மா மழை போற்றுதும்!

ஆந்திர மாநிலத்தில் வயல், பயிர்கள், சூரியன் ஆகியவற்றுடன் மழையையும் தெய்வமாக வணங்கும் விழாவாக பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தைப் போலவே கர்நாடக மாநிலத்திலும் பாலில் அரிசியிட்டு, பொங்கல் வைத்து சூரியனை வழிபடுகிறார்கள்.

கேரளத்து நடனவிழா...

மார்கழி மாதத்தில் கேரளத்தில் பெண்கள் 'திருவாதிரைக்களி’ (கைதட்டி ஆடும்) எனும் நடன விழா கொண்டாடுகிறார்கள். ஜனவரி மாதத்தில் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள். மகா சக்தியின் அருள் பெறுவதற்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

காணிக்கைகள் ஏலம்!

பட்டுக்கோட்டைக்கு அருகில், பரக்கலக் கோட்டையில் வெள்ளால மரமாக காட்சி தருகிறார் ஸ்ரீபொது ஆவுடையார். இவருக்கு, திங்கள்தோறும் இரவு நடைபெறும் பூஜை யில் சமர்ப்பிக்கும் நெல், தானியம் போன்ற காணிக்கைகளை, பொங்கல் அன்று ஏலம் விடுவார்கள். அவற்றை ஏலம் எடுத்துச் செல்வதால் வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை.

தை கிருத்திகை!

உத்தராயன புண்ணிய காலத்தில் வரும் தை மாதக் கிருத்திகை மிகவும் விசேஷம். ''தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். முக்தியையும் கொடுப்பேன்!'' என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்திருக்கிறார்.

பைரவ விரதம்

தை மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் 'செவ்வாய்’ எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.

சூரியக் கோயில்கள்

இந்தியாவில் சூரியனுக்கான கோயில்கள்: தமிழகம்-சூரியனார் கோயில், ஒடிசா-கொனார்க் கோயில், பீகார்-தக்ஷிணார்கா கோயில் (கயா), மத்தியபிரதேசம்-பிரம்மன்யதேவ் கோயில் (உனாவ்), ஆந்திரா- அரச வல்லி சூரிய நாராயண ஸ்வாமி கோயில், குஜராத்- மோதேரா சூரியன் கோயில்.

மயிலார் நோன்பு

தை மாதம் மயிலார் நோன்பு, காணும் பொங்கல் முடிந்து 6 அல்லது 8-ஆம் நாள் கொண்டாடப்படும். சாதத்தை 6 அல்லது 12 சிறு உருண்டைகளாக பிடித்து, மூன்று மயிலிறகுகளை அதில் வைத்து உருட்டிவைத்து வழிபடுவர். இதை சாப்பிட்டால் உடனே அனைத்து வியாதிகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

சூரியன் வழிபட்ட சிவன்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகிலுள்ள தலம் ஞாயிறு. சூரியன் வழிபட்டதால் இப்பெயர். பிரம்மனின் சாபத்தால் தொழுநோய் கண்டு அவதியுற்ற சூரியன், இங்குள்ள தாமரைத் தடாகத்தில் நீராடி சிவனை வழிபட்டாராம். அதனால், இங்குள்ள சிவனாருக்கு ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் என்று திருப்பெயர்.

விடியும்வரை ஆட்டம்!

பொங்கல் பண்டிகையை அஸ்ஸாமில் 'போகலி பிஹீ’ என்ற பெயரில் கொண்டாடுவர். அன்று பாரம்பரிய உடை அணிந்து, இரவு முழுக்க உறவினர்கள், நண்பர்களுடன் ஆட்டம் போட்டு மகிழ்வர். சுவையான விருந்தும் தயாராகும். விடியும் வேளையில் பெரிய அளவில் தீ மூட்டி, அதை பய பக்தியுடன் வழிபடுவார்கள்.

பஞ்சாபில் யாகம்!

பொங்கல் பண்டிகையை பஞ்சாபில் 'லோரித் திருநாள்’ என்பர். குளிருக்கு விடை கொடுக்கும் விதமாக, பெரிய அக்னி குண்டங்கள் மூட்டி, யாகம் வளர்த்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.