கர வருட ராசிபலன்கள்
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
உதவலாம் வாருங்கள்!

ங்களின் மூதாதையர் நூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் வசித்தனர். பிறகு, காலப்போக்கில் அங்கிருந்து வெளியேறி, பல ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால், குல தெய்வ வழிபாடு என்பதே இல்லாமல் போய்விட்டது. எங்களின் பெரியப்பா, 'நமக்குக் குலதெய்வம் ஸ்ரீபாப்பாத்தி அம்மன்’ என்று கூறியதாக ஞாபகம். தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், ஸ்ரீபாப்பாத்தி அம்மன் கோயில் உள்ளதா?

- என்.குமாரசாமி, திருப்பத்தூர்

'ஸ்ரீபூத நாத உபாக்யாயனம்’ எனும் நூல், ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் பேரருளையும் அவரை வணங்கி வழிபடும் முறைகளையும் விவரிக்கும் அற்புதமான புத்தகம். இந்த நூல், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தாருங்களேன்.

- சாந்தி வேதநாராயணன், கொச்சின்

##~##
சா
த்வீகமான திருமுகத்துடனும் கருணைப் பார்வையுடனும், ஆனால் ஸ்ரீதுர்கையின் அம்சமாக அம்மன் குடிகொண்டிருக்கிறாள். அந்தக் கோயிலில், ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் சாஸ்தாவுக்கும் சந்நிதிகள் உள்ளன. இதுவே எங்களின் குலதெய்வம் என்றும், கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் இந்தக் கோயில் உள்ளதாகவும் சிலர் தெரிவித்தனர். இந்த ஆலயம் எங்கு உள்ளது எனும் விவரத்தைத் தெரிவித்தால், குலதெய்வ வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும்!

- கே.கீதா, சென்னை-49

உதவலாம் வாருங்கள்!

டந்த பத்து வருடங்களாக மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வருகிறேன். தலைவலியில் இருந்து விடுபட்டு, நிம்மதி அடைவதற்கு ஏதேனும் ஸ்லோகங்கள் உள்ளதா? பரிகாரத் தலங்கள் எங்கே உள்ளன? அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால், பரிகாரங்களைச் செய்து, ஸ்லோகங்களைச் சொல்லி, தலைவலி நரகத்தில் இருந்து விடுதலை பெற்று வாழ்வேன்!

- கே.விசாலாட்சி, பெங்களூரு

ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய 'ஸ்ரீசௌந்தர்ய லஹரி’க்கு 'கோபால ஸுந்தரி’ என்று ஓர் உரை உண்டு. அதில், தேவியின் துதியை விஷ்ணுவின் துதியாகப் போற்றி, விஷ்ணுவாகவே பாவித்து உரை எழுதப்பட்டிருந்தது. இந்த வடமொழி நூல், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வந்துள்ளதா? எங்கு கிடைக்கும்?

- ஏ.எஸ்.பத்மநாபன், சென்னை-10

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'இனிய இல்லறம் மற்றும் நிம்மதியான வாழ்க்கை அமைவதற்குச் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் என்ன?’ என்று சென்னை வாசகி டி.சீதாலட்சுமி கேட்டிருந்தார்.

''வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றி, 'தாயே, ஒளிவிளக்கே! மாங்கல்யப் பிச்சை, மடிப்பிச்சை தாருமம்மா; சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா’ எனும் பாடலைப் பாடி, மனமுருகப் பிரார்த்திக்கலாம். அத்துடன், வீட்டில் துளசிச் செடி வைத்து, தினமும் அதற்குக் குங்குமமிட்டு, விளக்கேற்றி வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும், நல்ல, அன்பான கணவரும் வாய்க்கப் பெற்று, நிம்மதியாக வாழலாம்'' என்று மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

உதவலாம் வாருங்கள்!

'குடும்பத்தில் பிரச்னைகள்; குழப்பங்கள். இவற்றில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக வாழ  ஸ்லோகங்கள் ஏதும் உள்ளதா’ என, பெங்களூரு வாசகர் மணிபரமேஸ்வரன் கேட்டிருந்தார்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் (தி லிட்டில் ஃபிளவர் கம்பெனி, தி.நகர், சென்னை-17), ஸ்ரீசுந்தர காண்டம் (கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17) படித்தால், குழப்பங்கள் தீரும்; நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும் என்று சென்னை வாசகர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

'என் வீட்டில் இரண்டு பெரிய வில்வ மரங்கள் உள்ளன; அதன் இலைகள் மற்றும் மிகப் பெரிய காய்-கனிகளை என்ன செய்வது என்று சென்னை வாசகர் பி.வைத்தியநாதன் கேட்டிருந்தார்.

சிவாலயங்களுக்குச் செல்லும்போது, வில்வ இலைகளைப் பறித்துச் சென்று, ஸ்வாமிக்குத் தரலாம்; அல்லது, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரி போன்ற முக்கிய நாட்களில், வில்வ இலைகளைப் பறித்து  கோயிலில் சேர்க்கச் செய்யலாம். இவை இரண்டுமே புண்ணியம் சேர்க்கும்.

அடுத்து, மிகப் பெரிய அளவில் கிடைக் கும் காய்-கனிகள், வில்வாதி லேகியம் தயாரிக்கப் பெரிதும் உதவும். சென்னை, திருவான்மியூர், கிருஷ்ணமூர்த்தி சாலையில் இயங்கிவரும், இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டகசாலை (இம்ப்காப்ஸ்)யில், காய்-கனிகள் மற்றும் வில்வ இலைகளைக் காட்டி, முறைப்படி சப்ளை செய்யும் ஆர்டரைப் பெறலாம் என்று திருச்சி வாசகர் மீ.ஞான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வில்வம்பழத்தை உரிய முறையில் ஜூஸாக்கிச் சாப்பிட, மலச்சிக்கல், பித்தம், படபடப்பு, அஜீரணம் ஆகியன குணமாகும் என திருவள்ளூர் வாசகர் கு.துரைசாமி தெரிவித்துள்ளார்.

உதவலாம் வாருங்கள்!