பாரதத்தின் ஆன்மச் செழிப்புக்கும், மேன்மைக்கும், இங்கு வாழ்ந்த மகரிஷிகளுக்கு பெரும்பங்கு உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் யாக்ஞவல்கிய மகரிஷி. சூரியபகவானிடம் இருந்து வெளிக் கொணர்ந்த சுக்ல யஜுர்வேதம், ஈசாவாஸ்ய, பிருஹதாரண்யக உபநிஷத்துகள் முதலான ஞானப் பொக்கிஷங்களை உலகுக்கு அருளிய ஸ்ரீயாக்ஞவல்கியரின் மகிமையையும், அவரது ஞான உபதேசங்களையும் அறிந்துணர்ந்து கலியுக மக்கள் பயனடையும் வகையில், அற்புதமான கோயில் பல்லாவரம் பெருமாள் கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டது.

காயத்ரிதேவி, மைத்ரேயி, காத்யாயினி உடன் ஸ்ரீயாக்ஞவல்கியர், ஸ்ரீசூரியநாராயணர் ஆகியோர் அருளும் இந்த ஆலயத்துக்கு 2000-ம் வருடம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 13 வருடங்களுக்குப் பிறகு 2014 பிப்ரவரி 9-ம் நாள் (ஞாயிறு) அன்று... காஞ்சி மகா பெரியவா அனுக்கிரகத்தோடும், பூஜ்யஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசியுடனும் யாக்ஞவல்கிய சபாவினரின் பெருமுயற்சியில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு அருள்பெறலாம்.