சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

மனவளக் கலை யோகா

உடற்பயிற்சி செய்முறை முகாம்

மனவளக் கலை யோகா
##~##
வா
ழ்வது முக்கியம்; அதிலும், வளமுடன் வாழ்வது மிக மிக அவசியம். இன்றைய உலகம், அதிவேகமாக இயங்கி வருகிறது. சீக்கிரமே அனைத்தும் கிடைத்துவிடவேண்டும்; இலக்கை அடைந்துவிடவேண்டும் எனும் பரபரப்பு, மனிதர்களுக்குள்!

பரபரப்பாகச் செயல்படுவதில் தப்பில்லை; ஆனால், அந்தப் பரபரப்பே அடுத்தடுத்த சிக்கல்களுக்குள் நம்மை சிக்கவைத்து விடுமானால், பிறகெப்படி வளமுடன் வாழ்வது?

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அதற்கு தெளிந்த நீரோடையாக, மனத்தை வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பீரோவில் துணி அடுக்குவது போல், துக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மனதுள் அடுக்கிக்கொண்டே வருகிறோமே?!

சொல்லப் போனால், எதற்குக் கவலைப்பட வேண்டும் என்கிற வரையறையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 'இந்த ஸ்கூல்லதான் எல்.கே.ஜி.ல குழந்தையைச் சேர்க்கணும்னு நினைச்சோம், ஆனா கிடைக்கலை’ என்று துவங்கி, 'நல்ல நாள்ல சர்ருபுர்ருன்னு பஸ் போவான். ஆனா நாம பஸ் ஸ்டாப்புல நிக்கும்போது மட்டும், அரை மணி நேரமா வரமாட்டான்’ என்பது வரை, வீண் கவலை; தேவையற்ற டென்ஷன்; அதீத எதிர்பார்ப்பு என்று கடிகார முட்களையும் கடந்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மனிதக் கூட்டம்! விளைவு... மன உளைச்சல், மன அழுத்தம், மனோபயம் என தவித்து மருகுகின்றனர் மக்கள்!

மனவளக் கலை யோகா

  டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன்..! மாணவர்கள், காவல் அதிகாரிகள், சிறுமிகள், குடும்பத் தலைவிகள், தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என வயதுப் பாகுபாடின்றி, அத்தனை பேருக்கும் டென்ஷன், டென்ஷன், டென்ஷன்!

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

என்கிறது பழந்தமிழ்ப் பாடல் ஒன்று! ஆக, மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது எத்தனை சத்தியமான வார்த்தை!

ஆனால், வாழ்க்கை எனும் ரயிலில் பயணிப்பதற்கு, மனம் - உடல் எனும் இரண்டு தண்டவாளங்கள் தேவையாயிற்றே!

மனம் சீராக இருந்தால்தான் உடலும் சீராக இருக்கும். உள்ளமும் உடம்பும் சீராக இருக்கும்போதுதான், நமது வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும்; வாழ்க்கையை இனிப்பாக்கிக் கொள்ள முடியும்.

அதற்கு முதலில் நம்மிடம் உள்ள மன அழுத்தங்களை அகற்றி லேசாக்கிக் கொள்வதோடு, உடம்பையும் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மனதை வலுப்படுத்தவும் திடப்படுத்தவும் 'மனவளக் கலைப் பயிற்சி!’ உடலுக்குத் தெம்பூட்டவும் பலம் தரவும் யோகா போன்ற உடற்பயிற்சிகள்!  

சக்தி விகடனில்... வேதாத்திரி மகரிஷியின் 'வாழ்க வளமுடன்’ தொடர் வந்துகொண்டிருப் பதை அறிவீர்கள். தற்போது, சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக 'மனவளக் கலை யோகா மற்றும் உடற்பயிற்சி முகாம்’ நடத்தவுள்ளது.

எங்கே என்கிறீர்களா?

முதல் முகாம்... தலைநகர் சென்னையில் தான்!

மனவளக் கலை யோகா