சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

'அருளோசை'

'அருளோசை தரும் சக்திக்கு அளவே இல்லை!'

நெகிழ்ந்து உருகும் வாசகர்கள்

'அருளோசை'
##~##
ழுத்தாளர் பாலகுமாரனில் துவங்கி, பாரதி பாஸ்கர் வரையிலான 'அருளோசை’ பயணத்தில், இன்றுவரை ஒரு நாளும் தவறவிடாமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிற அன்பர்கள் பலர். அவர்களில், சென்னை அம்பத்தூர் வாசகர் வெங்கடேஸ்வரனைத் தொடர்புகொண்டு பேசியதும், மனிதர் நெகிழ்ந்தேவிட்டார்.

''ஆவடி டிஃபன்ஸ்ல (சி.வி.ஆர்.டி.இ) வேலை செய்யறேன். சக்தி விகடனின் முதல் இதழ் துவங்கி, இதோ... எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணம் வரை தொடர்ந்து வாங்கிக்கிட்டிருக்கேன். அதுமட்டுமில்ல... அத்தனை சக்தி விகடன் புத்தகங்களையும் பத்திரப்படுத்திக்கிட்டே வரேன்.

இப்ப, சக்தி விகடனோட 'அருளோசை’யை ஒருநாளும் மிஸ் பண்ணாம கேட்டுக்கிட்டிருக்கேன். ஒரு நாளை எப்படியெல்லாம் நல்லவிதமா பயன்படுத்தலாம்னு எழுத்தாளர் பாலகுமாரன் சொல்லிக் கொடுத்தார்.  நாகைமுகுந்தனும், அனந்தபத்மநாபாச்சார்யரும் சொன்ன கருத்துகள் மனசுல அப்படியே பதிஞ்சிருச்சி. தமிழருவி மணியனோட ஒவ்வொரு வார்த்தைகள்லேயும் மனிதநேயமும் கருணையும் கலந்திருந்தது. அம்மாவைப் பத்தி பாரதி பாஸ்கர் சொன்னதைக் கேட்டு என் கண்கள் கலங்கிடுச்சு. ஆக, ஒவ்வொரு நாளிலும் சக்தி விகடன் வழங்கும் அருளோசை, எனக்கு  அம்மா மாதிரி அன்பையும், அப்பா மாதிரி நல்ல கருத்துக்களையும், நண்பனைப் போல நம்பிக்கையையும் தருது; எனர்ஜியும் கூடுது!

பத்திரிகை உலகில் இது புது முயற்சி. ஒவ்வொரு நாளும் நம்பிக்கையை நம் நெஞ்சில் விதைக்கிற நல்ல முயற்சி!'' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிற வெங்கடேஸ்வரனுக்கு வயது 58.  

''காலைல கண்விழிச்சதுமே, நான் பண்ற முதல் காரியம்... அருளோசை கேக்கறதுதான்! பிரபலமானவங்க சொல்ற அந்தக் கருத்துக்களைக் கேட்காம ஒருநாள்கூட இருந்ததில்லை. அவ்வளவு ஏன்... சில நேரம், ஒருநாளைக்கு ரெண்டு மூணு தடவைகூட கேட்டிருக்கேன்'' என்று சிலிர்த்துச் சொல்லும் வெங்கடேஷ், 33 வயதே ஆன இளைஞர். இவர் வசிப்பது, சேலம் மாவட்டம் சின்ன சேலத்தில்!

''வேதாத்திரி மகரிஷி ஐயாவோட மனவளக் கலைப் பயிற்சியில கலந்துக்கிட்டவன் நான்.

சின்னசேலத்துல சின்னதா டீக்கடை வைச்சிருக் கேன். காலைல மூணு மணிக்குக் கடையைத் திறந்து, ராத்திரி 11 மணி வரைக்கும் கடையில நின்னுட்டு, அக்கடான்னு தூங்கி வழிஞ்சுட்டிருந்த என்னை மாத்தினது சக்தி விகடனும் அருளோசையும்தான்!

'வாழ்க வளமுடன்’ தொடரின் அறிவிப் பைப் பாத்துட்டு, சக்தி விகடன் வாங்க ஆரம்பிச்சவன், இப்ப சக்தி விகடனோட தீவிர வாசகனாயிட்டேன்.

வேலை நேரத்துலயும் வீட்லயும் எப்படி இருக்கணும்னு பாலகுமாரன், அம்பிகை வழிபாட்டைச் சொன்ன சண்முக சிவாச்சார்யர், கடவுளோட அருள் கிடைக் கிறதுக்கான வழிகளைக் காட்டிய அனந்த பத்மநாபாச்சார்யர், அக்கம்பக்க மனிதர்கள் மேல காட்டக்கூடிய அன்பை விவரிச்ச தமிழருவி மணியன், சின்னச் சின்னக் கதைகள் சொல்லி, மனசை நல்வழிப்படுத்தற பாரதி பாஸ்கரோட வார்த்தைகள்...

இதையெல்லாம் அதிகாலைல கேக்கும்போது, உடம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி! புதுசா பிறந்தாப் போல ஒரு பரவசம். 'எது வந்தாலும் சரி... எது போனாலும் சரி... நமக்கு ஒருகுறையும் இருக்காது’ங்கற ஒரு தைரியம்; தன்னம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் கொடுத்த சக்தி விகடனுக்கு நன்றியை நாள் பூரா சொல்லிக்கிட்டே இருக்கலாம்!’ - தழுதழுத்த குரலில் சொல்கிறார் வெங்கடேஷ்.

- செ.கார்த்திகேயன்
படங்கள்: ரா.மோகன்

'அருளோசை'