Published:Updated:

7 பருவங்களிலும் பெண்களுக்கு வெற்றி தரும் 7 தலங்கள்!

7 பருவங்களிலும் பெண்களுக்கு வெற்றி தரும் 7 தலங்கள்!

பேதை முதல் பேரிளம் பெண் வரை - 7 பருவங்களிலும் பெண்களுக்கு வெற்றி தரும் 7 தலங்கள்!

7 பருவங்களிலும் பெண்களுக்கு வெற்றி தரும் 7 தலங்கள்!

பேதை முதல் பேரிளம் பெண் வரை - 7 பருவங்களிலும் பெண்களுக்கு வெற்றி தரும் 7 தலங்கள்!

Published:Updated:
7 பருவங்களிலும் பெண்களுக்கு வெற்றி தரும் 7 தலங்கள்!
பால பருவம் முதல் முதுமை வரையிலும் பெண்கள் இந்தச் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவற்றிலிருந்து மீண்டு தடைகளைத் தாண்டி வாழ்வில் வெற்றிவாகை சூட, பெண்கள் வழிபடவேண்டிய ஏழு ஆலயங்கள் தஞ்சைத் தரணியில் உள்ளன.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என ஏழு பருவங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் துயரங்களைப் போக்கும் அந்தத் தலங்களை சப்தமங்கை திருத் தலங்கள் எனப் போற்றுவர். அவை எந்தெந்த ஊர்கள், அங்கு எந்தெந்த நாளில் சென்று எப்படி வழிபட்டால் பலன் என்பதை விரிவாக அறிவோமா?

7 தலங்கள்
7 தலங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழு தலங்கள் என்னென்ன? இந்தத் தலங்களில் பெண்கள் வழிபடுவது அவசியம் ஏன்?

சக்கரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகியவையே சப்தமங்கைத் தலங்கள் எனப்படும் ஏழு தலங்கள் ஆகும். இந்த ஊர்கள் தஞ்சாவூர்-பாப நாசத்துக்கு அருகே உள்ளன.

பார்வதி தேவி தட்சயாகத்தில் கலந்துகொண்டதும், அவள் யாக அக்னியில் பாய்ந்த திருக்கதையையும் அறிவோம். தொடர்ந்து, அன்னை உமையவளுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி அருள் புரிந்தாராம் சிவபெருமான். அப்போது அவரின் திருவுருவில் பரி பூரணத்தைத் தரும் ஏழுவித சிவச் சின்னங்களைக் காண இயலாமல் கலங்கினாள் பார்வதிதேவி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவதரிசனம் கிடைத்தும் அவரின் சிரசில் உள்ள கங்கை, மூன்றாம் பிறை, நெற்றிக் கண், நாகாபரணம், உடுக்கை, சூலம், பாதங்களில் திருக்கழல்கள் ஆகியற்றைக் காண இயலாததால், பரிபூரண சிவதரிசனம் வாய்க்கவில்லையே என வருந்தினாள். அவளின் நிலை அறிந்த சப்தமாதர்களும் கயிலையின் ஆதிமூல துவாரபாலகி தேவியரும் பார்வதியை தரிசித்தனர்.

`பூவுலகில் பெண்களுக்கு அருளக்கூடிய ஏழு தலங்களைப் பற்றி எடுத்துரைத்தனர். அங்கெல்லாம் சென்று வழிபட்டால் சிவனருள் பரிபூரணமாகக் கிடைக்கும்’ என்று தெரிவித்தனர். பார்வதியாளும் அவர்கள் சொன்னபடியே பூலோகம் வந்து ஏழு தலங்களிலும் வழிபட்டு அருள்பெற்றாள். பின்னர், ‘பூலோகத்தில் உள்ள பெண்கள், இந்தத் தலங்களுக்கு வந்தால், அவர்களுக்கு ஏழு பருவங்களில் உள்ள சகல பிரச்னைகளையும் தீர்த்தருள்வாய்’ என சிவபெருமான் சொன்னபடியே, இந்தத் தலங்களுக்கு வழிபட வரும் பெண்களுக்கு வரம் வாரி வழங்குகிறாளாம் உமையவள்.

இனி ஏழு தலங்களையும் ஒவ்வொன்றாக தரிசிப்போமா?

7 தலங்கள்
7 தலங்கள்

1. நெற்றிக்கண் தரிசனம் கிடைத்த சக்கரப்பள்ளி!

இந்த ஊர் தஞ்சை- கும்பகோணம் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள அய்யம்பேட்டை என்னும் ஊருக்கு அருகில் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருக்கும் சிவனாரின் பெயர் சக்ரவாகேஸ்வரர்; அம்பாள் - தேவநாயகி. சப்த மாதர்களில் பிராம்மி வழிபட்ட தலம் இது. பார்வதிதேவி சிவனாரின் நெற்றிக் கண்ணைத் தரிசித்து அருள்பெற்றாள். பிரதமை திதி நாளில், இங்கே வந்து வணங்குவது சிறப்பு.

2. துவிதியை அன்று வழிபடவேண்டிய அரிமங்கை ஆலயம்

அய்யம்பேட்டை கோயிலடி பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமங்கை. ஸ்வாமி - ஹரிமுக்தீஸ்வரர்; அம்பாள் - ஞானாம்பிகை. சப்த மங்கையரில் ஒருவரான மகேஸ்வரி, துவிதியை திதி நாளில் வழிபட்ட தலம். இங்கே, பார்வதிதேவி சுயம்பு மூர்த்தத்தை வழிபட... சிவ - கங்கை தரிசனம் கிடைக்கப் பெற்றாள்.

3. கெளமரி வழிபட்ட சூலமங்கலம்

அய்யம்பேட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது சூலமங்கலம். திருதியை நாளில், கௌமாரி வணங்கி அருள் பெற்ற தலம். ஸ்வாமி - கீர்த்திவாகீஸ்வரர்; அம்பாள் - அலங்காரவல்லி. பார்வதிதேவி இங்கே சிவனாரின் திரிசூல தரிசனத்தைப் பெற்றாள். இங்கே, அஸ்திர தேவர் சந்நிதி உள்ளது சிறப்பு. இவரை வணங்கினால், எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.

4. நந்திதேவர் பிரதோஷ வழிபாடு செய்த நந்திமங்கை

நந்திமங்கை: அய்யம்பேட்டையை அடுத்துள்ளது நல்லிசேரி. ஒரு காலத்தில் நந்திமங்கை என அழைக்கப்பட்ட திருத்தலம் இது. சப்த மாதாக்களில் ஒருவரான வைஷ்ணவிதேவி, சிவனாரைத் தொழுது அருள் பெற்ற திருவிடம். பார்வதிதேவி இங்கே தவம் செய்ய... தன் திருக்கழல் தரிசனத்தைக் காட்டியருளினார் சிவபெருமான். அதே போல் நந்திதேவர் 1008 பிரதோஷ பூஜை செய்து சிவனாரின் பாத தரிசனம் பெற்ற தலம் இது. ஸ்வாமி - ஸ்ரீஜம்புகேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. பிரதோஷ நாளில் இங்கு வழிபடுவது சிறப்பு.

5. வாராஹி வழிபட்ட பசுமங்கை

தஞ்சை - பாபநாசத்தை அடுத்துள்ளது பசுபதிகோவில். காமதேனு மற்றும் வராஹி தேவி வழிபட்ட இந்தத் தலத்தில், ஸ்ரீபார்வதிதேவி வழிபட்டு சிவனாரின் உடுக்கைத் தரிசனம் கிடைக்கப் பெற்றாள். பசுமங்கை எனும் தலம், பிறகு பசுபதிகோவில் என மாறியதாம்! ஸ்வாமி - ஸ்ரீபசுபதீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீபால்வள நாயகி. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம். தீய சக்தி அண்டாமல் நம்மைக் காத்தருள்வார் இறைவன் என்பது ஐதீகம்! சோமவாரமாகிய திங்கள் கிழமைகளில் இங்கு வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

6. மூன்றாம்பிறையில் வழிபட வேண்டிய தாழமங்கை ஆலயம்

பசுபதிகோவிலுக்கு அருகில் சுமார் 1 கி.மீ. தொலைவில், அமைந்துள்ளது தாழமங்கை திருத்தலம். இந்திராணி எனப்படும் மாகேந்திரி, வழிபட்டுப் பாபம் நீங்கிய தலம் இது. உமையவள் கடும் தவம் புரிந்து, மூன்றாம்பிறையுடன் சிவனாரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். ஸ்வாமி - ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீராஜராஜேஸ்வரி. மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து வழிபட்டால், குடும்பத்தில் சாந்தம், சுபிட்சம் குடிகொள்ளும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்வர்.

7. நாக தோஷம் நீக்கும் திருப்புள்ளமங்கை

தஞ்சை- பசுபதிகோவிலுக்கு அருகில், சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புள்ளமங்கை. சாமுண்டிதேவி, அஷ்டநாக மூர்த்திகளுடன் இங்கே சிவலிங்கத் திருமேனிக்கு முப்பது கோடி நாகலிங்கப் புஷ்பங்கள் சார்த்தி வணங்கி, அருள் பெற்ற திருவிடம் இது. ஸ்ரீபார்வதிதேவி கடும் தவம் செய்ததன் பலனாக, சிவபெருமானை கழுத்தில் நாகாபரணத்துடன் தரிசித்துப் பூரித்தாள். ஸ்வாமி - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅல்லியங்கோதை என்கிற சௌந்தரநாயகி. மாத சிவராத்திரி, பிரதோஷம், திங்கள் கிழமைகளில் இங்கு வந்து வழிபட, நாகதோஷம் முதலான சகல பிரச்னைகளும் நீங்கும். திருமண பாக்கியம் கைகூடும், சகல ஐஸ்வரியங் களுடன் சந்ததி சிறக்க வாழலாம் என்கின்றனர்.