Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

Published:Updated:
##~##
உதவலாம்... வாருங்கள்!

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம்... வாருங்கள்!

'சரவணபவ எனும் ஒரு மந்திரம்...’ என்று துவங்கும் பாடல் முழுமையாக எனக்குத் தேவைப்படுகிறது. மேலும், அதை எழுதியது யார் என்கிற விவரம் அறியவும் ஆவல். தகவல் தெரிந்தவர்கள் உதவுங்களேன்!

- வ.வத்சலா, திருவாரூர்

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

திருக்கயிலாய மலையைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இந்தத் தகவல்களுடன், திருக்கயிலாய மலையின் அரிய புகைப்படங்கள் அடங்கிய புத்தகமும் எனக்குத் தேவைப்படுகிறது. நான் எதிர்பார்க்கும் தகவல்கள், புகைப்படங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்டு இருக்கிறார்கள்? தகவல் தாருங்களேன், வாசகர்களே!

- பிரேமா ராமராஜ், கோவை

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

நாங்கள் தெலுங்கு பேசும் ராஜு பிரிவைச் சேர்ந்தவர்கள். எங்களின் குலதெய்வம் ஸ்ரீஅக்கம்மாதல்லி. எங்கள் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அத்திக்குளத்தில் எங்களின் குலதெய்வக் கோயில் இருப்பதாக அறிகிறோம். இந்தக் கோயில் எங்கே இருக்கிறது? எங்களுக்கும் பூர்வீக ஊருக்குமான தொடர்பு தற்போது விடுபட்டுப் போய் இருப்பதால், வாசகர்களாகிய உங்களின் உதவியை நாடுகிறேன். எனக்கு உதவுவீர்களா?

- எச்.விஸ்வஸ்ரீ, சென்னை-99

உதவலாம்... வாருங்கள்!

திருச்செந்தூர் முருகனின் புகழ்பாடும் 'திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்’ ஸ்லோகங்கள் கொண்ட புத்தகத்தைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். இந்தப் புத்தகம் தமிழ் உரைநடையில் பாடல்களாக வந்திருப்பதாக அறிகிறேன். சென்னையில் இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?

- எஸ்.பாலசந்திரன், சென்னை-61

உதவலாம்... வாருங்கள்!

திருஞானசம்பந்தர் இயற்றிய மழைக்கான ஸ்லோகம் எனக்குத் தேவைப்படுகிறது. உங்களில் யாரிடமேனும் அந்த ஸ்லோகம் இருந்தால் எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

- மல்லிகா, புதுச்சேரி

உதவலாம்... வாருங்கள்!

'சிவலோக நாதனைக் கண்டு சேவித்து... என்று தொடங்கும் பாடல் எனக்குத் தேவைப்படுகிறது’ என்று, 30.4.13 இதழில் சென்னை வாசகி ஜி.ராஜலட்சுமி கேட்டிருந்தார்.

'வாசகி ஜி.ராஜலட்சுமி கேட்ட பாடலை எழுதியவர் கோபாலகிருஷ்ண பாரதியார். இந்தப் பாடல் 'நந்தனார்’ எனும் பழைய திரைப்படத்தில் எம்.எம்.தண்டபாணி தேசிகரால் பாடப்பட்டு வெளிவந்துள்ளது...' என்று தெரிவித்துள்ள சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி, அந்தப் பாடலை

உதவலாம்... வாருங்கள்!

நகல் எடுத்து அனுப்பி இருக்கிறார். அதன் பிரதி, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'எங்கள் குலதெய்வமான பட்டுக்காரி அம்மன் கோயில் எங்கே அமைந்துள்ளது?’ என்று, 16.4.13 இதழில் சான்றோர்குப்பம் வாசகர் சு.வேலாயுதம் கேட்டிருந்தார்.

'திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை அருகில் உள்ள உய்யக்கொண்டான்கரையில், அல்லித்துறை கிராமத்துக்குப் பக்கத்தில் பட்டுக்காரி அம்மனுக்குக் கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சோமரசன்பேட்டை அல்லது வயலூர் செல்லும் பேருந்தில் ஏறி, சோமரசன்பேட்டையில் இறங்கிக்கொள்ள வேண்டும். அங்கிருந்து சிறிது தொலைவு பயணித்தால், பட்டுக்காரி அம்மன் கோயிலை அடையலாம்...' என்று பெருவளநல்லூர் வாசகி ஆர்.மீனாட்சி தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீவாராஹி அம்மனை வழிபட ஆசைப்படுகிறேன். அந்த அம்மனை எப்படி வழிபடுவது?’ என்று 30.4.13 இதழில் சென்னை வாசகர் ரிஷிகேஷ் கேட்டிருந்தார்.

'சென்னை சோழிங்கநல்லூரில் பிரத்தியங்கராதேவி ஆலயம் உள்ளது. இங்கே காவல் தெய்வமாக அருள்கிறாள் ஸ்ரீவாராஹி. இங்கே, முதல் ஆராதனை இவளுக்குத்தான்! இக்கோயில் சுவாமிகளிடம் சாமுண்டி, பத்ரகாளி, வாராஹி ஆகிய மூன்று அம்மன்களும் உள்ள திருவுருவப் படத்தை வாங்கி, அவர் சொல்லும் ஸ்லோகம், பூஜை முறைகளைப் பின்பற்றி, வாராஹி அம்மனை வழிபடலாம். இந்த அம்மனின் விக்கிரகத்தை வைத்து பூஜித்தால், தினமும் நைவேத்யம், நியமநிஷ்டை தேவைப்படும்...' என்று பொன்னேரி வாசகி சு.கௌரிதரன் தெரிவித்துள்ளார்.

உதவலாம்... வாருங்கள்!

'திருவள்ளுர் பஞ்சமுக ஆஞ்சநேயர், சென்னை சேலையூர் பஞ்சமுக ஆஞ்சநேயர், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க ஆசைப்படுகிறேன். யாரேனும் வழிகாட்ட முடியுமா?’ என்று, 11.6.13 இதழில் மேட்டூர் அணை வாசகர் பி.பழனியப்பன் கேட்டிருந்தார்.

'சேலத்தில் இருந்து தாம்பரம் வந்து, சி51, 5ஏ, ஏ51, எம்21, 51ஹெச் ஆகிய பேருந்துகளில் ஏதேனும் ஒன்றில் ஏறி, 2 கி.மீ. தொலைவில் உள்ள சேலையூர் வந்து, அங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். பிறகு, மறுபடியும் அதே பேருந்துகளில் ஏதேனும் ஒன்றில் ஏறி, சென்ட்ரல் ரயில் நிலையம் வரவேண்டும். அங்கிருந்து திருவள்ளுர் செல்லும் புறநகர் மின்சார ரயிலில் திருவள்ளுர் சென்று, அங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். தொடர்ந்து, மறுபடியும் சென்ட்ரல் ரயில் நிலையம் அல்லது பீச் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறி பழவந்தாங்கல் வந்துசேர வேண்டும். இங்கிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ நங்கநல்லூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலை சென்றடையலாம். தரிசனம் முடிந்ததும் மறுபடியும் பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து தாம்பரம் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயிலில் ஏறி தாம்பரம் சென்று, அங்கிருந்து சேலத்துக்கு பஸ்ஸில் புறப்பட்டுச் செல்லலாம். அதிகாலையிலேயே சென்னைக்கு வந்துவிட்டால் இந்த மூன்று கோயில் களையும் எளிதில் தரிசித்துச் செல்லலாம். கூடவே நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீகுருவாயூரப்பன் கோயில்களையும் தரிசித்துச் செல்லலாம்...' என்று, பொன்னேரி வாசகி சு.நவீனா தாமு தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism