Published:Updated:

'எளிமையான, இனிமையான பயிற்சி!'

பழநி முகாமில் வாசகி பரவசம்

##~##

வேதாத்திரி மகரிஷி அவதரித்த கூடுவாஞ்சேரியில் துவங்கிய மனவளக்கலை இலவச யோகா பயிற்சி முகாம், சென்னை, ஓசூரை அடுத்து, முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் கடந்த 2.6.13 அன்று நடைபெற்றது.

பழநி மேலரத வீதியில் உள்ள பழநி மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் அறிவுத் திருக்கோயிலில் உள்ள அன்பர்கள், பயிற்சி குறித்த எளிமையான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

''மனசுக்கு இதமான இந்தப் பயிற்சி இவ்வளவு எளிமையா இருக்கும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. ரொம்ப நாள் ஆசை இப்பத்தான் நிறைவேறியிருக்கு. இனி, தொடர்ந்து பயிற்சி வகுப்புல சேர்ந்து, முறைப்படி கத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!'' என்று ஆர்வத்துடன் தெரிவித்தார் வாசகி தமிழ்ச்செல்வி.

''சக்தி விகடனோட தீவிர வாசகன் நான். கடந்த இரண்டு வருஷமா 'வாழ்க வளமுடன்’ தொடரைப் படிச்சுட்டு வந்தேன். மனவளக் கலைப் பயிற்சி முகாம்ல கலந்துக்கணும்னு ஆசை. ஆனா, பயிற்சியில ஈடுபடுறது மட்டும் வெவ்வேறு காரணங்களால தள்ளிப் போயிக்கிட்டே இருந்துச்சு. இப்பத்தான் நேரம் கூடி வந்திருக்கு. இங்கே என் அனுபவத்தில், பயிற்சியாளர்களும் சரி, பயிற்சியும் சரி... ரொம்ப எளிமையா, ரொம்ப இதமா மனசுல இடம் பிடிக்கிற மாதிரி இருந்ததைச் சொல்லியே ஆகணும்'' என்றார் வாசகர் பாலமுருகன்.

'எளிமையான, இனிமையான பயிற்சி!'

''ரொம்ப வருஷமா மூட்டு வலியால அவதிப்பட்டுட்டிருக்கேன். எல்லாரும் மனவளக்கலை யோகா பயிற்சியை எடுத்துக்கிட்டா சரியாப் போயிடும்னு சொன்னாங்க. சக்தி விகடன்ல வர்ற தொடரைப் படிச்சிட்டு இருந்ததுதான் ஆறுதல். இப்ப, எங்க ஊர்ல யோகா பயிற்சி முகாம்னு தெரிஞ்சதும் கலந்துக்கறதுன்னு முடிவு பண்ணி, வந்துட்டேன். கொஞ்சம் சிரமமா இருக்குமோன்னு முதல்ல பயந்தேன். ஆனா இத்தனை எளிமையான, இனிமையான பயிற்சியை இதுவரை செஞ்சதே இல்லீங்க!'' என்று நெகிழ்ந்து சொன்னார் பத்மாவதி.

வாழ்க வளமுடன்!

- வி.ராம்ஜி

படங்கள்: வீ.சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு