தை மாதம் பிறந்த மறுநாள்- அதாவது, தை இரண்டாம் நாள் செய்யவேண்டிய அற்புதமான விரதம் இது.

விரதத்தன்று அதிகாலையில், காக்கை கரைவதற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய், அவரது சக்கரத்தில் இருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொண்டு வரவேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும் (இயலாதபோது, சாவித்ரி தேவி திருவுருவப் படம் வைத்தும் பூஜை செய்யலாம்). பிறகு, மௌன விரதம் பூண்டு, முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜை செய்து, ஒன்பதாவது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும்.

இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது, ஒன்பது ஜோடி முறங்களில், ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு, ஒன்பது மஞ்சள் கிழங்குகள், ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும்.

பிறகு, சுமங்கலிகளை வரவழைத்து, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து, ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் வீதம் தந்து, அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.

இவ்வாறு செய்பவர்கள், பேரன்- பேத்தி காலம் வரை சகலவிதமான ஐஸ்வரியங்களையும் பெற்று, மங்கல வாழ்வு வாழ்வார்கள். நீண்ட ஆயுள், செல்வம் முதலானவற்றைத் தருவதுடன், தவறாத சந்தான பாக்கியத்தையும் அருளக்கூடியது இந்த விரதம் என்பதே இதன் பொருள்.

பெண்களுக்கான இந்த விரதத்தை தருமபுத்திரரிடம் எடுத்துச் சொன்ன மார்க்கண்டேயர், ''இறந்தவர்களையும் உயிருடன் கொண்டுவரக் கூடியது இந்த விரதம்'' என்கிறார். அத்துடன் ''இந்த விரதத்தைப் பற்றிக் கேட்டவர்களும், கேட்கும்படியாகச் செய்தவர்களும் சிவ சாயுஜ்யத்தை அடைவார்கள்'' என்றும் அருளியுள்ளார்.

- பி.சந்திரமௌலி