Published:Updated:

புதிர் புதிது! - 2

தி. தெய்வா, ஓவியம்: தமிழ்

ந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து சுமார் 112 கி.மீ. தொலைவில் உள்ளது அகோபிலம். இந்தத் தலத்தில் ஸ்ரீஜ்வால நரசிம்மர், ஸ்ரீஅகோபில நரசிம்மர், ஸ்ரீமாலோல நரசிம்மர், ஸ்ரீக்ரோடகார நரசிம்மர், ஸ்ரீகரஞ்ச நரசிம்மர், ஸ்ரீபார்கவ நரசிம்மர், ஸ்ரீயோகானந்த நரசிம்மர், ஸ்ரீசத்ரவட நரசிம்மர், ஸ்ரீபவன நரசிம்மர் என நவ நரசிம்மர்களைத் தரிசிக்கலாம். அதுமட்டுமா? பவநாசினி நதி, உக்ர ஸ்தம்பம், ப்ரகலாத மொட்டு, கருடாத்ரி, வேதாத்ரி சிகரங்கள் என தரிசிக்க வேண்டிய புண்ணிய இடங்களும் இங்கு ஏராளம்!  

ஆனால் என்ன... சந்நிதிகள் அனைத்தும், பரந்துவிரிந்து கிடக்கும் 'நல்லமலா’ வனப்பகுதியில் மூலைக்கு ஒன்றாக அமைந்திருக்கின்றன. பக்தர்கள் தகுந்த வழிகாட்டியுடன் பயணிக்க வேண்டும். இல்லையெனில், காட்டுக்குள் வழிதவறிவிட வாய்ப்பு உண்டு! இங்கே நமது பரமுவும் அகோபிலக் காட்டுக்குள் வழிதவறி விட்டார்! குடும்பத்துடன் தவிக்கும் அவர், நடுவில் இருக்கும் கட்டங்களில் புகுந்து வெளிவந்துவிட்டால், அவர் மேல் அகோபிலம் சந்நிதியை அடைந்துவிடலாம். அவருக்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.

கீழே தரப்பட்டிருக்கும் குறிப்புகளுக்கு ஏற்ப விடைகளைக் கண்டுபிடித்து குறிப்பிட்ட கட்டங்களை நிரப்பி, அவருக்குப் பாதை காட்டுங்கள். அத்துடன் கட்டங்களில் வட்டத்துக்குள் சிக்கியிருக்கும் திருமால் அடியவர் ஒருவரின் பெயரில் மூன்றெழுத்துக்கள் கிடைக்கும். நான்காவது எழுத்தை நீங்களே யூகித்து, அந்த அடியவரின் முழுப்பெயரை கீழேயுள்ள கட்டத்தில் நிரப்பி அனுப்புங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புதிர் புதிது! - 2
புதிர் புதிது! - 2

போட்டிக்கான விதிமுறைகள்:

புதிர் புதிது! - 2

இந்த இரண்டு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 22.4.14.

விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்பவேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி: சக்தி விகடன், புதிர் புதிது - 2, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

புதிர் புதிது! - 2