
ஆன்மாவை இகப்படுத்துவதே ஆன்மிகம். அதாவது, இங்கே இந்த உலகில் இருக்கும்போதே, தன் வசப்படுத்துவதே ஆன்ம இகம்- ஆன்மிகம். இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் தன்னை உணர்வதே ஆன்மிகம். அது ஒரு கலை. அதில் மிகவும் அனுபவப்பட்டவர் கவியரசர் கண்ணதாசன். அவரின் ஆன்மிக அனுபவங்கள் அவரது திரைப்பாடல்களில் ஆங்காங்கே ஞானத் தெளிப்புகளாக ஜொலிக்கும். அவற்றில் சில, இந்த இதழில் இறைதரிசனப் பாடல் துளிகளாக இடம் பெற்றிருக்கின்றன.
வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்;
சின்ன சின்ன நெஞ்சில் பாசம் வைத்தான்,
உள்ளமெனும் கோவிலைக் கட்டி வைத்தான்!


நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா... நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா, அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா!
பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி!
தன் பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள் தெய்வத்தின் தெய்வமடி..!


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்...
அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்!
நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகம் ஆடும் கலைஞனடா!


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை!


கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
உனக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா?

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான்அறிவான்