
ஆசிரியர்: புலவர். கோ.அருளாளன்
வெளியீடு: திருவள்ளுவர் பதிப்பகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
4.39, வங்கித் தெரு, நல்லாண்பிள்ளைபெற்றாள், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
பக்கங்கள்: 240
விலை: 150/ -
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் நுண்பொருளை ஆராய்ந்து, எழுதப்பட்ட உரை நூல்கள் ஏராளம் உண்டு. அவை ஒவ்வொன்றும் ஓவ்வொரு விதத்தில் சிறப்புத்தன்மையுடன் திகழ்ந்தாலும், அவற்றிலிருந்து வேறுபட்டு, ஒரு புதிய முயற்சியாக திருக்குறளின் கருத்துக்களை விருத்தப்பாவாக விளக்கி, 'குறளறம்’ எனும் தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் புலவர் கோ. அருளாளன்.
திருக்குறள், அதன் கருத்தைச் சொல்லும் தலைப்பு, எளிய விளக்கம் பாடலாக..., சுருக்கமான கருத்துரை, ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பொருத்தமான படங்கள்... என அற்புதமாகத் திகழ்கிறது 'குறளறம்’. நூலை வாங்கிப் பயனடைவதுடன், பரிசளிக்கவும் செய்யலாம்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில பாடல்கள்தான் இங்கே இடம்பெற்றுள்ளன.


