பிரீமியம் ஸ்டோரி

முருகப் பெருமானின் படைவீடுகளில் ஒன்று பழமுதிர்ச்சோலை. மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கு அமைந்திருக்கும் அழகர் கோயிலில் இருந்து, மலைப் பாதையில் நடந்தே பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலை அடையலாம்; அல்லது, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் செல்லலாம்.

சுட்ட பழம்... சுடாத பழம்!

இங்கே முருகனைத் தரிசிப்பதோடு, கோயிலின் அருகில் இருக்கும் நாவல் மரத்தையும் தரிசித்து வருகிறார்கள் பக்தர்கள். ஒளவையாரிடம், ''சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?'' என்று கேட்டு, முருகன் அருளாடல் நடத்தியதும் அப்போது அவன் அமர்ந்திருந்ததும் இந்த நாவல் மரத்தில்தான் என்கிறார்கள். இதன் மற்றொரு சிறப்பம்சம், வருடத்தில் ஐப்பசி மாதத்தில் மட்டுமே இந்த மரத்தில் காய் காய்க்குமாம்!

-  லோ.இந்து,

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு