவாக விளக்கிச் சொன்னபடி இருந்தார்.

''எனக்கு ரொம்ப நாளா மூட்டு வலி இருந்துச்சு. பக்கத்துல இருந்த நண்பர்கள் எல்லாம், 'மனவளக்கலைப் பயிற்சியை எடுத்துக்கோ’ன்னு சொல்லி அட்வைஸ் பண்ணினாங்க. இப்ப சக்தி விகடன் நடத்தும் முகாம்னு பார்த்ததும் இதுல கலந்துக்கணும்னு ரொம்பவே உறுதியா இருந்தேன். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செஞ்சா, மூட்டுவலியெல்லாம் காணாமப் போயிடும்னு நம்பறேன்'' என்றார் வாசகர் மாதேஸ்வரன். இவர் சேலத்தில் இருந்து வந்திருந்தார்.

முகாம் நிறைவில்... வாசகர்கள் பலரும் மேடையேறி, தங்கள் பயிற்சி அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார்கள். ஒருபக்கம் பக்தியைப் பரப்ப விளக்குபூஜை யும், இன்னொரு பக்கம் மனத்தையும் உடலையும் செம்மைப்படுத்த யோகா பயிற்சி முகாமும் நடத்தும் சக்தி விகடனுக்கு நன்றி என்று பூரிப்புடன் தெரிவித்தார்கள். குறிப்பாக, ''அருமையான இந்தப் பயிற்சியை, பெருமுயற்சி எடுத்து எங்களுக்கு வழங்கும் சக்தி விகடனைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!'' என்று வாசகர் முருகேஸ்வரன் சொன்னபோது, அவர் குரல் நன்றியுணர்ச்சியால் தழுதழுத்தது.

வாழ்க வளமுடன்! வாழ்க இவ்வையகம்!  

- வி.ராம்ஜி

படங்கள்: க.தனசேகரன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு