Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

Published:Updated:
உதவலாம்... வாருங்கள்!

• முருகப் பெருமானின் மூல மந்திரம் ஜபித்து, வழிபட விரும்புகிறேன். யாரேனும் எனக்கு அந்த மூலமந்திரத்தைத் தந்து உதவினால் மகிழ்வேன்.

                               - வீ.பிந்துமாதவன், ஈரோடு  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• எங்கள் குல தெய்வம் இரிசி (காட்டேரி என்கின்றனர்). கந்த சஷ்டி கவசத்தில்கூட எங்கள் குல தெய்வத்தின் பெயர் இடம்பெறும். ஆனால், எங்களின் குல தெய்வத்துக்குக் கோயில் எங்கே உள்ளது, எப்படி வழிபடுவது என எதுவும் தெரியவில்லை. இதனால், பல வருடங்களாக குலதெய்வ வழிபாடு செய்யாமலேயே இருக்கிறோம். இதுகுறித்து அறிந்தவர்கள், தகவல் தந்து உதவுங்களேன்!

- எஸ்.குருநாதன், சேலம்

• அஷ்டதிக் பாலகர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல், அஷ்டதிக் கஜங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதாவது, எட்டுத் திசைக்கும் எட்டு யானைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தாருங்களேன்!

  -எஸ்.மருதாசலம், கோயம்புத்தூர்

உதவலாம்... வாருங்கள்!

• திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் வெள்ளக்கோவில் எனும் ஊரில், திருமலையம்மன் கோயில் உள்ளது. இதுவே எங்களின் குலதெய்வம். ஆனால், திருமலையம்மனின் சரிதம், வழிபடும் முறை என எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அறிந்தவர்கள் தகவல் தந்தால், குலதெய்வத்தை அறிந்து, உணர்ந்து பூஜைகள் செய்ய உதவியாக இருக்கும்.

- சி.மாலதி, சென்னை

• கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவன் நான். ஆனால், சில தருணங்களில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். என்ன காரணம் என்றே தெரியாமல் கவலையும் வேதனையும் சூழ்ந்து இம்சிக்கிறது. மனம் நிம்மதியாக இருக்க ஸ்லோகம் ஏதும் உள்ளதா? இருப்பின், தந்து உதவுங்களேன்!

-க.பாலமுருகன், சிவகாசி

• எங்களின் குலதெய்வம் பட்டுக்காரி அம்மன் என்கிறார்கள். இந்த அம்மன், ஏழு அண்ணன்களுக்குத் தங்கையாக வளர்ந்து, அவர்களில் ஓர் அண்ணனின் கோபத்தால் தலை வெட்டப்பட்டு இறந்ததாகச் சொல்வார்கள். ஆனால், பட்டுக்காரி அம்மனுக்குக் கோயில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை. இதனால், பல வருடங்களாக குல தெய்வ வழிபாடு என்பதே எங்கள் குடும்பத்தில் நடக்கவில்லை. பட்டுக்காரி அம்மனின் கோயில் எங்கு உள்ளது, எப்படிச் செல்வது, வழிபடும் முறைகள் என்ன என்பது குறித்து எவரேனும் தகவல் தந்தால், குலதெய்வ வழிபாடு செய்ய உதவியாக இருக்கும்.

-  சு.வேலாயுதம், சான்றோர்குப்பம்.

• 'ம்ருத ஸஞ்ஜீவன  கவசம்’ என்ற ஸ்லோகம் என்னிடம்  இருந்தது. அதை எப்படியோ, எங்கோ தவறவிட்டு விட்டேன். எவருக்கேனும் அந்த ஸ்லோகம் தெரிந்தால், தந்து உதவுங்கள்.

                - வி.சிவசுப்பிரமணியன், மதுரை  

உதவிக்கரம் நீட்டியவர்கள்

சூரிய வழிபாடு மற்றும் விவரங்கள் குறித்து, கடந்த 21.1.14  தேதியிட்ட சக்தி விகடன் இதழில்,  திருச்சி வாசகர் எம்.சேதுராமன் கேட்டிருந்தார்.

சூரிய நமஸ்காரம் எனும் வழிபாடு, ஒவ்வொரு ஞாயிறன்றும் சென்னை, பெரம்பூர் சங்கர மடத்தில் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில்  பெரம்பூர் தவிர, வேறு எங்கும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில்லை என்று பெரம்பூரைச் சேர்ந்த வாசகர் வீ.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும், சூரிய வழிபாடு குறித்த ஸ்லோகங்களை கரூர் வாசகர் ஏ.கே.கோபால கிருஷ்ணன் மற்றும் சென்னை வாசகி ராஜேஸ்வரி மதி ஆகியோர் அனுப்பி உள்ளனர். அவை,  வாசகர் சேதுராமனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

உதவலாம்... வாருங்கள்!

''சப்தரிஷி ராமாயணம் படிக்க ஆசைப்படுகிறேன். அது எங்கு கிடைக்கும்? எவரிடமேனும் இருந்தால் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்'' என்று, 21.1.14 தேதியிட்ட சக்தி விகடன் இதழில், சென்னை வாசகி கே.ஆர்.ஆனந்தலட்சுமி கேட்டிருந்தார்.

இந்த நூலை, பெங்களூரு வாசகி ஹெச்.அம்மாளு அம்மாள்  மற்றும் லலிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அனுப்பி உள்ளனர். இது சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பெங்களூரு வாசகி கோமதிசங்கர், ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருத்தலங்கள் எங்கெல்லாம் உள்ளன என்று கடந்த 21.1.14 தேதியிட்ட இதழில் கேட்டிருந்தார்.

ஸ்ரீகாமாட்சி அம்பாள் எனும் திருநாமத்துடன் காஞ்சிபுரம், மாங்காடு, கொண்டாபுரம்(காவேரிப்பாக்கம்), தர்மபுரி ஆகிய தலங்களில் கோயில்கொண்டிருக்கிறாள் எனும் தகவலைத் தந்துள்ளார் சேலம் வாசகர் ர.கணபதி.

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.