Published:Updated:

ஸ்ரீமுஷ்ணம் விளக்கு பூஜையில் வாசகி கண்ணீர்

படுத்த படுக்கையா இருக்கிற கணவர் பிழைச்சு வந்தாப் போதும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

க்தி விகடனும், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில், ஸ்ரீநித்தீஸ்வரர் கோயிலில் கடந்த 11.3.14 அன்று விமரிசையாக நடைபெற்றது. சக்தி விகடன் நடத்தும் 134-வது விளக்கு பூஜை இது.

இதில் சேத்தியாதோப்பு, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்குடி, வடலூர், பண்ருட்டி எனப் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான வாசகியர் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கலந்துகொண்டார்கள்.

ஸ்ரீமுஷ்ணம் விளக்கு பூஜையில் வாசகி கண்ணீர்

80 வயது மூதாட்டி சுப்பனரசு கூறும்போது, ''திருவிளக்கு பூஜை செய்வதால், குலதெய்வத்தின் அனுகூலமும் கிடைக்கும் என்று சொல்வார்கள். இதில் இன்னொரு சிறப்பு... நாமே நம் கைப்பட செய்கிற பூஜைக்குப் பலன் அதிகம் என்பது ஐதீகம். எனவே, அப்படியான விளக்கு பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்வது மிகுந்த பலனைத் தரும்'' என்று நெகிழ்ந்து சொன்னார்.

ஸ்ரீமுஷ்ணம் பிராமண சங்கத்தின் மகளிரணி சேர்மன் ராஜேஸ்வரி, ''உலக மக்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழவேண்டும் என்று பிரார்த்தித்தேன்'' என்றார்.

''என் மகனுக்குத் திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. 'சீக்கிரமே எனக்கு பேரக் குழந்தையைக் கொடுப்பா!’னு வேண்டிக்கிட்டேன்'' என்று ஏக்கமும் நம்பிக்கையும் கலந்த குரலில் சொன்னார் காட்டுமன்னார்குடி வாசகி காமாட்சி.

''என் கணவர் வண்டியில போகும்போது ஒரு விபத்து ஏற்பட்டு, கடந்த ரெண்டு மாசமா ஆஸ்பத்திரில படுத்த படுக்கையா இருக்கார். அவர் சீக்கிரமே குணமாகணும். பழையபடி நடமாடணும். அதான் என் வேண்டுதல், ஆசை எல்லாமே!'' என்று சொல்லி முடிப்பதற்குள் பண்ருட்டி வாசகி வள்ளியின் கண்கள் கலங்கிவிட்டன.

அவரின் பிரார்த்தனை விரைவில் நிறைவேற அனைவரும் வேண்டிக்கொண்டார்கள்.

எல்லோரின் வேண்டுதலையும் ஈடேற்றித் தருவார் ஸ்ரீநித்தீஸ்வரர்!

- எம்.ராதாகிருஷ்ணன்

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு