ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!


வாசகர் பக்கம்..
விழாக்கள்... விசேஷங்கள்!

வர்தந்தி உத்ஸவம்

10.6.10 வியாழன் காலை 7 மணி முதல் வர்தந்தி உத்ஸவம் எனப்படும் கும்பாபிஷேக நாள் விழா. 730 முதல் 9 மணிக்குள் நாகம், வேம்பு விவாக நிகழ்ச்சி. ஸ்ரீஅபிநவ மந்த்ராலயா ஸ்ரீஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் ஆலயம், கே.வி.ஆர். நகர், விழுப்புரம்.

விழாக்கள்... விசேஷங்கள்!


கும்பாபிஷேகம்

17.6.10 வியாழன் காலை 915 முதல் 1015 மணிக்குள் ஸ்ரீஷீர்டி சாயி சமுதாயக்கூடம் மற்றும் ஸ்ரீஷீர்டி பாபா பளிங்கு திருவுருவச் சிலைக்கு மகா கும்பாபிஷேகம். ஸ்ரீஷீர்டி சாயி சமுதாயக் கூடம், தஞ்சாவூர் மெயின் ரோடு, விஜயவல்லி நகர், திருவலஞ்சுழி அஞ்சல், கும்பகோணம்.

17.6.10 வியாழன் காலை 930 முதல் 11 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம். ஸ்ரீபூமி நீளா சமேத ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமுருகன்பூண்டி, அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்.

21.6.10 திங்கள் காலை 930 மணிக்கு மகா கும்பாபிஷேகம். ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோயில். சிறுகாட்டூர் புத்தூர், காட்டுமன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம் (கும்பகோணம் அணைக்கரையில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகாட்டூர் புத்தூர்).

23.6.10 புதன் கிழமை காலை மகா கும்பாபிஷேகம். ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில், ஆயக்குடி, தென்காசி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.

24.6.10 வியாழன் காலை 730 முதல் 9 மணிக்குள் ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி கோயிலுடன் இணைந்த ஸ்ரீதிருவுடைநாயகி சமேத ஸ்ரீதிருமூலநாதர் மற்றும் ஸ்ரீபொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம். மணவூர் வழி, திருத்தணி தாலுகா, பாகசாலை கிராமம், திருவள்ளூர் மாவட்டம்.

24.6.10 வியாழன் காலை 945 முதல் 1045 மணிக்குள் மகா கும்பாபிஷேகம். ஸ்ரீதர்மாம்பிகை சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆலத்தூர் கிராமம், இலுப்பூர் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம்.


விழாக்கள்... விசேஷங்கள்!