வெயில் நகரம் என்று பெயரெடுத்த வேலூர் நகரில், சங்கரன்பாளையம் அறிவுத்திருக்கோயிலில், கடந்த 1.9.13 அன்று மனவளக்கலை யோகா இலவசப் பயிற்சி முகாம் நடைபெற்றது. சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தும் யோகா பயிற்சி முகாம் இது!

வேலூரில் நடைபெற்ற முகாமில், ஆற்காடு, ஆரணி, வாலாஜாபாத், குடியாத்தம், வாணியம்பாடி என பல ஊர்களில் இருந்தும் வாசகர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள்.

''மனசுல எப்பவும் எதுக்கு எடுத்தாலும் பயந்துட்டே இருக்கறவன் நான். ஒரு சின்ன விஷயம், சாதாரணக் கேள்வின்னு எல்லாத்துக்குமே பயந்து நடுங்குவேன். சக்தி விகடன்ல 'வாழ்க வளமுடன்’ படிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமா அதிலேருந்து மீண்டு வந்தேன். ஏற்கெனவே வேலூர்ல முகாம் நடந்தப்ப கலந்துக்க முடியலை. இப்ப கலந்துக்கிட்டேன். மனசுக்கு தெம்பாவும் தைரியமாவும் இருக்கு'' என்று வெளிப்படையாகப் பேசினார் குடியாத்தம் வாசகர் கருணாகரன்.

''எனக்கு கொஞ்சம் கோபம் ஜாஸ்தி வரும். யாரையாவது கோபப்பட்டு சுள்ளுன்னு பேசிடுவேன். அப்புறம் அடுத்த பத்தாவது நிமிஷம்... 'அய்யய்யோ, இப்படி காயப்படுத்திட்டோமே'னு நானே அழுவேன். என் கணவர்லேருந்து எல்லாருமே, 'மனவளக்கலைப் பயிற்சி எடுத்துக்கோ’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இப்ப, இந்தப் பயிற்சியைச் செஞ்சு முடிக்கும்போது, ஒரு நிதானமும் அமைதியும் கிடைக்கறதை உணர்ந்தேன். தொடர்ந்து இந்தப் பயிற்சியைக் கத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் ஆரணி வாசகி ரேணுகாதேவி.

''பரபரப்பான இந்தக் காலகட்டத்துல, மனசையும் உடம்பையும் தெளிவாவும் திடமாவும் வைச்சுக்கறதுக்கு யோகா மாதிரியான பயிற்சி நிச்சயம் தேவை. என் நண்பர்கள் எல்லாரும் மனவளக்கலைப் பயிற்சியைத்தான் கத்துக்கச் சொல்லிச் சொன்னாங்க. சக்தி விகடன் வாசகரான நான், பயிற்சியில சேர்ந்து மூணு மாசமாச்சு. இப்ப சக்தி விகடனுக்கும் உலக சமுதாய சேவா சங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கிறதுக்காகவே முகாம்ல கலந்துக்கிட்டேன்'' என்று ஆர்வத்துடன் தெரிவித்தார் வேலூர் வாசகர் ராமலிங்கம்.

முகாமில், வாசகர்களுக்கு சிறப்புறப் பயிற்சி அளித்த பேராசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர், வாசகர்கள். அதேபோல், சக்தி விகடன் வாசகர்களும் சட்டென்று புரிந்துகொண்டு பயிற்சி செய்தார்கள் என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

ஆர்வம் இருந்தால், எதையும் கற்றுக் கொள்வது எளிது!

- வி.ராம்ஜி, படங்கள்: ச.வெங்கடேசன்