ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

வில்வம் மற்றும் நாகலிங்க மரங்களை எங்களின் கிராமத்து வீடு மற்றும் சிவாலயத்தில் நட்டு வளர்க்க விரும்புகிறேன். இந்தக் கன்றுகள், திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் எங்கு கிடைக்கும்? இந்த மரங்களை வளர்க்கும் முறை என்ன? விவரம் அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவுங்களேன்.

- ஐ.ரவிசங்கர், சென்னை-78

எங்களின் குலதெய்வமான ஸ்ரீநல்லதங்கம்மனின் சரிதம் மற்றும் அருளாடல்கள் ஆகியவற்றை சேகரித்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனவே, ஸ்ரீநல்ல தங்கம்மன் குறித்துத் தகவல் தெரிந்த அன்பர்கள், அளித்து உதவிட வேண்டுகிறேன்.

- தி.மங்களம், கோவை-25

என்னிடம் செம்பை, அரியக்குடி, மதுரை மணி ஐயர், டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, எஸ்.ஜி.கிட்டப்பா போன்ற பிரபல வித்வான்கள் பாடிய கிராமபோன் இசைத்தட்டுகள் அப்படியே செட்டாக உள்ளன. தற்போது எனக்கு 87 வயதாகிவிட்டது. எனவே, பராமரிக்கவோ, கேட்கவோ முடியவில்லை. எனவே, அவற்றை ஆர்வம் உள்ளவர்களுக்கு வழங்கலாம் என்றிருக்கிறேன். தேவைப்படுபவர்கள் சக்தி விகடன் இதழ் மூலம் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

- கே.எஸ்.ராமநாதன், சென்னை-70

'பகவத்கீதை’க்கு 19 மற்றும் 20-வது அத்தியாயங்கள் உள்ள நூல்களும் உண்டு என்கிறார் என்னுடைய நண்பர். அப்படி இருக்கும்பட்சத்தில், அந்த நூல் எங்கு கிடைக்கும் என்று அறிந்தவர்கள், தகவல் தந்து உதவினால், நன்றி உடையவனாக இருப்பேன்.

- ஆர்.ராஜாமணி, புனே

'சூரிய சதகம்’ எனும் புத்தகம் எங்கு கிடைக்கும்? அல்லது, எவரிடமேனும் இருந்தால், பிரதி எடுத்துத் தந்து உதவுங்கள்.

- எஸ்.சிங்கமுத்து, புதுக்கோட்டை

நாடோடியின் 'ஆன்மிகச் சிந்தனைகள்’ எனும் புத்தகத்தின் மூன்றாம் பாகம் என்னிடம் உள்ளது. ஆனால், முதல் இரண்டு பாகங்கள் இல்லை. அவற்றைப் படிக்க ஆவலாக உள்ளேன். இந்த நூல்கள் எங்கு கிடைக்கும்? தகவல் தெரிவியுங் களேன்.

- டி.வி.கிருஷ்ணமூர்த்தி, குன்னூர்

விவேக சிந்தாமணி, முழுக்க முழுக்க எளிய தமிழில் விளக்கமான நூலாக வந்துள்ளதா? எங்கு கிடைக்கும்? பல ஊர்களில், கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. தகவல் அறிந்த வர்கள் தெரிவித்தால், நன்றி உடையவனாக இருப்பேன்.

- கே.கிஷோர், ஈரோடு

பொதிகை டி.வி-யில் ஒளிபரப்பான 'ரமண ஒளி’ எனும் நிகழ்ச்சியின் சி.டி. எங்கு கிடைக்கும் என்று மதுரை வாசகர் பா.சௌந்திரபாண்டி கேட்டிருந்தார்.

RAMANA MAHARISHI CENTRE FOR LEARNING, Ramana Maharishi heritage building, Post office road, Sanjai nagar, Bangalore - 560 094 (080 - 2351 2639) எனும் முகவரியில் 'ரமண ஒளி’ சி.டி. கிடைக்கும் என்று மதுரை வாசகர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

'ஸ்வேத வராஹ ஸ்வாமி’ கோயில் குறித்து கும்பகோணம் வாசகர் வி.சந்திரசேகரன் கேட்டிருந்தார்.

. கர்நாடக மாநிலம், மைசூர் அரண்மனை யின் தெற்கு வாசலில் ஸ்ரீஸ்வேத வராஹருக்குக் கோயில் உள்ளது. மைசூர் மன்னர் சிக்கதேவராஜ உடையார், தமிழகத் தின் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீபூவராக ஸ்வாமியைப் போலவே வெள்ளைக் கல்லில் வடித்து, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிறகு, மைசூர் தலை நகரானதும் விக்கிரகத்தை மைசூரில் பிரதிஷ்டை செய்தனர். சிற்ப நுட்பங்களுக்கும் சித்திர வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்றதாகத் திகழ்கிறது ஸ்ரீஸ்வேத வராஹர் கோயில். வராஹரை வணங்கினால், வைகுண்டப் பிராப்தி நிச்சயம் என்பார்கள் என்று, பெங்களூரு வாசகி டாக்டர் வித்யா மூர்த்தி தெரிவித்துள்ளார்..
அப்பய்ய தீட்சிதர் எழுதிய 'ஸ்ரீவரதாரஜஸ்தவம்’ நூல் எங்கு கிடைக்கும் என்று சென்னை வாசகி காயத்ரி ராஜாராமன் கேட்டிருந்தார்.

ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம் எனும் பதிப்பகம், 1956-ஆம் வருடம், காஞ்சி மகாபெரியவாளின் அருளாசியுடன் அப்பய்ய தீட்சிதர் எழுதிய ஸ்ரீவரதராஜஸ்தவம் நூலை வெளியிட்டது. தற்போது இந்தப் பதிப்பகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதேபோல், அப்பய்ய தீட்சிதரின் இந்தப் புத்தகத்தை வேறு எவரும் வெளியிட்டுள்ளனரா என்றும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள சென்னை வாசகர் வி.நடராஜன், அந்தப் புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து அனுப்பியுள்ளார். இந்த நூல், வாசகி காயத்ரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் மற்றும் விவரங்கள் அடங்கிய நூல் எங்கு கிடைக்கும் என்று மயிலாடுதுறை வாசகி எஸ்.லலிதா கேட்டிருந்தார்.

'ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்’ பிரதியை கொச்சின் வாசகி சாந்தி வேதநாராயணன், சென்னை வாசகி சி.உஷாராணி, வாசகர் டி.சூரிய நாராயணன் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

ஸ்ரீசோமநாத லிங்கம் (சௌராஷ்டிரா), ஸ்ரீமல்லிகார்ஜுன லிங்கம் (உஜ்ஜயினி, மத்தியப் பிரதேசம்), ஓங்காரலிங்கம் (அமராவதி), வைத்தியநாத லிங்கம் (பீகார்), நாகேஸ்வர லிங்கம் (தாருகா வனம், குஜராத்), கேதாரேஸ்வர லிங்கம் (கேதாரம்), த்ரயம்பகலிங்கம் (கௌதமீ தடம், நாசிக்), ராமேஸ்வர லிங்கம் (சேது பந்தம்), பீமசங்கர லிங்கம் (தக்ஷவாடி, புனேவில் இருந்து சுமார் 90 கி.மீ.), விஸ் வேஸ்வரலிங்கம் (வாரணாசி, காசி), கிருஷ்ணேஸ்வரலிங்கம் (எல்லோரா, ஒளரங்காபாத் அருகில்) என துவாதஸ லிங்கங்கள் உள்ளன என்றும், அதன் ஸ்தோத்திரத்தையும் சென்னை பொன்னேரி வாசகர் கன்னியப்பன் அனுப்பியுள்ளார்.

இந்த ஸ்லோகம் கொண்ட புத்தகத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர் என்று தகவல் தெரிவித்ததுடன், அந்த ஸ்தோத்தி ரத்தை செகந்திராபாத் வாசகர் வி.வெங்கட்ராமன் அனுப்பியுள்ளார்.

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய துவாதச லிங்க ஸ்தோத்திரத்தை, கும்ப கோணத்தில் உள்ள ஸ்ரீகாமகோடி ஆய்வு மையம் புத்தகமாக வெளியிட்டுள்ளது என்று தெரிவித்ததுடன், அந்தப் புத்தகத்தை சென்னை வாசகர் டி.என்.ராஜகோபாலன் அனுப்பியுள்ளார்.

இவை அனைத்தும், வாசகி லலிதாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.