சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும்.

உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள்!

புகழ்பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய, முகேத தாம்பூலம், ஸ்ரீசண்முகா, நீரஜதள சயனா, ராரா முரளிதரா ஆகிய பாடல்கள், வி.வி.சடகோபன் பாடிய, ஆதாரம் என்று சரணடைந்தேன், கண்ணன் முகம் தோன்றுதடி, ஜாலவித்தை செய்கிறாள் ஆகிய பாடல்கள் மற்றும் ராமா அஷ்டபதி ராமகவி ஆகிய பாடல்கள் கொண்ட சி.டி-கள் எங்கு கிடைக்கும்? அறிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.  

- டி.எஸ்.கிருஷ்ணன், பெங்களூரு

நாங்கள் ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். என் மாப்பிள்ளையின் வீட்டார், கோமண்டூர் என்ற ஊரில் வசித்ததாகவும், பிறகு பல வருடங்களுக்கு முன்பு, ஓசூர் அருகேயுள்ள பழக்கோட்டைக்கு வந்துவிட்டதாகவும் அவர்களின் குலதெய்வ வழிபாடு (கோமண்டூரில் உள்ள பெருமாள் கோயில்), தடைப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் கோமண்டூர் எங்கே உள்ளது? அங்கு பெருமாள் கோயில் ஏதும் உள்ளதா?

- விஜயஸ்ரீரமணன், பெங்களூரு

##~##
'தே
வி மகாத்மியம்’ நூலில்,
'க்ஞானினபி  சேதாம்ஸி தேவி பகவதி ஹிசஸாபலாதா க்ருஷ்ய மோஹாய, மஹாமாய, ப்ரயசதி...’
எனத் துவங்கும் ஸ்லோகம் மறந்துவிட்டது. தவிர, இந்த ஸ்லோகத்தின் அர்த்தம், இதனைச் சொல்வதால் உண்டாகும் பலன்கள் ஆகியவை குறித்து அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால் மிக்க நன்றி உடையவளாக இருப்பேன்.

- பவித்ரா, சென்னை

'நலமே நல்கும் நற்றமிழ் துதிகள்’ எனும் நூல் எனக்குத் தேவைப்படுகிறது. இந்த நூல் எங்கு கிடைக்கும்? அல்லது அன்பர்களிடம் இருந்தால், பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்.

- டி.சுப்ரமணி, பெங்களூரு

செட்டிநாடு என்று சொல்லப்படும் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் நகரத்தார், சஷ்டியப்த பூர்த்தியை 'சாந்தி’ என்ற பெயரில் விசேஷமாகக் கொண்டாடுவார்கள். இதனையட்டி, சிறப்புப் புத்தகம் வெளியிடுவது அவர்களின் வழக்கம். இதுபோன்ற நூல்களில், பக்திப்பாடல்கள் உள்ளிட்டவையும் அடங்கியிருக்கும். அப்படி விழாக்களில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் சிலவற்றைச் சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் தற்போது என்னிடம் இல்லை. இதுபோன்ற புத்தகங்கள் எவரிடமேனும் இருந்தால், கொடுத்து உதவுங்களேன்!

- கே.வசந்தா கார்த்திகேசன், தெரிசனங்கோப்பு

ளம் வயதில், பக்கத்து வீட்டு அம்மையார் ஒருவர், 'சுகரத்தின் வடிவெடுத்த சுந்தரா, சௌந்தரா, ஏகலோக நாயக எங்கும் நிறைந்தவா! மேகலாவி மேவி நின்ற மேகநீல வண்ணனே, நாமம் ஆயிரம் படைத்த ராம ராம ராமனே...’ எனும் பாடலைச் சொல்லித் தந்தார். அப்போது மனனத்தில் இருந்த இந்தப் பாடல், தற்போது மறந்துவிட்டது. ஏழெட்டுப் பத்திகள் கொண்ட இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்? அல்லது அறிந்த அன்பர்கள் எழுதி அனுப்பினால், பெரிதும் மகிழ்வேன்.

- சாந்தா மகாதேவன், சென்னை-33

உதவலாம் வாருங்கள்!

'வள்ளித் திருமணம் குறித்த பாடலை, சிறுவயதில் கேட்டதாக நினைவு. தற்போது மறந்துவிட்டது. அந்தப் பாடல் எவருக்கேனும் தெரிந்திருந்தால், எழுதி அனுப்புங்களேன்’ என்று சென்னை வாசகி, வள்ளி வெங்கட்ராமன் கேட்டிருந்தார்.

'நல்லோர் புகழும் திருவலஞ்சுழி திணைக் காவல் காக்கும் எல்லோரையும் ரட்சிக்கும் ஈஸ்வரி வள்ளி அம்பிகைக்கு...’ எனத் துவங்குகிற அந்தப் பாடலை, மேட்டூர் அணை வாசகி என்.சுப்புலட்சுமி, சென்னை வாசகி எஸ்.சுலோச்சனா, லட்சுமி ராமமூர்த்தி ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர்.

இந்தப் பாடலின் பிரதி, வாசகி வள்ளி வெங்கட்ராமனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

'ஒற்றைத் தலைவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். இதில் இருந்து நிவாரணம் பெற, ஏதேனும் ஸ்லோகம் உள்ளதா?’ என்று பெங்களூரு வாசகி கே.விசாலாட்சி கேட்டிருந்தார்.

'தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம்...’ எனத் துவங்கும் திருப்புகழ்ப் பாடலை தினமும் பாடிப் பிரார்த்தித்தால், தலைவலி முதலான பிரச்னைகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். மேலும்,

உதவலாம் வாருங்கள்!

இருமலும் ரோக முயலகன் வாத
எரிகுண நாசி விடமே நீரிழிவு
விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிரீளை பெரியகுலை சூலை
பெருவலி வேறு முள நோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாதபடி
உன்தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசை பாடி
வருமொரு கால வயரவராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகிலூர்தி
தருதிருமாதின் மணவாளா
சலமிடைப் பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!’

- எனும் பாடலைப் பாடி வந்தால், தலைவலி மட்டுமின்றி சகல நோய்களும் குணமாகும்; பூரண நலம் பெறலாம் என்று மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

'விவேக சிந்தாமணி’ முழுவதும் எளிய தமிழில் விளக்க உரையுடன் புத்தகமாக வந்திருக்கிறதா? இந்த நூல் எங்கு கிடைக்கும்? விலாசம் தாருங்களேன் என்று ஈரோடு வாசகர் கிஷோர் கேட்டிருந்தார்.

'விவேக சிந்தாமணி’யை, பலரும் அழகிய தமிழில் எளிய நடையில் நூலாக வெளியிட்டுள்ளனர். சென்னை தி,நகர் சுந்தரம் தெருவில் இயங்கி வரும், கற்பகம் புத்தகாலயம் எனும் முகவரியில் இந்த நூல் கிடைக்கும். இதன் விலை ரூ.65/- என்று தேவகோட்டை வாசகர் மு.ஞானசம்பந்தன் மற்றும் சென்னை வாசகர் லியோ தங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

சென்னை தி.நகர், நடேசன் தெருவில் இயங்கி வரும் கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் எனும் நிறுவனம், அழகிய நடையில் தெளிவுற இந்த நூலை வெளியிட்டுள்ளது எனும் தகவலை சென்னை வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

'சூரிய சதகம்’ எனும் நூல் எங்கு கிடைக்கும்? பல கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை என்று புதுக் கோட்டை வாசகர் சிங்கமுத்து கேட்டிருந்தார்.

பழைமை வாய்ந்த 'லிப்கோ’ நிறுவனத்தார், சூரிய சதகம் எனும் நூலை, நவரத்ன மாலா வெங்கட்ராமன் அவர்களின் விளக்க உரையுடன் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் பல புத்தகக் கடைகள் மற்றும் ஹிக்கின் பாதம்ஸ் கடைகளில், இந்த நூல் கிடைக்கும். திருச்சி தெப்பக்குளம், நந்திகோயில் தெருவில் இயங்கி வரும் லிப்கோ பதிப்பகத்தாரையும் தொடர்புகொள்ளலாம். இந்த நூலின் விலை ரூ.40/ என்று சென்னை வாசகர் வி.பி.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.