தொழில் நகரமான திருப்பூரில், சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தும் மனவளக் கலை இலவச யோகா பயிற்சி முகாம், கடந்த 15.9.13 அன்று நடைபெற்றது. திருப்பூர் மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் வாசகர்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.

''நான் டெம்போ டிரைவராகப் பணியாற்றுகிறேன். வண்டி ஓட்டுவதுடன் அவ்வப் போது லோடு ஏற்றுவதும், இறக்குவதுமாக கடினமான வேலைதான். ஒரு கட்டத்தில் கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. அதனால் மிகவும் உடல் வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளானேன்.

இந்த நிலையில்தான் சக்தி விகடனில் இந்த யோகா பயிற்சி முகாம் அறிவிப்பைக் கண்டேன். இங்கு வந்து முகாமில் கலந்துகொண்ட பிறகு, உடம்பே லேசானதாக உணர முடிந்தது. மனத்தில் அப்படியரு தெளிவு! மனவளக் கலையை முழுமையாக கற்க முடிவு செய்துவிட்டேன்'' என்கிறார் சுல்தான்பேட்டை வாசகர் துரைராஜ்.

''நான், ஒரு நிறுவனத்தில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்க்கிறேன். சீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து, பல மணி நேரம் வேலை பார்ப்பதால், முதுகுவலிக்குப் பஞ்சமே இல்லை. இந்த முதுகுவலியிலிருந்து எப்போது விடுதலை பெறப்போகிறோமோ என்று கலங்கியிருந்த நேரத்தில்தான், சக்தி விகடனில் வாழ்க வளமுடன் தொடரைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கப் படிக்க... மனவளக் கலையின் பேரில் ஒரு நம்பிக்கையும் பற்றும் ஏற்பட்டது.

இப்ப, திருப்பூரில் மனவளக் கலை இலவச பயிற்சி முகாம் நடப்பது தெரிந்ததும் 'இதுதான் நமக்கான நேரம். தவறாமல் இதில் கலந்துக்கணும்னு முடிவு செய்தேன். பயிற்சியிலயும் கலந்துகிட்டேன்.ஒரே நாளில் வலி தீர்ந்தது மாதிரி உற்சாகமா உணரமுடியுது. இனி, பயிற்சியைத் தொடரணும்னு தீர்மானிச்சுட்டேன். சக்தி விகடனுக்கு நன்றி'' என்று நெகிழ்வுடன் சொல்கிறார் வாசகி திலகவதி.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான நடேசன், ''வழக்கமா என் வயசுக்கே உரிய கை-கால் குடைச்சல் எனக்கும் ஏற்பட்டது. கடந்த அஞ்சு வருஷமா மனவளக் கலைப் பயிற்சி எடுத்து வருகிறேன். ரத்த ஓட்டம் சீரடைந்து உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க இந்தப் பயிற்சி அற்புதமான வரப்பிரசாதம்!'' என்று சிலாகித்தார்.

இப்படியான உற்சாகமும் ஆரோக்கியமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்!

வாழ்க வளமுடன்!

- தி.ஜெயப்பிரகாஷ்

படங்கள்: ர.சதானந்த்