Election bannerElection banner
Published:Updated:

திருவிளக்கு பூஜை - 126

திருவிளக்கு பூஜை - 126

திருவிளக்கு பூஜை - 126

‘தேனியில மழை பெய்யணும்!’

விளக்கு பூஜையில் வாசகி வேண்டுதல்..!

தேனி மேலப்பேட்டையில் உள்ள ஸ்ரீபத்ர காளியம்மன் கோயிலில், கடந்த 5.11.13 செவ்வாய்க்கிழமை அன்று, சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும்  திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. சக்திவிகடனின் 125-வது விளக்கு பூஜை இது.

தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர் என பல ஊர்களில் இருந்தும் ஏராளமான வாசகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.

திருவிளக்கு பூஜை - 126

''இந்த முறை எங்க மாவட்டத்துல மழை, சரியாப் பெய்யலீங்க. இதனால காடு- கரையெல்லாம் வறண்டு கிடக்குது. எப்பவும் செழிப்பா நடக்கற விவசாயம், இந்த முறை தண்ணீருக்குத் தவிச்சுக் காத்துக்கிட்டிருக்கு. நல்ல மழை பெய்யணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்கிறார் வாசகி பொன்னம்மாள்.

''என் மாமியாருக்கு சமீபகாலமா கண்ல பிரச்னை. பார்வை சரிவரத் தெரியாம ரொம்பவே கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு அடுத்த மாசம், மதுரை ஆஸ்பத்திரில ஆபரேஷன் நடக்கப்போவுது. ஆபரேஷன் நல்லபடியா நடந்து, என் மாமியாருக்கு கண் பார்வை சரியாகணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார் வாசகி சாந்தி.

''என் அண்ணா பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போயிகிட்டே இருக்கு. அவளுக்குச் சீக்கிரமே நல்ல வரன் அமையணும். அப்பத்தான் எங்க அண்ணாவால பழையபடி, நிம்மதியா வலம் வரமுடியும். அதனால, என் அண்ணா மகளுக்கு நல்லவிதமா கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று வாசகி ஜெயலட்சுமி தெரிவித்தார். எல்லோரின் பிரார்த்தனைகளையும் ஈடேற்றித் தருவாள் ஸ்ரீபத்ரகாளியம்மன்,

படம்: அருணகிரி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு