Published:Updated:

வைத்தீஸ்வரன் கோவில் : செவ்வாய் பரிகாரத்தலத்தில் ஜப்பானியர்கள் 40 பேர் ருத்ரயாகம் செய்து வழிபாடு!

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் ஜப்பான் நாட்டினர்

சீர்காழி அருகே புகழ்பெற்ற செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோவிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 40 பேர் ருத்ர யாகம் செய்து வழிபாடு நடத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உலகப் புகழ்பெற்ற செவ்வாய் ஸ்தலமாக விளங்கக்கூடிய வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
வைத்தீஸ்வரன் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர்
வைத்தீஸ்வரன் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர்

இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கிறார். இக்கோயிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த பால கும்ப குருமணி டக்கா யோகி ஹோஷி தலைமையில் 40 சீடர்கள் ஜப்பான் நாட்டில் இருந்து ஆன்மிகத் தேடல் பயணமாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருகை புரிந்தனர். வைத்தீஸ்வரன் கோவிலில் கற்பக விநாயகர் சுவாமி, அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, தன்வந்திரி, அங்காரகன் ஆகிய சுவாமி சந்நிதிகளில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து தங்க கொடிமரம் முன்பு சிறப்பு ருத்ர யாகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரான பாலகும்ப குருமணி தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாகத் தமிழை நன்கு கற்றறிந்து தனது சீடர்களுக்கும் கற்றுத் தருகிறார். மேலும் தமிழ் மொழி தான் உலகத்திற்கு முதல் ஆதி மொழி என்பதை அறிந்து தமிழ் கலாசாரத்தையும் இந்திய ஆன்மிகத்தையும் விரும்பி சிவன், அகத்தியர், முருகன் ஆகிய சுவாமிகளை வழிபட்டு வருகிறார்.

வைத்தீஸ்வரன் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர்
வைத்தீஸ்வரன் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர்

அதோடு ஜப்பான் நாட்டில் சிவன், அகத்தியர், முருகர் ஆகிய சுவாமிகளுக்கு கோயில் கட்டுவதற்காகத் தற்போது தமிழ்நாட்டு வருகை புரிந்து நவகிரகக் கோயில்களில் சிறப்பு யாகம் செய்து வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் அதன் முதல் கட்டமாக செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோவிலில் இந்த பூஜையைத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பால கும்ப குருமணியின் தமிழ் ஆர்வத்தையும் அவரது ஆன்மிக ஈடுபாட்டையும் கண்டு தருமபுரம் ஆதீனம், 'சிவ ஆதீனம்' என்ற பட்டத்தினை அவருக்கு வழங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.