27.8.10 காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம். ஸ்ரீஆதி நாயகித் தாயார் சமேத ஸ்ரீஆதிநாயகப் பெருமாள் (எ) ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில், கோபுரப்பட்டி, மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம். திருச்சி நொச்சியத்தில் இருந்து குணசீலம் செல்லும் பாதையில் உள்ளது கோபுரப்பட்டி (98424 91322).
27.8.10 காலை 8.15 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில், பி.என்.ரோடு, மேட்டுப்பாளையம் - வெங்க டேசபுரம், திருப்பூர் மாவட்டம்.
29.8.10 காலை 7.15 மணிக்குள் கும்பாபிஷே கம். ஸ்ரீகரியமாணிக்கபெருமாள் கோயிலில்; 8 மணிக்கு ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயிலில்; 9 மணிக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் கும்பாபி ஷேகம். அன்னியூர் (எ) பொன்னூர் கிராமம், மயிலாடு துறை தாலுகா, நாகை மாவட்டம் (98409 34339).
29.8.10 காலை 6.30 முதல் 7.10 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீமத் ஓத சுவாமிகள் மற்றும் ஸ்ரீஅமிர்தாம்பாள் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில். பத்மகிரி மலை, திண்டுக்கல் டவுன்.
சம்வத்ஸராபிஷேகம்
26.8.10 மாலை 6 மணி மற்றும் 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு சம்வத்ஸராபிஷேகம், சிறப்பு பூஜைகள். ஸ்ரீசுந்தர விநாயகர் ஆலயம், 16, 14-வது தெரு, ஜெய்நகர், அரும்பாக்கம், சென்னை-106. (044 - 2475 0290).
ஸ்ரீராகவேந்திரர் ஆராதனை
26.8.10 காலை 8 மணிக்கு ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 339-ஆம் ஆண்டு ஆராதனை விழா. சிறப்பு அபிஷேகம், விளக்கு பூஜை, லட்சார்ச்சனை, சிறப்பு ஹோமம். ஸ்ரீஅபிநவ மந்திராலயா, கே.வி.ஆர். நகர், விழுப்புரம்.
மகா ஸம்ப்ரோக்ஷணம்
27.8.10 காலை 9.30 முதல் 10.20 மணிக்குள், ஸ்ரீராமபிரான், ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதிகளுக்கு அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோக்ஷணம். கொத்தாம்பாக்கம் கிராமம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.
சங்கடஹர சதுர்த்தி விழா
28.8.10 மாலை 5 மணிக்கு மகா தர்ஷன் ஸேவா டிரஸ்ட் சார்பில், சங்கடஹர சதுர்த்தி விழா. ஸ்ரீசெல்வ விநாயகர் கோதண்டராமர் கோயில், மேற்கு தாம்பரம், சென்னை-45. (044 - 2226 3568).
28.8.10 மாலை சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை. ஸ்ரீலட்சுமி விசா கணபதி கோயில், பிருந்தாவன் நகர், பழவந்தாங்கல், சென்னை-114. (044 - 2232 1221).
ஒருகோடி காயத்ரி மந்திர ஜப யக்ஞம்
29.8.10 காலை 7 மணி முதல் ஒரு கோடி காயத்ரி மகா மந்திர ஜப யக்ஞம். குஹவேத சிவாகம வித்யாலயம், ஊத்துக்குளி, திருப்பூர் மாவட்டம் (93606 86783).
மகா சண்டி ஹோமம்
4.9.10 மாலை துவங்கி இரவு 11 மணி வரை; 5.9.10 காலை 8 முதல் 12 மணி வரை 3-ஆம் ஆண்டு மகாசண்டி ஹோமம். ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம், 24-வது தெரு, தில்லைகங்கா நகர், சென்னை-61.