Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

##~##
உதவலாம்... வாருங்கள்!

உச்சிஷ்ட கணபதியின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபட விரும்புகிறேன். அந்தப் படம் எங்கே கிடைக்கும்? உச்சிஷ்ட கணபதியை எவ்வாறு வழிபடுவது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 - ஆர்.மாரிமுத்து, திருப்பூர்

உதவலாம்... வாருங்கள்!

சக்தி வழிபாடு, சக்தி உபாசனை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வழிபாடு பற்றிய புத்தகம் இருப்பின், அதை வாசகர்கள் எனக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

- க.டில்லிபாபு, ஆரணி

உதவலாம்... வாருங்கள்!

கேரள மாநிலம் கொல்லத்தில் உமா மகேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது என்றும், இங்கே வந்து சுயம்வர அர்ச்சனை செய்தால், திருமணம் தள்ளிப்போகிறவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்றும் கேள்விப்பட்டேன். எனக்கு இதுபற்றிய முழுமையான விவரம் தேவை.

- கே.ராமசுவாமி, மதுரை

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இயற்றிய நவக்கிரக கீர்த்தனைகள் சி.டி-யாகக் கிடைக்கிறதா? கிடைக்கிறது என்றால், எங்கே வாங்கலாம்?

- சிவ.கனகசபை, தஞ்சாவூர்

உதவலாம்... வாருங்கள்!

விகசை ஆகமம் என்று சமீபத்தில்தான் அறிந்தேன். இந்த ஆகமம் 25 வகையான சங்குகளைப் பற்றிக் கூறுவதாகவும், அதில் 16 வகை சங்குகள் சிவபெருமானுக்கு உரியவை என்றும் அறிகிறேன். விகசை ஆகமம் எங்கே கிடைக்கும்? அது குறிப்பிடும் 25 வகையான சங்குகள் என்னென்ன? அது, சிவனுக்கு உரியவையாகக் குறிப்பிடும் சங்குகள் எவை? விவரம் தெரிந்த வாசகர்கள் எழுதியனுப்ப வேண்டுகிறேன்.

- எம்.லெட்சுமணப்பெருமாள், திருச்சி-2

உதவலாம்... வாருங்கள்!

'ஞானப் பொக்கிஷம்’ பகுதியில் பி.என்.பரசுராமன் எழுதிய மகோற்சவ விளக்கம் புத்தகம் பற்றிய தகவல் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. அந்தப் புத்தகம் உங்களில் யாரிடமேனும் இருந்தால், அதன் நகல் பிரதியை எனக்கு அனுப்பிவைக்க முடியுமா?

- ஆர்.ஹரிராம் பிரசாத், சென்னை-82

உதவலாம்... வாருங்கள்!

நான் கும்பகோணத்தை அடுத்த திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் புகழ்பெற்ற ஞானிகள் பலர் பிறந்திருக்கிறார்கள். பெரிய யாகங்கள் நடத்தப்பட்டுள்ளன. பல பெரியவர்கள் பலவிதமான துறைகளில் நிபுணத்துவம் பெற்றுத் திகழ்ந்திருக்கிறார்கள். இதுபற்றி இப்போது ஊரில் விசாரித்தால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இளைய தலைமுறையினருக்கு எங்கள் ஊரின் பெருமையைத் தெரியப்படுத்தும்விதமாக கையேடு ஒன்று தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். எங்கள் ஊரைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மகான்கள் பற்றியும் தகவல் தெரிந்தவர்கள் எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.

- எஸ்.கல்யாணசுந்தரம், சென்னை-94

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

'எங்கள் ஊரில் சிவன் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இங்கே தெய்வீக மூலிகைச் செடிகள், நாகலிங்கம், வில்வம், திருவோடு முதலிய மரக்கன்றுகளை வளர்க்க ஆசைப்படுகிறோம். இவற்றை எங்கே வாங்கலாம்?’ என்று, 11.6.13 இதழில் ஆனந்தகுடி வாசகர் எம்.பிச்சைபிள்ளை கேட்டிருந்தார்.

'நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருவேற்காட்டில் 1-ஏ, சரபோஜி அக்ரஹாரத்தில் இயங்கி வரும் எஸ்.எஸ்.டி. சிவா நர்சரி கார்டனில் அனைத்துவிதமான மூலிகைச் செடிகள், நவக்கிரக பரிகார விருட்சங்கள், பூச்செடிகள், மரக்கன்றுகள் கிடைக்கின்றன' என்று சென்னை வாசகர் ஆர்.கே.நடராஜன் தெரிவித்துள்ளார்.

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

'திருச்செந்தூர் முருகனின் புகழ்பாடும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் ஸ்லோகங்கள் கொண்ட புத்தகம் எங்கே கிடைக்கும்?’ என்று, 9.7.13 இதழில் சென்னை வாசகர் எஸ்.பாலசந்திரன் கேட்டிருந்தார்.

'பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையுடன் கூடிய புத்தகம், 'கௌரா ஏஜென்சீஸ், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5’ என்கிற முகவரியில் கிடைக்கும்'' என்று நாமக்கல் வாசகர் ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

உதவலாம்... வாருங்கள்!

'வசிஷ்ட மகரிஷி பற்றியும், அவர் இறை மூர்த்தம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலங்கள் பற்றியும் யாரேனும் எனக்குத் தெரிவிக்க முடியுமா?’ என்று, 11.6.13 இதழில் திருச்செங்கோடு வாசகர் ஏ.கே.நஞ்சுண்டேஸ்வரன் கேட்டிருந்தார்.

'தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் ஸ்ரீபெரியநாயகி சமேத வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. கருணாசாமி கோயில் என்றும் இதை அழைக்கிறார்கள். கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அருகில் அருந்ததியும் வசிஷ்டரும் உள்ளனர்.  தை மாதம் வரும் பூசம் நட்சத்திரம் அன்று இரவில் இங்கு பெரியநாயகி சமேத வசிஷ்டேஸ்வரருக்கும், அருந்ததி சமேத வசிஷ்டருக்கும் திருக்கல்யாண உத்ஸவம் நடத்துகிறார்கள். இங்கே செயல்படும் வசிஷ்டர் குழுவினரால் இது நடத்தப்படுகிறது. இதேபோல், தஞ்சை மாவட்டம் திட்டையிலும் ஸ்ரீஉலகநாயகி சமேத ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கே குரு பகவானுக்குத் தனிச் சந்நிதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது' என்று, சென்னை வாசகர் ஏ.லெட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

'சரவணபவ எனும் ஒரு மந்திரம்... என்று துவங்கும் பாடலை இயற்றியது யார்? அந்தப் பாடலை முழுமையாக எழுதி யாரேனும் அனுப்புவீர்களா?’ என்று, 9.7.13 இதழில் திருவாரூர் வாசகி வ.வத்சலா கேட்டிருந்தார்.

'சரவணபவ என்று துவங்கும் இந்த பாடலை இயற்றியவர் பாபநாசம் சிவன்...' என்று தெரிவித்துள்ள திருச்சி வாசகி சரோஜா சுதர்சனம்ராம், அந்த பாடலை முழுமையாக எழுதி அனுப்பியுள்ளார். சண்முகப்ரியா ராகத்திலும், ஆதி தாளத்திலும் அமைந்த அந்தப் பாடல் :

பல்லவி

சரவணபவ எனும் திருமந்திரம்  தனை
சதா ஜபி என் நாவே  ஓம் (சரவண)

அனுபல்லவி

புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து
                                  (சரவண)

சரணம்

மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு (உ)மிழும்
சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன (சரவண)

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.