சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்திவரும் மனவளக்கலை இலவச யோகா பயிற்சி முகாம், கடந்த 16.6.13 அன்று சேலத்தில் நடைபெற்றது. சக்தி விகடன் வழங்கும் 5-வது பயிற்சி முகாம் இது!

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள அறிவுத் திருக்கோயிலில் நடந்த முகாமில், அன்றைய தினம் காலையில் இருந்தே ஆர்வத்துடன் வரத் துவங்கிவிட்டார்கள், வாசகர்கள். தருமபுரி, நாமக்கல், ராசிபுரம், சேலம் எனப் பல ஊர்களில் இருந்தும் வாசகர்கள் வந்து கலந்துகொண்டனர்.

''ரொம்பவே மனக்குழப்பத்துல இருக்கேன். குடும்பச் சூழ்நிலை அப்படி. இந்தப் பயிற்சியை எடுத்துக்கிட்டா, மனசும் உடம்பும் நல்லா இருக்கும்னு சக்தி விகடன்ல தொடர்ந்து படிச்சுக்கிட்டே இருந்தேன். இப்பதான் பயிற்சியில் கலந்துக்கறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரொம்ப எளிமையா இருக்கு பயிற்சி'' என்று நெக்குருகிச் சொல்கிறார் வாசகி வரலட்சுமி.

''மனவளக்கலைப் பயிற்சி பத்தியும், அதனோட எளிமை பத்தியும், பயிற்சி தரக்கூடிய பலன்களைப் பத்தியும் நண்பர்கள் நிறையப் பேர் சொல்லியிருக்காங்க. சக்தி விகடன் மூலமா அந்த வாய்ப்பு இப்பக் கிடைச்சிருக்கு. ரொம்ப நிறைவா இருந்துச்சு. உடம்பே தக்கையாகிட்டா மாதிரி ஓர் உணர்வு!'' என்று பூரிப்புடன் சொன்னார் வாசகர் வெங்கடசுப்ரமணியம்.

''என் அம்மா ஒரு டாக்டர். அவங்க 15 நாள் பயிற்சிக்குப் போயிட்டு வந்து, 'ரொம்ப நல்லாருக்கு, மனவளக்கலைப் பயிற்சி’ன்னு சொன்னாங்க. 'உன்னைக் கூட்டிட்டுப் போகாம முடியாம போயிருச்சே...’னு ரொம்பவே வருத்தப்பட்டாங்க. இப்ப பயிற்சி முகாம் பத்தி அறிவிப்பு பார்த்ததும், உடனே கலந்துக்கச் சொல்லி வலியுறுத்தினாங்க. இந்தப் பயிற்சி ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமான பயிற்சி. இதைத் தொடர்ந்து கத்துக்கிட்டு, பயிற்சியை முழுசாச் செய்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்'' என்றார் வாசகி அபர்ணா.

''என் சித்தி பொண்ணு மூட்டு வலியால அவதிப்பட்டுக்கிட்டே இருந்தா. 'மனவளக்கலைப் பயிற்சி செஞ்சதுல, இப்ப வலி இல்லவே இல்லை. நீயும் சேர் அக்கா’ன்னு சொன்னா. அதான் இந்தப் பயிற்சில கலந்துக்கிட்டேன். மத்த பயிற்சி மாதிரி இல்லாம, இதை ஈஸியா புரிஞ்சுக்க முடியுது. செய்யறதுக்கும் சுலபமா இருக்கு'' என்றார் வாசகி மஞ்சுளா.

பயிற்சியும் முயற்சியும் இன்னும் செம்மைப்படுத்தட்டும், உங்கள் வாழ்க்கையை!

- வி.ராம்ஜி

படங்கள்: எம்.விஜயகுமார்