சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்

'ஈஸ்வர அம்சம்!’

கான்கள் எல்லோரும் ஆதியந்தம் இல்லாத அருளாளர்கள். அவர்களுடைய தோற்றம்- ஸித்தி என்பதெல்லாம் உலக நடைமுறைக்காக மட்டுமே! மற்றபடி, அவர்களின் வாக்காலும், செயலாலும், அனுக்கிரகத்தாலும் என்றென்றும் இந்த உலகில் அவர்களின் சாந்நித்தியம் நிறைந்திருக்கும். இதற்கு உதாரணம் நம் மகாபெரியவாள்.

அவரைப் பற்றி சக்தி விகடனில் வெளியான கட்டுரைகளை நிறையப் படிச்சிருக்கேன். சில வருடங்களுக்கு முன்னால், உபன்யாசகர் ஸ்ரீகணேச சர்மாவின் உபன்யாசத்தில் நான் கேட்ட சில தகவல்களை, உங்களோடு பகிர்ந்துக்க விரும்பறேன்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்

பெரியவர் ஒருவர் அனுதினமும் வந்து மகாபெரியவாளுக்கு வில்வ மாலை சாற்றுவாராம். 'உனக்கு எங்கேருந்து இவ்ளோ வில்வம் கிடைக்கறது?’ன்னு பெரியவா அக்கறையா விசாரித்திருக் கிறார். அதைப் பார்த்த இன்னொரு மாமி, 'நானும் இனிமே வில்வம் கொண்டு வரேன். பாதியை ஏகாம்பரேஸ்வரருக்கும், மீதி பாதியை பெரியவாளுக்கும் சமர்ப்பிக்கப் போறேன்’ என்றாளாம். இதைச் செவிமடுத்த மகாபெரியவா, ''எங்கே கொடுத்தால் என்ன? எல்லாம் இந்தத் தலையிலதானே விழறது!’ன்னு சிரிச்சிண்டே சொன்னாராம். ஆஹா... எத்தனை சூட்சுமமா, தான் ஈஸ்வர அம்சம்கிறதை உணர்த்திட்டார் பாருங்கோ!

அதேபோல, வயதான பெண்மணி ஒருத்தியை ஆசிர்வதித்தவர், 'உனக்கு என்ன வேணும்?’னு பரிவோடு கேட்டிருக்கார். அதற்கு அந்த அம்மாள், 'பெரியவா அனுக்கிரகத்தால எனக்கொரு குறையும் இல்லே. பத்ரிநாத் போகணும்னு ரொம்ப நாளா ஆசை. அது நிறைவேறினா போதும், சுவாமி’ என்றாளாம். உடனே பெரியவா, ''இப்போ நீ எங்கே இருக்கேன்னு நினைச்சுண்டிருக்கே? பத்ரிநாத்லதானே இருக்கே!’ என்று சொல்ல, அந்த அம்மாள் புரியாமல் விழித்திருக்கிறாள்.

பெரியவா புன்னகையோடு, 'மேலே பார்! இது என்ன மரம் தெரியுமா? இலந்தை மரம். இலந்தைக்கு

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்

வடமொழியில் 'பத்ரி’ன்னு சொல்லுவா. பத்ரிக்கு அடியில் இருப்பவன் பத்ரிநாராயணன்’ என்று கூறி, நாராயண தத்துவத்தையும் உணர்த்தினாராம்.

ஜெய ஜெய சங்கர...

ஹர ஹர சங்கர..!

- லக்ஷ்மி ஸ்வாமிநாதன்
(ஹரிஓம் பாட்டி)

எட்டுத் திக்கும் முழங்கட்டும் வேத ஒலி!

ந்து தர்மம் மிக உன்னதமானது. இந்தப் பூவுலகில் சத்தியத்தை நிலைநாட்டுவதில் சதுர்வேதங் களின் பங்கு அளப்பரியது. 'ஊர்த்வ மூல மவாக்சாகம் வ்ருக்ஷய்யோ வேத ஸம்ப்ரதி’ என்பது வேத வாக்கு. வேதவிருட்சமானது மேல்பாகத்தில் வேர் பகுதியும், பூமி பாகத்தில் கிளைகளுடனும் திகழ்வதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கிளைகள் செழித்தால் தான் உலகமும் தழைத்தோங்கும். அதற்கு நம்மாலான பெரும் முயற்சிகளைச் செய்யவேண்டும் என்பது பெரியோர்கள் ஆக்ஞை.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்

அதற்கேற்ப, வேதத்தின் மகத்துவத்தை அடுத்து வரும் சந்ததியினரும் உணர்ந்து பயன்பெறும் வகையில், பிரமாண்டமான வேத சம்மேளனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள், 'ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ம அனுக் ரஹா டிரஸ்ட்’ எனும் அமைப்பினர். ஸ்ரீகாஞ்சி காமகோடி  பீடாதிபதிகளான பூஜ்யஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுக்ரஹத்தாலும், பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசி யுடனும், மற்றுமுள்ள அனைத்து சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆசியுடனும் ஸ்ரீவஸந்த நவராத்திரி மஹோத்ஸவம்- வேத சம்மேளனம் நிகழவுள்ளது.

வரும் பங்குனி மாதம் 21, 22, 23 (ஏப்ரல் 4, 5, 6) ஆகிய மூன்று நாட்கள், சென்னை திருமுல்லைவாயில், ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாவில் (எம்.டி.எச்.ரோடு) இது நடைபெறவுள்ளது. நான்கு வேதங்களிலும் உள்ள வேத பாராயணங்கள், காமயார்த்த ஹோமங்கள் என நிகழும் இந்த வேத சம்மேளனத்தில் கலந்துகொண்டு அன்பர்கள் பயன்பெறலாம். மூன்று நாட்களும் வேதம் குறித்த கண்காட்சியும் நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

- எஸ்.கணேஷ், சென்னை-53

ஆறு வகைக் குளியல்!

குளியல் உடம்பு சுத்தத்துக் காக மட்டு மில்லீங்க; அதனால், உள்ளமும் உற்சாகம் ஆகும். மனசுக்குச் சோர்வா உணரும் போது, 'ஜில்’ தண்ணீரில் ஜம் முன்னு ஒரு குளியல் போட்டுப் பாருங்க; உடம்பும் உள்ளமும் தக்கையாயிடும்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்

எங்க பக்கத்து வீட்டுப் பாட்டிம்மா ஒரு தகவலைப் பகிர்ந்துக்கிட்டாங்க. குளியலில் ஆறு வகை உண்டாம். அதை நீங்களும் தெரிஞ்சுக்கோங்களேன்.

நித்யம்: காலையிலேயே குளிப்பது;

நைமித்திகம்: சவ ஊர்வலத்துக்குப் பின் சென்று குளிப்பது;

காம்யம்: குளத்தில் குளிப்பது;

கிரியாங்கம்: வழிபாட்டுக்கு முன் குளிப்பது;

மலாபகர்ஷணம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது;

க்ரியாஸனம்: புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது.

- லாவண்யா, மேலூர்

கேட்கிறோம்...

திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய மகாபாரதம் புத்தகம் என்னிடம் இருந்தது தொலைந்துவிட்டது. இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற தகவல் அறிந்த வாசக நண்பர்கள், எனக்கு முகவரி தந்து உதவுங்களேன்.

- என்.லலிதா, விருதுநகர்

சொல்கிறோம்...

சக்தி விகடன் 1.4.14 தேதியிட்ட இதழில், 'உதவலாம் வாருங்கள்’ பகுதியில், அஷ்டதிக்கு யானைகள் குறித்து, கோவை வாசகர் எஸ்.மருதாசலம் கேட்டிருந்தார். அவருக்காக இந்தத் தகவல்... அஷ்டதிக்கு யானைகள்: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சுகம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீபம்.

- மா.பா.சங்கரநாராயணன், முத்துப்பேட்டை

(இந்தத் தகவலை குடவாசல் வி.மோகன கல்யாண், பெங்களூரு அனந்த பத்மநாபன், பரமக்குடி மீ.சீனிவாசன் ஆகிய வாசகர்களும் தந்துள்ளார்கள்.)

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.