சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

திருவிளக்கு பூஜை - 129

திருவிளக்கு பூஜை - 129

திருவிளக்கு பூஜை - 129

கம்பம் விளக்கு பூஜையில் சிறுமி நெகிழ்ச்சி

 ‘என் அம்மா குணமாகணும்!’

 சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து, தேனி கம்பத்தில் உள்ள ஸ்ரீகச்சையம்மன் கோயிலில், 17.12.13 அன்று திருவிளக்கு பூஜையை நடத்தியது. சக்திவிகடன் நடத்தும் 128-வது விளக்கு பூஜை இது.

கம்பம் மட்டுமின்றி சின்னமனூர், தேனி, வீரபாண்டி, தேவாரம் என்று பல ஊர்களில் இருந்தும் வாசகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.

''என் பையன் இன்ஜினீயரிங் கடைசி வருஷம் படிக்கிறான். அவன் வேலைக்குப் போனாதான் எங்க கஷ்டமெல்லாம் தீரும். நல்ல வேலை கிடைச்சு, அவன் வாழ்க்கையில செட்டிலாகணும்'' என்று வாசகி சாந்தி, தன் பிரார்த்தனையைத் தெரிவித்தார்.

திருவிளக்கு பூஜை - 129

''எங்க அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடும். அதனால ரொம்பவே அவதிப்படுவாங்க. அவங்க சீக்கிரமே பரிபூரணமா குணமாகணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று சிறுமி வசுமிதா கூறினாள்.

''மழை இந்த முறை சரியா பெய்யவே இல்லை. அதனால விவசாயம் ரொம்பவே நசிஞ்சு போயிடுச்சு. நல்ல மழை பெய்யணும்; பூமி செழிக்கணும்'' என்று வாசகி சுமதி தெரிவித்தார்.

''வெளிநாட்டுல வேலை பாக்கற அப்பா, சீக்கிரமே இங்கே வந்து செட்டிலாகணும். நாங்க எல்லாரும் ஒண்ணா, சந்தோஷமா இருக்கணும்'' என்று சிறுமி காயத்ரிதேவி பிரார்த்தனை செய்துகொண்டதாகத் தெரிவித்தாள்.

அனைவரின் வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற, அம்மன் நிச்சயம் அருள்பாலிப்பார்!

- உ.சிவராமன்

படம்: வீ.சக்தி அருணகிரி