Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
##~##

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

• 'சிவமெங்கே சக்தி எங்கே.. சிவசக்தி எங்கே எங்கே... சிந்தனை செய் மனமே’ எனத் துவங்கும், இராதா ஜெயலக்ஷ்மி சகோதரிகள் பாடிய முழுப்பாடல் மிக அற்புதமாக இருக்கும். இந்த முழுப்பாடலும் வாசகர்கள் எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்களேன்.

- எஸ்.வசந்தமீனாக்ஷி, திருச்சி

உதவலாம் வாருங்கள்

• பிரமோத்தர காண்ட வசனம் எனும் நூல் எங்கு கிடைக்கும்? அல்லது இந்த நூலை வைத்திருக்கும் அன்பர்கள், நகல் எடுத்து அனுப்பிவைத்தால்... ஆலய வலம் வருதல், நந்தி வழிபாடு உட்பட வழிபாட்டு நியதிகள் குறித்து பக்தர்களுக்கு விளக்க ஏதுவாக இருக்கும்.

- எம்.பிச்சைபிள்ளை, மயிலாடுதுறை

• 'உலகெலாம் படைத்தோர் ஒளியே போற்றி...’ எனத் துவங்கும் ஸ்தோத்திரப் புத்தகம் அருள்மிகு பங்காரு காமாட்சி அம்மனைப் போற்றும் நூல். இது, எங்கு கிடைக்கும்? அல்லது இந்தப் புத்தகத்தை வைத்திருப்பவர்கள் நகல் அனுப்பி வைத்தால், பெரிதும் மகிழ்வேன்.

- ஆர்.வைத்தியநாதன், சென்னை

• 'திருச்சியில் வயதானவர்களுக்கான பாடசாலை உள்ளதாக தெரிய வந்தது. அந்தப்  பாடசாலையின் தெளிவான முகவரி எவருக்கேனும் தெரிந்தால் தந்து உதவுங்களேன்’ என்று பெயர் வெளியிட விரும்பாத பாலக்காடு வாசகி ஒருவர் கேட்டுள்ளார். முகவரி கிடைக்கும்பட்சத்தில், அது சக்தி விகடனில் வெளியாகும்.

உதவலாம் வாருங்கள்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

* 'ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி மங்களம் ஸ்தோத்திரம்’ தனக்கு மறந்து விட்டதென்றும், தெரிந்தவர்கள் அனுப்பி உதவ வேண்டும் என்றும் சக்தி விகடன் 1.10.13 இதழில், கோவை வாசகி சுசிலாஉபேந்திரன் கேட்டிருந்தார். சென்னை வாசகர் ராம்குமார் அந்தப் பாடலை அனுப்பி வைத்துள்ளார். அது சம்பந்தப்பட்ட கோவை வாசகிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

* 'பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே...’ எனத் துவங்கும் பாடல் தனக்கு வேண்டும் என்று சக்திவிகடன் 3.9.13 இதழில், ஸ்ரீரங்கம் வாசகி லக்ஷ்மிசந்தானம் கேட்டிருந்தார். அந்தப் பாடலை சென்னை வாசகிகள் கௌசல்யா, அம்புஜம் ஸ்ரீநிவாசன், சுதா வாசுதேவன், பெங்களூர் வாசகி அம்மாளு அம்மாள் மற்றும் மயிலாடுதுறை வாசகி ராஜமாதங்கி ஆகியோர் அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தப் பாடல் வாசகி லக்ஷ்மி சந்தானத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.