Published:Updated:

திருவிளக்கு பூஜை - 132

திருவிளக்கு பூஜை - 132

திருவிளக்கு பூஜை - 132

‘அமைதியான மனசு வேணும்!’

புதுச்சேரி விளக்கு பூஜையில் வாசகி உருக்கம்

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, புதுச்சேரி லாஸ்பேட்டை ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி- ஸ்ரீமூகாம்பிகை அம்மன் திருக்கோயிலில் கடந்த 17.1.14 அன்று நடைபெற்றது. சக்தி விகடன் நடத்தும் 130-வது  விளக்கு பூஜை இது.

இந்த பூஜையில் திண்டிவனம், விழுப்புரம், மரக்காணம், கடலூர் எனப் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான வாசகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டார்கள்.

''இந்த வருஷம் மழை சரியாப் பெய்யவே இல்லீங்க. மழை பெஞ்சாத்தானே விவசாயம் செழிக்கும்! தண்ணீர் பிரச்னையும் இல்லாம இருக்கும்! அதனால, இந்த வருஷமாவது நல்ல மழை பெய்யணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று சொல்லும் சரஸ்வதி அம்மாள், விழுப்புரத்திலிருந்து வந்திருந்தார்.

திருவிளக்கு பூஜை - 132

''என் அக்கா பையன், இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் கோபப்படுறான். எல்லார்கிட்டயும் எறிஞ்சு விழறான். சமீப காலமா அவனோட இந்த நடவடிக்கையால வீட்லயும் நிம்மதி இல்லை; அவன் வேலை செய்யற இடத்துலயும் இதனால அவனுக்குப் பிரச்னைகள். அவனுடைய குழப்பங்கள், பிரச்னைகள் தீர்ந்து, அவன் மனசுல அமைதி ஏற்படணும். அவன் பழையபடியே கலகலப்பா இருக்கணும். அதான் என் பிரார்த்தனை'' என்று கடலூர் வாசகி பிரமீளா தெரிவித்தார்.

''ஒட்டுதலா ஒண்ணா இருந்த எங்க கணவரின் குடும்பத்துக்குள்ளே பிரச்னையாயிருச்சு. வீட்டைப் பிரிக்கிறது அதுஇதுன்னு கோர்ட்ல கேஸ் போடுற அளவுக்குப் பிரச்னை பெருசாகிட்டே இருக்கு. பண்டிகை, விசேஷம்னா குடும்பத்தார் எல்லாரும் எங்க மாமனார் வீட்ல ஒண்ணா கூடிக் கொண்டாடுவோம். இப்ப யார் கண்ணு பட்டுச்சோ... எல்லாரும் மூலைக்கு ஒருத்தரா முடங்கிப் போயிட்டோம். பழையபடி எல்லாரும் ஒத்துமையா இருக்கணும். பண்டிகைகளைச் சிறப்பாக் கொண்டாடி மகிழணும்'' என்று கண்ணீருடன் சொன்னார் வாசகி கலாதேவி.

எல்லோரின் பிரார்த்தனைகளும் ஈடேறட்டும்!

படம்: ஜெ.முருகன்

அடுத்த கட்டுரைக்கு