தி.தெய்வா, ஓவியம்: தமிழ்
பிரசித்திப்பெற்ற இந்தக் கோயிலைத் தரிசிக்க, வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கிறது இந்த நண்பர்கள் குழு. கோயிலுக்கு நான்கு வாயில்கள். நண்பர்களுக்கோ பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைய ஆசை. மொழி தெரியாத ஊர் என்பதால், பிரதான வாயிலைக் கண்டுபிடிக்க நீங்கள்தான் அவர்களுக்கு உதவ வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...
படத்தில் ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு எண்ணும் அதன் அருகில் உரிய கட்டங்களும் இடம்பெற்றிருக்கும். நீங்கள், குறிப்புகளுக்கான விடைகளைக் கண்டறிந்து, ஓவ்வொரு வாயிலுக்கும் எதிரில் உள்ள கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிறகு கட்டங்களில் வண்ணத்தில் சிக்கியிருக்கும் எழுத்தை மட்டும் சேகரித்து ஒழுங்கு படுத்தினால், 'நற்றுணையாவது நமசிவாயவே’ என்று சிவனாரைப் பாடித் தொழுத அடியவர் ஒருவரது சிறப்புப்பெயர் கிடைக்கும். அந்த சிறப்புப் பெயரில் மூன்றாவது எழுத்து இடம்பெற்றிருக்கும் கட்டம் எந்த வாயிலுக்கு அருகில் உள்ளதோ அதுவே பிரதான வாயில்!
புதிரைக் கண்டுபிடித்து கோயிலின் பிரதான வாயிலை நண்பர்களுக்கு சுட்டிக்காட்டுவதுடன், புதிருக்கு உரிய விடையான அடியவரின் சிறப்புப் பெயரையும், புதிருக்கான சிறப்புக் கேள்வியையும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
குறிப்புகள்
வாயில்-1: தமிழ்ச் சங்கத்தில் இறைவனுடன் வாதிட்ட புலவர்
வாயில்-2: தந்தைக்கு உபதேசித்ததால், 'அப்பனுக்கு பாடம் சொன்ன -----------’ என்று முருகனைப் போற்றிப் பாடுவார்கள்.
வாயில்-3: நட்சத்திரங்களில் முதலாவது!
வாயில்-4: சத்திரிய வம்சத்தை அழிக்க சபதமேற்ற திருமாலின் அவதாரம் ------------ ராமன்.

சிறப்புக் கேள்வி: அடியவர் எந்தச் சூழலில் மேற்சொன்ன வரிகள் இடம்பெற்ற பாடலைப் பாடினார்?

போட்டிக்கான விதிமுறைகள்:
இந்த இரண்டு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.
சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 6.5.14.
விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்பவேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.
ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!
அனுப்ப வேண்டிய முகவரி: சக்தி விகடன், புதிர் புதிது - 3, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
