Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங் களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக் கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத்தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும்
உதவலாம் வாருங்கள்!
'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண் களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

நாங்கள் 24 மனை தெலுங்குச் செட்டியார் (16 வீடு) பிரிவைச் சேர்ந்தவர் கள்; வம்மையார் கோத்திரம் என்பார்கள். எங்களின் குலதெய்வம் எது என்றே தெரியாமல், பல வருடங்களாக குலதெய்வ வழிபாடு செய்யாமல், தவித்து வருகிறோம். இந்தக் கோத்திரக்காரர்களுக்கு, ஸ்ரீநகுல ரிஷிதான் குலதெய்வம் என்கின்றனர் ஒரு சிலர். எங்களின் குல தெய்வத்தை அறிந்தவர்கள், அதுபற்றிய விவரங்களை தயவுசெய்து தந்து உதவுங்களேன்.

- வேல்முருகன் (இ-மெயில்)

வியோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய ஸ்ரீரமண விஜயம், பெரிர் வரலாறு ஆகிய நூல்கள், சுமார் 50 வருடங்களுக்கு முன்பு வெளியாகின. தற்போது இந்த நூல்கள் எங்கே கிடைக்கும்? விவரம் தெரிந்த வாசக அன்பர்கள், தகவல் தாருங்கள்.

- சுப்ரமணி லட்சுமணன், சென்னை-18

##~##
ப்போது, எந்தத் தடங்கல் ஏற்பட்டாலும், என் தந்தையார், ஸ்ரீஏக தந்த ஸ்தோத்திரத்தை 21 முறை பாராயணம் செய்வார். 'மதாஸுரம் ஸுனாந்தம்னவ...’ என்று துவங்கும் அந்த ஸ்லோகத்தை, எங்களையும் பாராயணம் செய்யச் சொல்வார். இந்த ஸ்லோகம், தற்போது மறந்துவிட்டது. 'ஸ்ரீஏக தந்த ஸ்தோத்திரம்’ எந்த நூலில் உள்ளது? அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? அல்லது, அன்பர்கள் எவரிடமேனும் அது இருந்தால், ஜெராக்ஸ் பிரதியை அனுப்பி உதவுங்கள்.

- மாலினி நடராஜன், சென்னை-20

'ஸமர்த்த ராமதாஸ சரித்திரம்’ எனும் தலைப்பில், வி.ஸ்வாமிநாத ஆத்ரேயா எழுதிய நூலை, பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீமஹாபெரியவாள் டிரஸ்ட் வெளியிட்டது. இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன். அதேபோல், ஜஸ்டின் இ.அபாட் என்பவர், 'Poet saints of Maharashtra’ எனும் தலைப்பில், மகாராஷ்டிர மகான்களைப் பற்றி, ஆங்கிலத்தில் ஓர் அற்புதமான புத்தகம் எழுதி வெளியிட்டார் (வெளியீட்டாளர் யார் என்று தெரியவில்லை). இந்த இரண்டு புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது குறித்து அறிந்த வாசகர்கள், தகவல் தந்து உதவினால், மகிழ்வேன். மேலும், 'தந்தை யார்? தாயார் யார்? தாரம் யார்?’ என்று திருவண்ணாமலையில், ஓதுவார் ஒருவர் பாடக் கேட்டதும், அழுதேவிட்டேன். அந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது? அல்லது, அந்தப் பாடலின் பிரதியை அனுப்பி உதவுங்கள்.

- கௌரி, சென்னை-42  

ல வருடங்களாக மனநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். ஆனாலும், 10 வருடங்களுக்கும் மேலாக மாத்திரைகளுடனே வாழும் அவல நிலையில் இருக்கிறேன். மனக் குழப்பமின்றித் தெளிவாகவும் தன்னம்பிக்கையும் கொண்டு திகழ ஏதேனும் ஸ்லோகம் உள்ளதா? எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும்? வாசக சகோதரர்கள் தகவல் தந்து உதவினால், விரைவில் பூரண குணம் பெறுவேன் எனும் நம்பிக்கை உள்ளது.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

ன் கணவர், பல வருடங்களாகச் சர்க்கரை நோய் மற்றும் கால் வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். பார்க்காத மருத்துவர் இல்லை; சாப்பிடாத மருந்துகள் இல்லை. இந்த வலியில் இருந்தும் வேதனையில் இருந்தும் விடுபட, ஏதேனும் ஆலயம் சென்று பரிகாரம் செய்யவேண்டுமா? அல்லது ஸ்லோகம் உள்ளதா? தெரியப்படுத்துங்களேன்!

- ஜனனி, பெங்களூரு

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

உதவலாம் வாருங்கள்!

'எங்கள் மாப்பிள்ளையின் தோல், வெண்ணிறமாக மாறியுள்ளது. தோலின் நிறம் பழையபடி இயல்பு நிறத்துக்கு மாறுவதற்கு என்ன ஸ்லோகம் உள்ளது?’ என்று திருச்சி வாசகி பி.சரஸ்வதி கேட்டிருந்தார்.

''காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் திருத்தலத்தை அனைவரும் அறிவோம். சென்னைக்கு அருகில் உள்ள இந்தத் தலத்துக்கு மாப்பிள்ளையை அழைத்துச் செல்லுங்கள். இங்கேயுள்ள ஸ்ரீஆதிகேசவபெருமாள் குளத்தில் ஸ்நானம் செய்வது விசேஷம். திருவாதிரை நட்சத்திர நாளில் செல்வது மிகவும் நல்லது என்பார்கள். அந்த நாளில், குளத்தில் நீராடிவிட்டு, ஸ்ரீராமானுஜருக்குப் பாலபிஷேகம் செய்து, நெய்விளக்கேற்றி வழிபடுங் கள். பிறகு, அபிஷேகப் பாலை அருந்தினால், ஸ்ரீபெருமாளின் கருணை யாலும், ஸ்ரீராமானுஜரின் அருளாலும் உங்கள் மாப்பிள்ளை விரைவில் குணம் பெறுவார் என்பது உறுதி. அதேபோல், ஸ்ரீரங்கம் கோயில்- ஸ்ரீஉடையவர் சந்நிதியிலும் பிரார்த்திக்கலாம்'' என்று சென்னை வாசகர் என்.கணபதி தெரிவித்துள்ளார்.

''ஏழைகளுக்கு ஆடை தானம் செய்து, இறைவனைப் பிரார்த்தித்தால், தோல் நோய் மட்டுமின்றி சகல நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் தான், துணி போனால் பிணி போயிற்று என்பார்கள்'' என்று, செகந்திரா பாத் வாசகர் வி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

உதவலாம் வாருங்கள்!

ஸ்ரீசக்கரம் மற்றும் பிரமிட் குறித்த ஆராய்ச்சி நூல் மற்றும் பாண்டிச்சேரி அன்னை அருளிய, 'நொடியில் பிரச்னை தீர்க்கும் பிரார்த்தனைகள்’ எனும் நூல் ஆகியவை எங்கு கிடைக்கும் என்று பெங்களூரு வாசகர் மணிபரமேஸ்வரன் கேட்டிருந்தார்.

பாண்டிச்சேரி அன்னை அருளிய புத்தகம், ஸ்ரீஅரவிந்த அன்னை தியான மையம், புதிய எண்: 11, பழைய எண்: 6, மாடல் ஹட்மெண்ட் ரோடு, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை-35 (044-2433 0989) எனும் முகவரியில் கிடைக்கும் என்று, சென்னை வாசகி ஆர்.ரேவதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தமிழில் வந்துள்ளதா என்று சென்னை வாசகி அனந்தலக்ஷ்மி கேட்டிருந்தார்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை, குமரிப் பதிப்பகம், எண் 8, நீலா தெற்கு வீதி, நாகப்பட்டினம் (04365- 221472) எனும் பதிப்பகத்தார், தமிழில் வெளியிட்டுள்ளனர் என்று ஓடக்கல்பாளையம் வாசகர் சி.கதிர்வேல் தெரிவித்த துடன், அந்த ஸ்தோத்திரத்தையும் நகல் எடுத்து அனுப்பியுள்ளார்.

'ஸ்ரீநாமகிரி ஸ்லோகம்’ மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் எழுதி அனுப்பி உதவுங்கள் என்று வாசகி ஒருவர் கேட்டிருந்தார்.

'ஸ்ரீவித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீஸுபலா பூர்ணகாமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரீ
லக்ஷ்மி ஸ்ரீவேதா கர்பா விதுரத மதிஸா விஸ்வகல்யாண பூமா
விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதீ விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா’

இதுதான் ஸ்ரீநாமகிரி ஸ்லோகம். இதை தினமும் முறையாகப் படித்து வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும்; எந்தக் காரியத்திலும் கவனம் சிதறாமல் செயலாற்ற முடியும் என்று, பெங்களூரு வாசகி ராதா தெரிவித்துள்ளார்.