Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங் களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக் கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக் கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண் களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
உதவலாம் வாருங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெரூர் ஸ்ரீபிரம்மேந்திர சுவாமி களின் சரிதம் படிக்க ஆவலாக உள் ளேன். எந்த மொழியில் இருப்பினும் பரவாயில்லை. இந்த நூல் எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்த அன்பர் கள் தகவல் தந்து உதவினால் மகிழ்வேன்.

- எம்.செழியன், பீமவரம்

பிராமண சமூகத்தில், பெண்ணுக்குத் திருமணம் நடப்பது துவங்கி, அவள் கருவுற்றதும் எப்போது அழைத்து வரவேண்டும், அவளுக்குக் குழந்தை பிறந்து, பிறகு புகுந்த வீட்டுக்குக் கொண்டு விடுவது வரையிலான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து ஏதேனும் நூல்கள் உள்ளனவா? அந்தச் சடங்கு சாங்கியங்களை அறியும் ஆவலில் இருக்கிறேன். இதுகுறித்த புத்தகம் எங்கு கிடைக்கும் எனும் தகவலைத் தெரிவித்தால், நன்றி உடையவனாக இருப்பேன்.

- டி.ரவி, புதுச்சேரி-9

மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'பக்தி நெறி’ எனும் நூல் எங்கு கிடைக்கும்? தகவல் தாருங்களேன்.

- நா.சுப்ரமணியன், மதுரை-16

ஸ்ரீசக்ரம் மற்றும் பிரமிட் குறித்த ஆராய்ச்சி நூல் எங்கு கிடைக்கும்? பாண்டிச்சேரி அன்னை அருளிய, 'நொடியில் பிரச்னை தீர்க்கும் பிரார்த் தனைகள்’ புத்தகம் மற்றும் சி.டி. எங்கு கிடைக்கும்?

- மணி பரமேஸ்வரன், பெங்களூரு

'பக்த விஜயம்’ என்றொரு புத்தகம், பண்டரிபுரம் ஸ்ரீபாண்டுரங்கனின் லீலைகளை, அவரின் பக்தர்களுக்கு விவரிக்கிற அற்புதமான நூல். சுமார் 45 வருடங்களுக்கு முன்பு படித்ததாக நினைவு. இதில், ஸ்ரீஅனுமன் கவசம் எனும் ஸ்தோத் திரமும் வெளியிட்டிருந்தனர். அந்தப் புத்தகம் அல்லது ஸ்ரீஅனுமன் கவசம் எங்கு கிடைக்கும்? எந்த நூலில் உள்ளது?

- ஏ.என்.ராமகிருஷ்ணன், அக்ரஹாரம் கிராமம்

##~##
ல வருடங்களாக, குலதெய்வம் எது என்றே தெரியாததால், வழிபட வில்லை. இதனால் மிகுந்த துயரத் துக்கும் வேதனைக்கும் ஆளாகியுள் ளோம். எங்களின் குலதெய்வம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் என்றும், காரமடை எனும் ஊருக்குத் தெற்கில் மேட்டுப்பாளையத்துக்குத் தென் மேற்கில் அம்மனின் ஆலயம் அமைந் துள்ளது என்றும், நுழைவாயிலில் மதிலும், குதிரை பொம்மைகளும் சூலமும் இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றனர். அருகில் ஆல மரம், அரச மரம் மற்றும் புளிய மரம் ஆகியவையும், சிறு ஓடையும்கூட இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோயிலுக்குச் செல்லும் வழி தெரிந்தவர்கள், விவரம் தந்து உதவுங்களேன்.

     - கே.கோவிந்தராஜன், சேலம்-6

ங்களின் குலதெய்வம் பால் முனீஸ்வரர் என அறிந்தேன். ஆனால், ஸ்ரீபால் முனீஸ்வரருக்கு ஆலயம், தமிழகத்தில் அல்லது காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதி களில் எங்கு உள்ளது எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால், குலதெய்வ வழிபாடு செய்ய இயலும்.

- செல்வம், படப்பை

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

உதவலாம் வாருங்கள்!

'தேவி மகாத்மியம் நூலின், ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகி எனும் ஸ்லோகம் மறந்துவிட்டது. இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் மற்றும் இதைச் சொல்வதால் உண்டாகும் பலன்கள் குறித்து அறிய விரும்புகிறேன்’ என்று, சென்னை வாசகி பவித்ரா கேட்டிருந்தார்.

ஸ்ரீதேவிமகாத்மியத்தின் 700 மந்திரங்களின் சாரமாகக் கருதப்படுவது ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகி. இந்த ஸ்லோகத்தை அனுதினமும் பாராயணம் செய்து, வாரம் ஒருமுறை நைவேத்தியம் செய்து வழிபட, நல்ல பலன்கள் கிடைக்கும் என்பர்.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட, தீராத நோயும் அகலும். திங்கட்கிழமை தேன், சர்க்கரை மற்றும் பழங்கள் படைத்துப் பிரார்த்திக்க... சகல ஐஸ்வரியமும் தேடி வரும்; பதவி உயர்வு கிடைக்கும்.

செவ்வாய்- சித்ரான்னம், பழம் மற்றும் தேன் நைவேத்தியம் செய்தால், கிரக தோஷங்கள் விலகும். புதன் அன்று பால் பாயசம் செய்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் பெறலாம்.

வியாழனன்று தயிர்சாத நைவேத்தியம் செய்து வழிபட்டால், புத்தியில் தெளிவு ஏற்படும்; தேர்வில் வெற்றி பெறலாம்.

வெள்ளிக்கிழமை- தேங்காய், பழம் நைவேத்தியம் செய்தால், திருமணம் கைகூடும். சனிக்கிழமை- எள் அன்னம் படையலிட்டால், கவலைகளும் துக்கங்களும் பறந்தோடும் என்பது ஐதீகம் என்று, சென்னை வாசகர்கள் வி.கன்னியப்பன், வி.பி.ஸ்ரீநிவாசன், பி.ஆர்.ஏகாம்பரம், ஓசூர் வாசகி மாலா வாகீஸ்வரன், பெங்களூரு வாசகி பானுமதி பாலசுப்ரமணியம், மீனாட்சி முத்துகிருஷ்ணன், இந்திரா ஸ்ரீநிவாசன், சென்னை வாசகி சாயிலட்சுமி ஆகியோர் விளக்கியுள்ளனர். அத்துடன், அந்த ஸ்லோகத்தையும் அனுப்பியுள்ளனர்.

வாசகி பவித்ராவுக்கு, இந்த ஸ்லோகம் அனுப்பி வைக்கப்படுகிறது.

'வில்வம் மற்றும் நாகலிங்க மரங்களை எங்களின் கிராமத்து வீடு மற்றும் சிவாலயத்தில் நட்டு வளர்க்க விரும்புகிறேன். இந்தக் கன்றுகள், திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் எங்கு கிடைக்கும்? இந்த மரங்களை வளர்க்கும் முறை எவ்விதம்?’ என்று சென்னை வாசகர் ஐ.ரவிசங்கர் கேட்டிருந்தார்.

தமிழகத்தின் பல ஊர்களிலும் வில்வம் கன்று கிடைக்கும். அதனை வாங்கி, சுமார் மூன்றடி இடைவெளியில், ஒன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம் மற்றும் ஒன்றரை அடி ஆழம் எனத் குழி தோண்டி, ஒரு வாரம் வரை ஆறவிட்டு, பிறகு குழிக்குள் சுமார் அரை அடிக்குத் தழை உரமிட்டு, அதற்கு மேல் தோண்டிய மண்ணும் மணலும் கலந்து, வில்வங்கன்றை நடவேண்டும்.

அதில், ஒரு கிலோ விபூதி அல்லது விறட்டி எரித்த சாம்பல் ஆகியவற்றைச் செடியைச் சுற்றிலும் போடவேண்டும். பிறகு, தினமும் காலையும் மாலையும் தண்ணீர் விடுவது அவசியம். நல்ல பராமரிப்புடன் செயல்பட்டால், சுமார் ஒன்றரை வருடத்துக்குள் மரமாக வளர்ந்து நிற்பதைக் காணலாம் என்று சென்னை வாசகர் மீ.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாரீஸ் தியேட்டருக்கு அருகில் மார்னிங் கார்டன் மற்றும் திருவானைக்காவல் மாம்பழச் சாலையில் உள்ள நர்சரி கார்டன் முதலான பல இடங்களில் வில்வம் மற்றும் நாகலிங்கக் கன்றுகள் கிடைக்கின்றன. அங்கே சென்று அவற்றை வாங்கும்போது, அவர்களே வளர்க்கும் விதம் குறித்தும் தெளிவுற விளக்குகின்றனர் என்று திருச்சி வாசகி ஜே.தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே, சிவாலயங்கள் பலவற்றிலும் வில்வ மரம் இருக்கும். தவிர, வில்வம் பழம் கிடைக்கும் தருணம் இது. கோயில் உண்டியலில் ஏதேனும் காணிக்கை செலுத்திவிட்டு, ஒரேயரு வில்வம் பழம் அல்லது காயை எடுத்து வந்து, அதை உடைத்துப் பிசைந்தால் அதில் சுமார் 8 முதல் 10 விதைகள் வரை கிடைக்கும். அதை தொட்டி ஒன்றில் அல்லது தோட்டத்தின் ஒரு பகுதியில் இட்டு, நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்த்தால், 15 நாட்களுக்குள் முளை விடத் துவங்கும். எல்லா விதைகளும் முளைக்காது. எனினும், நான்கைந்து நிச்சயம் முளைக்கும். மெள்ள வளர்ந்ததும், அதனை விருப்பப்பட்ட இடத்தில் நட்டு வளர்த்தால், ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் நெடுநெடுவென மரமாக வளர்ந்து நிற்கும் என்று, சென்னை வாசகி பத்மினி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.