Published:Updated:

‘முதுகு வலிக்கு விடுதலை!’

நெல்லை முகாமில் வாசகர் மலர்ச்சி

##~##

ற்றாத ஜீவநதி எனப் போற்றப்படும் தாமிரபரணி பாய்ந்தோடுகிற திருநெல்வேலியில், பேட்டை எனும் பகுதியில், சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தும் மனவளக்கலை யோகா இலவசப் பயிற்சி முகாம், கடந்த 18.8.13 அன்று நடைபெற்றது.

காலை 10 மணிக்குத் துவங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கயத்தாறு, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் எனப் பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த வாசகர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தினமும் ஆழ்வார்திருநகரிலேருந்து திருநெல்வேலிக்கு மோட்டார் சைக்கிள்ல வேலைக்கு வந்துட்டிருக்கேன். இதனால முதுகுல வலி பின்னியெடுக்குது. எத்தனை மருந்து தடவினாலும், மாத்திரை சாப்பிட்டாலும் கேக்கலை. அப்பதான், சக்திவிகடன்ல மனவளக்கலைப் பயிற்சி பத்தி வந்த தொடரைப் படிச்சேன். நம்பிக்கையூட்டும் விதமா இருந்துச்சு. இப்ப, அந்தப் பயிற்சியிலயும் கலந்துகிட்டதில் முதுகுக்கு மட்டுமில்லாம மொத்த உடம்புக்குமே ரிலாக்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வாசகர் சேகர்.

‘முதுகு வலிக்கு விடுதலை!’

''இங்கே திருநெல்வேலி மாவட்டத்துல நிறையப் பெண்கள் வீட்டில் இருந்துக்கிட்டே பீடி சுத்துவோம். அப்படித்தான் நானும் பீடி சுத்திச் சம்பாதிச்சிட்டிருக்கேன். கால் மடக்கி உக்கார்ந்துட்டே வேலை பாக்கறதால, ஒரு கட்டத்துல கால்களுக்குப் போற ரத்தம் நின்னு, அந்த இடமே மரத்துப் போயிடுது. எந்திரிக்கப் பத்து நிமிஷம் சிரமப்படணும். எந்திரிச்சு மறுபடியும் உக்காரணும்னா, அதுக்குள்ளே வலியையும் வேதனையையும் சந்திச்சாகணும். ஒருநாள், என் பொண்ணோட டீச்சர், மனவளக்கலைப் பயிற்சி செய்யுங்க, பலன் இருக்கும்னு சொன்னாங்க. இந்தப் பயிற்சி நடக்கறது பத்தியும் அவங்கதான் சொன்னாங்க. உடனே வந்து கலந்துக்கிட்டேன். காலைலேருந்து இந்தப் பயிற்சி செஞ்சதுல, கால்கள் ரெண்டும் வலி இல்லாம, பாரமில்லாம லேசாயிட்ட மாதிரி இருக்குது'' என்று நெகிழ்ந்தபடி சொன்னார், முக்கூடல் வாசகி முத்துமாலை.

''சென்னைல என் மருமகள் மனவளக்கலை பேராசிரியரா இருக்காங்க. அவங்க சொல்லித்தான் இந்தப் பயிற்சில கலந்துக்கிட்டேன். உடம்பே புதுசா மாறிட்டது போல இருக்குங்க...'' என்று சொன்னார், கங்கைகொண்டான் வாசகி காந்திமதி அம்மாள்.

மாறிக்கொண்டே இருக்கும் உலகில், உடலில் நம் ஆரோக்கியம் கூடிக்கொண்டே இருக்கட்டும்.

- வி.ராம்ஜி, படங்கள்: எல்.ராஜேந்திரன்