வாசகர் பக்கம்..

உதவலாம் வாருங்கள்!

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்' இதழிலேயே பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!' என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

'ச்ருங்காரமாகிய ஸ்ரீரங்கநகர், செழிக்கவே வந்துதித்தவளே...' எனத் துவங்கும் பாரிஜாத நாடகக் கும்மிப் பாடல் மறந்துவிட்டது. இந்தப் பாடலை அறிந்த அன்பர்கள், எழுதி அனுப்பி உதவுங்களேன்.

- எஸ். ராஜலக்ஷ்மி, சென்னை-78

தொண்டை மண்டல முதலியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்களின் குலதெய்வம் திருக்களாச்சேரி கிராமத்தில் உள்ள பெரியதம்பிரான் என்பது தெரியவந்தது. ஆனால் வழிபடும் முறைகள், சுவாமியின் வரலாறு எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அறிந்தவர்கள் தகவல் தாருங்களேன்.

- வி. ராமநாதன், மயிலாடுதுறை

என் பேரனுக்கு அடிக்கடி வலிப்பு வருகிறது. எங்கள் பரம்பரையில் பிறக்கும் மூத்த குழந்தைகளுக்கு (ஆண்) இதுபோல் வருகிறது. இது பரம்பரை வியாதியா அல்லது தெய்வ குற்றமா? என் பேரனின் வலிப்பு நோய் நீங்க வேண்டும்; எங்கள் வம்சத்தில் இந்தப் பிரச்னை இனியும் வரக் கூடாது. இதற்கான பிரார்த்தனைத் தலம் எது? என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து தகவல் தந்து உதவுங்கள்.

- பி.வி. வேங்கடரமணன், ஈரோடு

தேவர் அகமுடையார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் நாங்கள். தாத்தாவின் பூர்வீகம்- அரக்கோணம்; பாட்டியின் பூர்வீகம்- கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர். எங்களின் குலதெய்வம் எது என்றே தெரியவில்லை. என் மகனுக்கு முடி இறக்கி, குலதெய்வத்தை வழிபடவேண்டும். இதுகுறித்து அறிந்தவர்கள், தகவல் தாருங்களேன்!

- இரா. தினகர்பாபு, நீடாமங்கலம்

ஸ்ரீலக்ஷ்மி சடாக்ஷரம் மற்றும் ஸ்ரீஜம்புநாதர், ஸ்ரீஅகிலாண் டேஸ்வரி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய ஆசை. இந்த ஸ்தோத்திரங்கள் அடங்கிய நூல் எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்தவர்கள், எழுதி அனுப்பி உதவுங்களேன்!

- ஜி.ஆர். சரஸ்வதி, பெங்களூரு

ஸ்ரீமத் பாகவதம் மற்றும் ஸ்ரீநாராயணீயம் ஆகிய நூல்கள் தமிழில் எளிய விளக்கங்களுடன் கிடைக்குமா? அதேபோல், 'அனுமன் சாலீசா'வும் தமிழில் இருந்தால், படித்து மனனம் செய்ய வசதியாக இருக்கும்.

- கே. ப்ரியா, தஞ்சாவூர்

ஸ்ரீநாரதருக்கு, சனத்குமாரர் உபதேசித்த 'மாருதி கவசம்' எனும் நூல் எங்கு கிடைக்கும்? அல்லது, எவரிடமேனும் இருப்பின் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்.

- வி. ராதாகிருஷ்ணன், சென்னை-87

'புற்றுநோய் நீங்குவதற்கு ஸ்லோகங்கள் ஏதும் உள்ளதா?' எனப் பெரியாண்டிபாளையம் வாசகர் எஸ். ரவிச்சந்திரன் கேட்டிருந்தார்.

'நலியச் செய்யும் நோய்கள் நீங்கிட...' எனும் தலைப்பில், முருகப்பெருமானின் துதிகள் உள்ளன. தவிர, தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது பயன் அளிக்கும் என புதுடில்லி வாசகி வள்ளியம்மை வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். மேலும்,

'தலைவலி மருந்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்டுசூலை காயாக வாசம் வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே' எனத்

துவங்கும் பாடலையும், 'இருமல ரோக முயலகன்' எனும் பாடலையும் பாடி வந்தால், எல்லா நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமார்க்கண்டேயர் அருளிய 'ஸ்ரீம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரம்', அபிராமி அந்தாதியின் 18-வது பாடல், கந்தர் அலங்காரத்தில் உள்ள ஐந்து பாடல்கள், திருப்புகழின் தலைப்புப் பாடல், திருஞானசம்பந்தர் அருளிய 'கோளறு பதிகம்' ஆகியவற்றை மனமுருகிப் பாடிப் பிரார்த்திக்க, விரைவில் பலன் உண்டு எனத் திருச்சி, மல்லியம்பத்து வாசகர் எஸ்.பி. பாலவிநாயகம் தெரிவித்துள்ளார்.

'ஏதோவொரு சிவ ஸ்தலத்தில், ஈசனுக்கு முதுகு காட்டியபடி நந்திதேவர் வாசலைப் பார்த்து இருப்பாராமே?! அது எந்தத் தலம்? எப்படிச் செல்வது?' என மொளசி வாசகி என். பூர்ணிமா 14.4.10 இதழில் கேட்டிருந்தார்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள திருவைகாவூர்- ஸ்ரீவில்வ வனேஸ்வரர் கோயில், வேலூரில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள திருவலம்- ஸ்ரீவில்வ நாதேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில், சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ள திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில், விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள பெண்ணாடம் ஸ்ரீபிரளயகாலேஸ் வரர் ஆகிய ஆலயங்களில், சிவனாருக்கு முதுகு காட்டியபடி காட்சி தருவார் நந்திதேவர் என அருப்புக்கோட்டை வாசகர் வி.ஜி. தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயில்- ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலில், முதுகு காட்டியபடி நந்திதேவர் இருப்பார்; இவரை வக்கிர நந்தி என்பர். இவரை வணங்கினால், திருமணத் தடை நீங்கும்; பிள்ளைப் பாக்கியம் உண்டாகும் என சென்னை வாசகி கே. ராஜலக்ஷ்மி தெரிவித்துள்ளார். இதே தகவல்களை சேலம் வாசகர் எஸ். தங்கவேல், வேலூர் ஓச்சேரி வாசகி புனிதவதி தயாளன் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில், சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது விளமல். இந்த ஊரில் உள்ள ஸ்ரீபதஞ்சலீஸ்வரர் கோயிலில், நந்திதேவரின் தலை சற்றே சாய்ந்திருக்கும் எனும் தகவலை தேவகோட்டை வாசகர், புலவர் அ. சுந்தரம் தெரிவித்துள்ளார்.

'கம்பர் இயற்றிய 'சிலையெழுபது' எனும் நூல் பல கடைகளில் தேடியும் கிடைக்க வில்லை. இந்த நூல் கிடைக்கும் விவரம் தெரிவியுங்கள். அல்லது, எவரிடமேனும் இந்தப் புத்தகம் இருந்தால், பிரதி எடுத்துத் தந்து உதவுங்களேன்' எனத் திருவண்ணாமலை வாசகர் மு. ராமன் 15.3.10 இதழில் கேட்டிருந்தார்.

'சிலையெழுபது' புத்தகத்தை நானும் பல ஆண்டுகளாகத் தேடியலைந்துதான் வாங்கினேன். 43/330, டாக்டர் மு.வ.தெரு, ராஜாஜிபுரம்-2, திருவள்ளூர் 602 001 எனும் எனது முகவரிக்குத் தொடர்புகொண்டால், பிரதி எடுத்து அனுப்பி வைக்கத் தயாராக உள்ளேன் எனத் திருவள்ளூர் வாசகர் என். சண்முகம் தெரிவித்துள்ளார்.

'ஆந்திர மாநிலம் கடப்பாவில், சுமார் 300 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீஞானசித்தர் வீரப்பிரம்மம் என்பவரைப் பற்றி விரிவான நூல் உள்ளதாமே?! இந்த நூல் எங்கு கிடைக்கும்?' என பாண்டிச்சேரி வாசகர் ராதாகிருஷ்ணன் கேட்டிருந்தார்.

'ஸ்ரீபோதுலூரி வீரப்பிரும்மம் - வாழ்க்கை வரலாறு' எனும் நூலை சுவாமி விஜயானந்தா என்பவர் எழுதியுள்ளார். என்.வி. கோபால் அண்கோ, எண்.18, 8-வது தெரு, கோபாலபுரம், சென்னை-86 எனும் நிறுவனத்தார் இந்த நூலை வெளியிட்டுள்ளனர் எனும் தகவலை வேலூர் ஓச்சேரி வாசகர் புனிதவதி தயாளன் தெரிவித்துள்ளார்.