ஆன்மிக பொன்மொழி
பணத்துக்காக மட்டுமே கடவுளுக்கு ஊழியம் செய்பவன், இன்னும் அதிகப் பணம் கிடைத்தால் சைத்தானுக்கும் ஊழியம் செய்வான்.


எல்லா நேரமும் நல்ல நேரம்தான் - சரியான காரியத்தைச் செய்வதற்கு! எல்லா நேரமும் கெட்ட நேரம்தான் - தவறான காரியத்தைச் செய்வதற்கு!
உங்கள் கால்களை ஒரு அடிகூட முன்னே எடுத்து வைக்க உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், உங்களை வழிநடத்தச் சொல்லிக் கடவுளிடம் மன்றாடுவது என்ன நியாயம்?

கடவுளுக்குப் பணியாற்ற விரும்புகிறவர்களில் பெரும்பாலோர் போதகர்களாகவும், குருமார்களாகவுமே இருக்க விரும்புகிறார்கள்!
தலையில் காக்கை எச்சமிட்டதற்காக எரிச்சல் அடையாதீர்கள். கடவுள், எருமைக்குப் பறக்கும் சக்தி அளிக்காததை நினைத்துச் சந்தோஷப்படுங்கள்!

உனக்கு வந்திருப்பது எத்தனை பெரிய சோதனை என்று கடவுளிடம் புலம்பாதே! உனக்குத் துணையாக இருப்பவர் எத்தனை பெரிய கடவுள் என்று அந்தச் சோதனையிடம் சொல்!
கோயிலுக்குப் போவதால் மட்டும் ஒருவன் ஆன்மிகவாதி ஆகிவிட முடியாது! வொர்க் ஷாப்புக்கு அடிக்கடி போவதால் மட்டுமே ஒருவன் மெக்கானிக் ஆகிவிட முடியுமா?


கடவுள் நம் அண்டை வீட்டுக்காரர்களை பொதுவாகத்தான் படைக்கிறார். அவர்களை நாம்தான் நண்பர்களாகவோ, எதிரிகளாகவோ உருவாக்கிக் கொள்கிறோம்.