ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

'சப்தரிஷி ராமாயணம்’ எனும் புத்தகம் எனக்கு மிகவும் பிடிக்கும். படிக்கும்போது என்னையே மறந்துவிடுவேன். இப்போது அந்த புத்தகம் தொலைந்துவிட்டது. யாரிடமாவது அந்த புத்தகம் இருந்தால், தந்து உதவுங்களேன்.

- கே.ஆர்.ஆனந்தலக்ஷ்மி, சென்னை

எங்கள் குலதெய்வத்தின் பெயர் 'பாதாள அரசி’. பெயர் மட்டும்தான் தெரியுமே தவிர, அந்த அம்பாளின் கோயில் இருக்கும் இடம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இரண்டு தலைமுறைக்கு மேலாக, எங்கள் குலதெய்வத்தின் கோயில் எங்கிருக்கிறது என்று தெரியாமல் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் பல பிரச்னைகள் வந்தவண்ணம் உள்ளன. குலதெய்வத்தை வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும் என உளமார நம்புகிறேன். எவருக்கேனும் 'பாதாள அரசி’ கோயில் குறித்து தகவல் ஏதேனும் தெரியுமென்றால், தயவுகூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன். இதனால் எங்கள் குடும்பம் மேலும் வளமுடன் இருக்கும்.

- கா.செல்வி, கடலூர்

சூரிய வழிபாடு செய்யவேண்டும் என்று நீண்டநாட்களாக ஆசை. ஆனால் எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் தெரியவில்லை. சூரிய பகவானை பூஜிப்பதற்கான மந்திரம், வழிமுறைகள் குறித்த விவரங்களை, தெரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும்.

- எம்.சேதுராமன், திருச்சி

காசியில் விசாலாக்ஷி, மதுரை மாநகரில் மீனாக்ஷி, காஞ்சிபுரத்தில் காமாக்ஷி என்பது பிரசித்தம்.

என் உறவினர் ஒருவர் காமாக்ஷி தொடர்புடைய பிரதான தலங்கள் நான்கு இருப்பதாகவும், அந்தத் தலங்கள் எங்கெங்கு உள்ளன என்பது துல்லியமாகத் தெரியவில்லை; தெரிந்தால், தரிசிக்க விரும்புவதாகவும் கூறினார். விவரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

- கோமதி சங்கர் பெங்களூரு

பழனி சாது ஸ்வாமிகளின் வரலாறும், அவர் அருளிய நூல்கள் மற்றும் 'சுனந்திர் உபதேசம்’ எனும் நூல் எங்கு கிடைக்கும் என்று விபரம் தெரிந்தவர்கள், தந்துதவ வேண்டுகிறேன்.

மேலும் 1972-ல் எஸ். கல்யாணராமன் எழுதிய, 'மஹா மகத்துவம் பொருந்திய சித்தர் நாயனார் திருவள்ளுவர் சரித்திரம் மருந்து ஆராய்ச்சி கதிர் (சித்தர் மாடி)’ எனும் நூல் எனக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டுகிறேன்.

- ஆர்.ரமேஷ், திருவள்ளூர்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

'திருமணம் ஆகாத ஆண்கள் விரைவில் திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும், அவர்களுக்கு ஏதாவது ஸ்லோகம் இருக்கிறதா?’ என்று 1.10.13 சக்தி விகடன் இதழில், திருப்பூர் வாசகி பி.பூங்கோதை கேட்டிருந்தார். அவருக்கான பதிலை சென்னை வாசகர் பரசுராமன் அனுப்பி வைத்துள்ளார். இந்தப் பாடல் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் நூலில், திருச்செந்தூர் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலை அனுதினமும் பாடி வர திருமண யோகம் அனைவருக்கும் கிட்டும்.

விறல்மாறன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல ஒன்ற
வினைமாதர் தம்தம் வசைகூற
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீரக்
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

'சிவம் எங்கே, சக்தி எங்கே’ என்று ராதாஜெயலக்ஷ்மி பாடிய பாடல் தனக்கு வேண்டும்’ என்று 26.11.13 சக்திவிகடன் இதழில் திருச்சி வாசகி எஸ்.வசந்தமீனாக்ஷி கேட்டிருந்தார். அவருக்கான பாடலை தந்து உதவியவர் சென்னையைச் சேர்ந்த வாசகர் என்.முருகன். அந்தப் பாடல் வாசகி வசந்தமீனாக்ஷிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.