Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

Published:Updated:
##~##

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும்  பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். 

உதவலாம்... வாருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம்... வாருங்கள்!

துர்கை சித்தர் எழுதிய உபாசனை வழிகாட்டி எனும் புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. அதோடு, அவர் எழுதிய பிற புத்தகங்களையும் படிக்க ஆசைப்படுகிறேன். தவிர, ஸ்ரீமத் ஜெய வீரகுரு தேவா என்ற பெயரில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் எழுதிய புத்தகங்களும் எனக்கு வேண்டும். உங்களுக்கு இந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரியும் எனில், எனக்கு எழுதி அனுப்ப வேண்டுகிறேன். உங்களிடம் மேற்படி புத்தகங்கள் இருந்து, அவற்றை அனுப்பிவைத்தாலும் மகிழ்வேன்.

- நா.ரெங்கப் பிரசாத், சிறுகமணி

உதவலாம்... வாருங்கள்!

எங்களது பூர்வீகம் கடலூர் சுத்துக்குளம். எங்கள் குலதெய்வத்தின் பெயர் இருசார் என்று எங்கள் அம்மா சொன்னதாக ஞாபகம்.  எங்களது பூர்வீக கிராமத்தில் குலதெய்வம் என்று, ஒரு மாமரத்தின் அடியில் 21 பிள்ளையார்களை மண்ணில் பிடித்துவைத்து, சைவ முறையில் வழிபட்டுள்ளோம். ஆனால், இந்த தெய்வம் ஆணா, பெண்ணா என்பது எங்களுக்குத் தெரியாது. தற்போது இந்தக் கோயில் இல்லை. சமீபத்தில் ஒரு வேனில் 'இருசாயி அம்மன் துணை’ என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். அதன்பிறகுதான் ஒரு சந்தேகம் என்னுள் எழுந்தது. இருசார் என்பதும், இருசாயி  அம்மன் என்பதும் ஒன்றுதானா? அல்லது, வெவ்வேறு தெய்வங்களா? விவரம் தெரிந்தவர்கள் தகவல் தந்து உதவுவீர்களா?

- ந.செல்வமணி, சென்னை-75

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

'பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே பள்ளிகொண்டாய் ரங்கநாதா...’ என்று துவங்கி, மகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களின் சிறப்புகளையும் எடுத்துக்கூறும் பாடல் எனக்கு வேண்டும். இதை, கைவசம் வைத்துள்ள வாசகர்கள் அதன் நகல் பிரதியை எனக்கு அனுப்பிவைப்பார்களா?

- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம்

உதவலாம்... வாருங்கள்!

தமிழில் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களை சேகரித்து வருகிறேன். அந்த வகையில், சிதம்பர முனிவர் இயற்றிய முருகன் க்ஷேத்திர கோவை பிள்ளைத்தமிழ் மற்றும் காந்திமதி அம்மன் பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் எனக்குத் தேவை. உங்களிடம் இந்த நூல்கள் இருக்கும்பட்சத்தில், அதன் நகல் பிரதியை எனக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

- வா.சு.ராதாகிருஷ்ணன், சென்னை-41

உதவலாம்... வாருங்கள்!

'நான் திருச்சி லால்குடியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படித்தபோது, அங்கே பாடப்பட்ட உலகத்தின் முதல்வன் நீ... என்று துவங்கும் பாடல் முழுவதுமாக எனக்குத் தேவை. வாசகர்கள் அனுப்புவார்களா?’ என்று, சென்னை வாசகி எம்.ராஜலக்ஷ்மி கேட்டிருந்தார்.

உதவலாம்... வாருங்கள்!

மேற்படி வாசகி கேட்ட பாடலை சென்னை வாசகி மாலதி சந்தானம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தப் பாடல்:

உலகத்தின் முதல்வன் நீ
ஓரெழுத்தே அகரம்போல்
பல கலைகள் பயின்றாலும்
பயனுண்டோ உனை மறந்தால் (உலகத்தின்)

மலர் விரும்பும் பெருமாளே
மாக்ஷிமையே உனை நினைத்தால்
விலகு மன்றோ எத்துயரும்
வேண்டுதல் வேண்டாமை இலாய் (உலகத்தின்)

தனக்கு வமை இல்லாத
தனி யறமே தண்ணளியே
இனிக் கவலைப் பிறப்புண்டோ
இறையே நின்தாள் வாழி! (உலகத்தின்)

'எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அக்கம்மாதல்லிக்கு கோயில் எங்கே இருக்கிறது? அந்தக் கோயிலுக்கு எந்த வழித்தடத்தில் செல்வது?’ என்று, 9.7.13 இதழில் சென்னை வாசகி எச்.விஸ்வஸ்ரீ கேட்டிருந்தார்.

'விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் அத்திகுளம் எனும் ஊரில் ஸ்ரீ அக்கம்மாதல்லி அம்மனுக்குக் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊருக்குச் செல்ல மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. அதாவது, மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வந்து, அங்கிருந்து திருச்சுழி, நரிக்குடி, நாலூர் வழியாக உழுத்திமடை என்ற கிராமத்துக்கு வரவேண்டும். இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்டதுதான் அத்திகுளம். உழுத்திமடையில் இருந்து 3 கி.மீ. தொலைவு பயணித்தால் அத்திகுளத்தை சென்றடையலாம். இந்த ஊரில் சாப்பாடு, தங்கும் வசதி கிடையாது. நாமே அவற்றை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இந்த வழித்தடம் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை வந்து, கட்டனூர் வழியாக அத்திகுளம் வரலாம். மதுரை-திருப்புவனம்-கட்டனூர் வழியாகவும் அத்திகுளம் வரலாம். ஆனாலும், புதிதாக வருபவர்களுக்கு மதுரை-அருப்புக்கோட்டை வழியே சிறந்தது' என்று விருதுநகர் வாசகி கீதா சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

இதே தகவலை பகிர்ந்துகொண்டுள்ள மதுரை வாசகர் டி.நவநீதகிருஷ்ணன், 'ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி அன்று ஸ்ரீ அக்கமாதல்லி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

'கும்பகோணத்தை அடுத்துள்ள திப்பிராஜபுரம் எனது சொந்த ஊர். இந்த ஊரில் வாழ்ந்த பிரபலங்கள் பற்றிய தகவல்கள் எனக்குத் தேவை’ என்று, 6.8.13 இதழில் சென்னை வாசகர் எஸ்.கல்யாணசுந்தரம் கேட்டிருந்தார்.

சென்னை வாசகர் எஸ்.ராமஸ்வாமி, திப்பிராஜ புரம் வாசகர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், திப்பிராஜபுரத்தில் வாழ்ந்த பிரபலங்களாக தங்களுக்குத் தெரிந்த சிலர் பற்றி எழுதி அனுப்பி யிருக்கிறார்கள். இது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.