Published:Updated:

'எல்லாரும் நல்லாருக்கணும்!’

சென்னை விளக்கு பூஜையில் வாசகி பிரார்த்தனை

க்தி விகடன்  மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, சென்னை காசிகோவில்குப்பத்தில் உள்ள ஸ்ரீஷீர்டி சாயிபாபா மந்திரில், கடந்த 25.2.14 அன்று நடைபெற்றது. சக்தி விகடனின் 133-வது விளக்கு பூஜை இது. எண்ணூர், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், பெரம்பூர், அயனாவரம் என சென்னையின் பல இடங்களில் இருந்தும் இந்தப் பூஜையில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் வந்திருந்தார்கள், பெண்கள்.

''என் கணவருக்கு உடம்பு சரியில்லை. அடிக்கடி படுத்தி எடுத்துக்கிட்டே இருக்கு. அவர் பூரணமா குணமாகணும். பொண்ணு ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்கணும். சக்தி விகடன் விளக்கு பூஜைல கலந்துக்கறது, இதான் முதல் முறை. மிகப்பெரிய நிம்மதியையும் சந்தோஷத்தையும் உணர்றேன்'' என்றார் வாசகி மைதிலி.

''ஜனங்க அத்தனை பேரும் ஆரோக்கியமா, அமைதியா இருந்துட்டாலே நம்ம நாடு நல்லா இருக்கும்; சுபிட்சமா இருக்கும். அதனால, எல்லாரும் நல்லாருக்கணும். என் ஒரே வேண்டுதல் இதுதான்!'' என்றார் வாசகி செல்வி.

'எல்லாரும் நல்லாருக்கணும்!’

''நான் டென்த் படிச்சிட்டிருக்கேன். நல்லா பரிட்சை எழுதி, நிறைய மார்க் வாங்கணுங்கறதுதான் என் வேண்டுதல்'' என்றார் மாணவி பவித்ரா.

''முதல்முறையா சக்தி விகடன் விளக்கு பூஜைல கலந்துக்கறேன். மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இனி எல்லா நல்லதும் என் வாழ்க்கைல நடக்கும்கிற நம்பிக்கையை இந்த நிம்மதி ஏற்படுத்தியிருக்கு. இங்கே வந்திருக்கிற எல்லாரோட வேண்டுதலும் பலிக்கணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று தெரிவித்தார் வாசகி காமாட்சி.  

மகளின் படிப்புக்காக வாசகி சுஜாதாவும், மழை பெய்ய வேண்டும் என்று வாசகி கல்பனாவும் வேண்டிக்கொண்டனர்.

எல்லோரின் பிரார்த்தனைகளுக்கும் செவிசாய்த்து அருளுவார் ஸ்ரீசாயிநாதன்.

கட்டுரை, படம்: க.பாலாஜி

அடுத்த கட்டுரைக்கு