வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களால் ஏற்படும் பயம் நீங்க, ஸ்ரீபைரவரை வழிபட வேண்டும். சீர்காழி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீசட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் அருளும் ஸ்ரீஅகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்பார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும்.

காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர், பாதாள பைரவர். கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்னதாக இந்த பைரவர்களை வழிபட, பணிகள் தடையின்றித் தொடரும் என்பது நம்பிக்கை.

பழநி மலை அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளியுள்ளார். இவர் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மூர்த்தி ஆவார்.

சேலம் சிருங்கேரி சங்கர மடத்தில் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளால் யந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சந்நிதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக அருளும் இவர் சாந்நித்தியம் மிகுந்தவர். மேலும், இங்குள்ள ஸ்ரீகாசிவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீகால பைரவரைத் தரிசித்து வழிபடுவதும் விசேஷம்!

சென்னை- திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழு பைரவர் சந்நிதிகள் உள்ளன.

தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சாற்றி, மனதார வழிபட, தீயசக்திகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்; சத்ரு பயம் அகலும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

- பணகுடி மீனா. சுவர்ணம், உடுமலைப்பேட்டை

மிருதங்க தட்சிணாமூர்த்தி!

ஞானமும் மங்கலமும் அருளக்கூடியது ஸ்ரீதட்சிணாமூர்த்தி தரிசனம். கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் நிலையில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு கோலங்களில் அருள்பாலிக்கிறார். அந்தத் தலங்களில் சில இங்கே:

தலை சாய்ந்த நிலை - வேலூர் மாவட்டம்- திருவூறல்.

சிற்ப அழகு - ஆலங்குடி

வீராசன நிலை - சென்னை, திரிசூலம்

யோகாசன மூர்த்தி - அனந்தழர், ஆந்திரா

வியாக்யான மூர்த்தி - காஞ்சி அருகில் அகரம் கோவிந்தவாடி.

நந்தியுடன் கூடிய மூர்த்தி - வள்ளலார்கோவில்- மயிலாடுதுறை

வீணையுடன் தட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு

மிருதங்க தட்சிணாமூர்த்தி - கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.

வீணையுடன் நின்ற நிலையில் - நாகலாபுரம் வேதநாராயணன் திருக்கோயில், திருத்தணி.

- எஸ்.கோபால், சென்னை-108

ஞாயிறு போற்றுதும்!

கண்கண்ட தெய்வமாய் நாம் நேரில் தரிசித்து வழிபடும் கடவுள் சூரியபகவான். தைப்பொங்கல் திருநாளின் நாயகனாம் சூரிய பகவான் குறித்த விசேஷ தகவல்கள் இங்கே உங்களுக்காக..!

சூரியனின் தேர் ஸம்வத்சர ஸ்வரூபமானது. சூரியனின் சொர்ணமயமான தேரை இழுத்துச் செல்லும், வேதத்தின் சந்தஸுகள் எனப்படும் ஏழு குதிரைகள்: காயத்ரீ, உஷ்ணிக், ஜகதி, அனுஷ்டிப், ப்ருஹதி, பங்க்தி, திருஷ்டி.

சூரிய ரதத்துக்குச் சாரதி அருணன்.

சூரியனின் திருநாமங்கள்...

1. தமோபஹ - இருளைப் போக்குபவன்

2. ரோஹித் - சிவப்பு நிறமுடையவன்

3. ஸப்தஸ்தா - ஏழு குதிரைகள் உடையவன்

4. த்வாத சாத்மன் - 12 பகுதிகளால் உருவானவன்

5. சஹஸ்ர அம்ச - 1000 கிரணங்கள் உடையவள்

6. க்ருஹராஜன் - கிரகங்களின் அரசன்

7. ஜகத்சஷீஸ் - உலகுக்குக் கண் போன்றவன்

8. சித்ரபானு - வெண்மையான கதிர்களைத் தருபவன்

9. திவாகரன் - பகலைத் தருபவன்

10. தக்ஷன் - திறன் மிக்கவன்

-ஆர்.பத்மப்ரியா, வில்லிவாக்கம்