Published:Updated:

புதிர் புராணம் - புதுமை போட்டி - 24

இ.லோகேஸ்வரி

அநபாயச் சோழனுக்கு திடுமென ஒரு சந்தேகம் வந்தது. உலகினும் பெரிது எது? கடலினும் பெரிது எது? மலையினும் பெரிது எது? இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லும்படி அமைச்சரைப் பணித்தான். மறுநாள் காலையில் இவற்றுக் கான பதில்களோடு வருவதாகச் சொல்லிவிட்டு, கலக்கத்துடன் வீடு திரும்பினார் அமைச்சர். மறுநாள்...

* தக்க தருணத்தில் ஒருவர் செய்யும் உதவி சிறிதெனினும், அது உலகை விடப் பெரிது!

* பிரதிபலன் பாராமல் ஒருவர் செய்யும் உதவியின் சிறப்பை ஆராய்ந்தால், அது கடலைவிடப் பெரிது!

* உயர்ந்த நிலையில் இருந்தும், செருக்குடன் திகழாமல் அடக்கத்துடன் திகழ்பவனின் தோற்றம், மலையினும் பெரிது!

- எனப் பொருள் தரும் மூன்று திருக்குறள்களை மேற்கோள் காட்டி, பதிலளித்தார் அமைச்சர். அநபாயன் மகிழ்ந்து, பாராட்டினான். ஆனால், ''இந்த பதில்களைச் சொன்னது என் மகன் அருள்மொழிவர்மன்'' என அமைச்சர் சொல்ல, மன்னன் வியப்புற்று, அவனை அழைத்து, அமைச்சராக்கி கௌரவித்தான். இவர்தான் பெரிய புராணத்தை எழுதியவர். பெரியபுராணம் அரங்கேற்றத்தின்போது அநபாய சோழன் சாமரம் வீச, இவர் தனது காப்பியச் சுவடிகளை யானை மீது வைத்து, தானும் அருகமர்ந்து வரும் காட்சியைத்தான் அருகில் உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள்.

புதிர் புராணம் - புதுமை போட்டி - 24
புதிர் புராணம் - புதுமை போட்டி - 24
புதிர் புராணம் - புதுமை போட்டி - 24

போட்டிக்கான விதிமுறைகள்:

இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

 சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.  உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 25.3.14.

 விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்பவேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப் படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி: சக்தி விகடன், புதுமைப் போட்டி-24, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

புதிர் புராணம் - புதுமை போட்டி - 24
அடுத்த கட்டுரைக்கு