Published:Updated:

எப்போதும் மனதில் எதிர்மறை எண்ணம் குடியிருக்கிறதா... தவிர்க்க எளிய 5 வழிகள்!

கால பைரவர்
கால பைரவர்

எப்போதும் மனதில் எதிர்மறை எண்ணம் குடியிருக்கிறதா... தவிர்க்க எளிய 5 வழிகள்!

இன்றைய பஞ்சாங்கம்

8. 6. 21 வைகாசி 25 செவ்வாய்க்கிழமை

திதி: திரயோதசி பகல் 1.05 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: பரணி காலை 7.25 வரை பிறகு கிருத்திகை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

முருகன்
முருகன்

சந்திராஷ்டமம்: அஸ்தம் காலை 7.25 வரை பிறகு சித்திரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

இன்று: கிருத்திகை விரதம்.

எப்போதும் மனதில் எதிர்மறை எண்ணம் குடியிருக்கிறதா... தவிர்க்க எளிய 5 வழிகள்!

சிலருக்கு மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அதிலும் கொரோனா போன்ற பெருந்தொற்றுக்காலத்தில் அதன் வீரியம் மிகுதியாக இருக்கும். தனக்கு ஏதேனும் தீமை நடந்துவிடுமோ அல்லது ஆபத்து சூழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அதிகரிக்கும். குறிப்பாக மரண பயம், எதிர்காலம் பற்றிய கவலைகள் என்று பல்வேறு எண்ணங்கள் மனதை ஆட்டிப்படைத்த வண்ணம் இருக்கும். இவற்றிலிருந்து வெளிவருவது மிகவும் அவசியம். காரணம் எண்ணங்களே நம் வாழ்வை ஆக்குகின்றன. எனவே நேர்மறையான எண்ணங்களை அதிகரித்துக்கொள்வது அவசியம். சிந்தனையும் மனமும் தம் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு இது சாத்தியம். ஆனால், அவற்றைக் கட்டுபடுத்த இயலாதவர்களுக்கு எளிய வழிகளை ஆன்மிகம் சொல்கிறது. இது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்

பணிச்சுமை : முற்பகலில் உற்சாகமும் பிற்பகலில் பணிச்சுமையால் சோர்வும் ஏற்படும் நாள். உணவு விஷயங்களில் அக்கறை தேவை. தேவையற்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். - உழைக்கும் கரங்கள்!

மிதுனம்

நன்மை : அனைத்துவிதத்திலும் நன்மைகள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். - நாள் நல்ல நாள்!

கடகம்

அனுகூலம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செயல்களும் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பின்னடைவுகள் நீங்கும். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம்

வெற்றி : செயல்களில் வெற்றி உண்டாகும் பிற்பகலில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடிவரும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உற்சாகமான நாள். - வெற்றி நிச்சயம்!

கன்னி

குழப்பம் : மனதில் குழப்பங்கள் அலைமோதும். முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் தெளிவும் அமைதியும் ஏற்படும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

துலாம்

நம்பிக்கை : முற்பகலில் நம்பிக்கை நிறைந்திருக்கும். முக்கிய வேலைகளைக் காலையிலேயே தொடங்கிவிடுங்கள். பிற்பகலுக்கு மேல் அனைத்திலும் கவனம் தேவை. - நம்பிக்கை அதானே எல்லாம்!

விருச்சிகம்

மகிழ்ச்சி : குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். மறைமுகத் தொல்லைகளும் நீங்கும். செலவுகள் அதிகரித்தாலும் பணவரவும் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். - ஜாலி டே!

தனுசு:

கவனம் : புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது அதீத கவனம் தேவை. குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னை உண்டாகும். நிதானமாகச் செயல்படுங்கள். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மகரம்

செலவு : செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அநாவசிய செலவுகள் அதிகரிப்பதால் கவலைப்படுவீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு உதவுவது ஆறுதலாக இருக்கும் - செலவே சமாளி!

கும்பம்

விரையம் : அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் சகோதர வகையில் விரையம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம். விவாதங்களையும் தவிருங்கள்.- நோ ஆர்கியுமென்ட்ஸ்!

மீனம்

கலகலப்பு : செயல்களில் வெற்றி கிடைப்பதால் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்தினர் உங்கள் விருப்பம்போல் நடந்துகொள்வார்கள். நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சியைத் தரும். - என்ஜாய் தி டே!

அடுத்த கட்டுரைக்கு