சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

##~##
ங்களின் இளவயது மாப்பிள்ளைக்குக் கடந்த ஒரு வருடமாக, தோலின் நிறம் மாறி வெண்மையாக உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அவரின் தோல் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை. இதற்குப் பரிகாரம் ஏதும் உள்ளதா? ஸ்லோகம் இருப்பினும் தெரிவியுங்கள்.  

- பி.சரஸ்வதி, ஸ்ரீரங்கம்

'கலா கர்ஷணம்’ என்பதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள  மிகவும் ஆவலாக உள்ளேன். இதனை எத்தனை வருடத்துக்குள் செய்துகொள்ள வேண்டும்? அல்லது, இதுகுறித்து விளக்கமாக நூல்கள் ஏதும் வெளிவந்துள்ளனவா? தகவல் தந்து உதவுங்களேன்!

- ஆர்.பத்மநாபன், பாப்பாரப்பட்டி

ன் மாமனாரின் பூர்வீகம் வேலூர். நாங்கள் வடமாள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த இரண்டு தலைமுறையாகவே, எங்களுக்கு குலதெய்வம் எது என்றே தெரியவில்லை; குலதெய்வ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளைச் செய்ய இயலவில்லை. இதனால், எங்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள்; சிக்கல்கள். இவற்றில் இருந்து விடுபட, எங்களின் குலதெய்வம் எது என்று அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால், எங்கள் குடும்பம் சிறக்கும்; செழிக்கும். உதவுங்களேன்!

- சுந்தரி நடராஜன், சென்னை-17

த்தாலியில் வாழ்ந்து வந்தாலும், என் தம்பியும் அவனுடைய மனைவியும் சைவச் சித்தாந்தம் மற்றும் இறை வழிபாட்டில் தீவிரமாக இருப்பவர்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக முதுகு வலியால் (நரம்புக் கோளாறு) மிகவும் அவதிப்பட்டு வருகிறான் என் தம்பி. இதனால், அவன் மனைவி தினமும் வேதனைப்பட்டே, தூக்கமின்றித் தவிக்கிறாள். அவர்களுக்காக நாங்கள் ஏதேனும் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்யத் தயாராக உள்ளோம். இதற்கான பரிகார ஸ்தலம் அல்லது ஸ்லோகங்கள் இருப்பின் தெரிவியுங்கள்.

- மணி பரமேஸ்வரன், பெங்களூரு

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மாநாட்டுச் சொற்பொழிவுகள் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிட்டது. அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? அல்லது, எவரிடமேனும் இருந்தால், பிரதி எடுத்துத் தந்து அனுப்பி உதவுங்கள்.

- பா.ஸ்ரீராமகிருஷ்ணன், கரிவலம்வந்தநல்லூர்

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'அன்பான கணவன், இனிய இல்லறம் அமைய என்ன ஸ்லோகம் சொல்லிப் பிரார்த்திக்க வேண்டும்’ என்று, சென்னை வாசகி டி.சீதாலட்சுமி கேட்டிருந்தார்.

தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேற, திருஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறையில் இருந்து (திருமருகல் திருத்தலப் பாடல்), 'சடையாய் எனுமால் சரண்நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால்...’ எனத் துவங்கும் பாடலைப் பாடி, சிவனைத் தொழலாம். திருநெடுங்களம் தலத்தில் பாடிய, 'மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே...’ எனத் துவங்கும் பாடலைப் பாராயணம் செய்யவும். அதேபோல், 'மண்ணில் நல்ல

வண்ணம் வாழலாம்’ எனத் துவங்கும் பதிகத்தையும் பாடுவது நன்மை தரும். பிறகு விளக்கு ஏற்றியதும், 'சோதியே சுடரே சூழொளி விளக்கே!’ எனத் துவங்கும் திருவாசகப் பாடலைப் பாடினாலும் சகல சௌக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்று, ஸ்ரீரங்கம் வாசகர் மீ.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

'போகர் பன்னீராயிரம்’ எனும் நூல் எங்கு கிடைக்கும்?’ என்று மேல்பட்டணம் வாசகர் ஆர்.தண்டபாணி கேட்டிருந்தார்.

போகர் பன்னீராயிரம் எனும் நூல், பழைமையானது; கிடைப்பதும் அரிது. சென்னை கன்னிமாரா நூலகத்தில் இந்த நூல் உள்ளது. அங்கேயுள்ள முக்கியப் பொறுப்பாளர்களிடம் சம்மதம் பெற்று, அந்த நூலைப் பிரதி எடுத்து (ஜெராக்ஸ்) வரலாம் என்று, திருச்சி வாசகர் ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

டன் மற்றும் தீராத நோயிலிருந்து மீள பரிகாரத் தலம் ஏதும் உள்ளதா?'' என்று மைசூர் வாசகர் ராஜேஷ் கேட்டிருந்தார்.

ஸ்ரீவசிஷ்ட மகரிஷி அருளிய ’ஸ்ரீதாரித்ரிய தஹந சிவ ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து, திருச்சேறை ஸ்ரீசாரபரமேஸ்வரர் கோயிலுக்கு வந்து, சிவனாருக்கு அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டால், விரைவில் நலன் பெறலாம்; கடன் முழுவதையும் அடைத்து விடலாம். மேலும், திருவாரூர் ஸ்ரீதியாகேசர்கோயிலில் அருளும் ஸ்ரீருணவிமோசன லிங்கத் திருமேனியை வழிபட... நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ள திருப்பூர் வாசகர் டி.சுவாமிநாதன், தூத்துக்குடி வாசகர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அந்த ஸ்லோகம் மற்றும் விவரங்களையும் அனுப்பியுள்ளனர்.

கடன் தீர்ப்பாய் கவலைகள் தீர்ப்பாய்
உடனிருப்பாய் உடல்நோய் தீர்ப்பாய்
உயர்ந்தவை காட்டி உகந்தவை தருவாய்
தாயும் சேயும் தரணியில் சிறக்க
கருவினைக் காத்து காலத்தில் சேர்ப்பாய்
ஆரூர் ருணவிமோசனரே போற்றி!

எனும் ஸ்லோகத்தைப் பாடி வணங்கினால், கடன் தொல்லை தீரும். 'வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே’ எனத் துவங்கும் ஞானசம்பந்தரின் பாடலைப் பாடினால்... பொய் வழக்குகளில் இருந்து மீளலாம். அதேபோல், 'உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் ந்ருசிம்மம் பீஷ்ணம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம்யஹம்’ எனும் ஸ்லோகத்தைப் பாடி, ஸ்ரீநரசிம்மரை வழிபட, பயம் விலகும்; ஆபத்தை வெல்லலாம் என்று, பெரகம்பி வாசகர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.  

'சிம்ஹ முகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய வரதாங்கித கருணா மூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷணம்
துரித நிவாரணம் பாபசாப விமோசனம்

எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை சனிக்கிழமை, ஏகாதசி, அமாவாசை ஆகிய நாட்களில், அல்லது தொடர்ந்து 48 நாட்கள் பானக நைவேத்தியம் செய்து வழிபட்டால், அனைத்துத் துன்பங்களும் நீங்கும் என்று, சென்னை வாசகி பிரேமா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.