Published:Updated:

ஆன்மிக பிட்ஸ்!

ஆன்மிக பிட்ஸ்!

ஆன்மிக பிட்ஸ்!

ஆன்மிக பிட்ஸ்!

Published:Updated:
ஆன்மிக பிட்ஸ்!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி தரிசனம்!

சிவபெருமானின் யோக வடிவம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வடிவம். யோகம், ஞானம் அருளும் இவரை ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீவியாக்கி யான தட்சிணாமூர்த்தி என்று நான்கு வடிவங்களாக விவரிக்கின்றன ஞானநூல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில், தும்புரு, நாரதர், சுகர் ஆகியோருக்கு வீணையின் நுட்பங்களை வாசித்துக்காட்டியது, ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி என்கின்றன புராணங்கள். வீணையுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருளும் திருத்தலங்கள் பல உண்டு.

மைசூரில் உள்ள நஞ்சன்கூடு-ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் வீணையுடன் அருளும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நின்ற நிலையில், கையில் வீணையுடன் காட்சித் தருகிறார்.

திருப்பூந்துருத்தி திருக்கோயிலிலும் வீணையுடன் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள வெட்டுவான் கோவிலில் மிருதங்கம் ஏந்திய தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். திருவிடை மருதூரில் உமையம்மையுடன் கூடிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

- ராஜுராமன், சென்னை-44

ஆன்மிக பிட்ஸ்!

துறவுக்குத் தேவை தூய அன்பு!

வைணவ ஆசார்யர் ஸ்ரீராமாநுஜர், ஊர் ஊராகச் சென்று இறை தரிசனத்துடன், பாமர மக்களுக்கு பக்தி உபதேசமும் செய்து வந்தார். ஒரு நாள், துறவு நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவன் இவரை வணங்கி, தீட்சை பெற விரும்புவதாகத் தெரிவித்தான்.

அவன் கண்களை உற்றுப் பார்த்தார் ஸ்ரீராமாநுஜர். 'இவன் அன்பில்லாதவனோ!’ என்ற ஐயம் அவருக்குள் எழுந்தது. அவனிடம், ''ஏனப்பா! வாழ்வில் எந்தப் பெண்ணையாவது நீ விரும்பி இருக்கிறாயா?''  என்று கேட்டார் ஸ்ரீராமாநுஜர்.

துறவி, ''என்ன ஸ்வாமி... தாங்களா இத்தகைய கேள்வியைக் கேட்பது?'' என துடிதுடித்தபடி கேட்டான். ''ஆம்! பதில் சொல்!'' என்றார் ஸ்ரீராமாநுஜர்.

''ஸ்வாமி... அத்தகைய ஆசை எனக்கு இதுவரை வந்ததில்லை. இனிமேலும் வராது!''

''யோசித்துச் சொல். கற்பனையிலாவது எந்தப் பெண் மீதாவது அன்பு செலுத்தி இருக்கிறாயா?''

''நிச்சயமாக இல்லை. என்னுடைய கருத்தெல்லாம் அன்பு மீது இல்லை. முழுக்க முழுக்க துறவு பற்றிய எண்ணமே என்னைப் பற்றியுள்ளது. தயவு செய்து என் லட்சியமான தீட்சையை தாங்கள் வழங்குவதோடு, என்னை தங்களுடைய  சீடனாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.''

''அப்பனே, அன்பின் உச்ச நிலையே வழிபாடு. அடிப்படையான அன்பு இல்லாத உன் மன நிலைக்கு, துறவு சரிப்பட்டு வராது. எனவே, உனக்கு தீட்சை வழங்குதல் எளிதல்ல!'' என்ற ஸ்ரீ ராமாநுஜர் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism